Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடைசி பஸ் பிடிக்க போற மாதிரி அவசரப்பட்டது எல்லாம்.. இதுக்குத்தானா? வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கூட்டணி எப்ப முடியும்? சீட் எப்போ ஒதுக்குவீங்க?" என்று கடந்த மாதம் வரை தி.மு.க-வை நச்சரித்து, டெல்லி வரை டென்ஷனை ஏற்றிய சத்தியமூர்த்தி பவன் இப்போதிருக்கும் நிலையைப் பார்த்தால், 'ஏன் இந்த அவசரம்... எதற்கு இந்த வேகம்?' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

தி.மு.க கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம், தொகுதி பங்கீடு முடிந்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டு, களத்தில் 'வாக்கு சேகரிப்பு' வேட்டையை ஆரம்பித்துவிட்டன. ஆனால், கைச் சின்னம் மட்டும் இன்னும் வேட்பாளர் யார் என்று தெரியாமல், கையை பிசைந்து கொண்டு நிற்கிறது.

tamil nadu assembly elections 2026 congress

திமுக கூட்டணியில் 28 சீட்டுகளை பெற்ற காங்கிரஸ் கட்சி, மனுத் தாக்கல் தொடங்கி விட்ட நிலையிலும் வேட்பாளர் பட்டியலை ரீலீஸ் செய்ய முடியவில்லை. தேசிய கட்சி என்பதால் அகில இந்திய தலைமையின் ஒப்புதல் அவசியம். அதன் பிறகே பட்டியல் ரீலீஸ் ஆகும்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: 1. பொன்னேரி (தனி) 2. திருப்பெரும்புதூர் (தனி) 3. சோளிங்கர் 4. உதகமண்டலம் 5. ஏராடு கிழக்கு 6. அரந்தாங்கி 7. கடலூர் 8. மயிலாடுதுறை 9. காரைக்குடி 10. சிவகாசி 11. திருவாடனை 12. திருவைகுண்டம் 13. நாங்குநேரி 14. குளச்சல் 15. விளவங்கோடு 16. கிள்ளியூர் 17. வேளச்சேரி 18. ஊத்தங்கரை (தனி) 19. துறையூர் (தனி) 20. கவுண்டம்பாளையம் 21. ஆத்தூர் (தனி) 22. பென்னாகரம் 23. சிங்காநல்லூர் 24. அம்பாசமுத்திரம் 25. கிருஷ்ணகிரி 26. உசிலம்பட்டி 27. சங்கரன்கோவில் 28. மேலூர்

வேட்பாளர் தேர்வில் குளறுபடி

பொதுவாக, காங்கிரசில் எப்போதுமே வேட்பாளர் தேர்வு இழுத்துக் கொண்டே இருப்பது வாடிக்கையானது தான். கட்சியின் முன்னாள் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள்,. எம்.பி. க்கள் ஆகியரோடு கடந்த 28-ந்தேதி ஜூம் மீட்டிங் நடத்தினார் கிறிஸ் சோடங்கர். அப்போது, பாமகவின் கௌரவ தலைவர் ஜி. கே. மணியின் மகன் தமிழ்க்குமரனை காங்கிரசில் இணைத்து அவரை பென்னாகரம் தொகுதி வேட்பாளராக நியமிக்க செல்வப் பெருந்தகை முடிவு செய்துள்ளதை ஜூம் மீட்டிங்கில் விளாசித் தள்ளியிருக்கிறார் எம்.பி. கார்த்தி சிதம்பரம்.

அவர் பேசும் போது, '' தமிழ்க்குமரன் என்ன சச்சின் டெண்டுல்கரா? உடனே கட்சியில் சேர்த்து சீட் கொடுப்பதற்கு? யாருங்க இந்த தமிழ்க்குமாரன்? காங்கிரசுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்? அவருக்கு எதற்கு சீட் ஒதுக்கணும். ஓ... இந்த நபருக்கு சீட் கொடுக்கத்தான் பென்னாகரத்தை திமுகவிடம் வாங்கப்பட்டதா? இதன் பின்னணியில் என்ன நடந்திருக்குன்னு எல்லாத்துக்கும் தெரியும் என்று மிக கடுமையாக விமர்சித்தார். இப்படி வேட்பாளர் தேர்வில் பல குளறுபடிகள் நடந்து வருகின்றன.

முரண்பாடுகளின் மூட்டை:

போன மாதம் வரை: "சீக்கிரம் முடிங்க... பிப்ரவரியிலேயே அறிவிக்கணும்" என அறிவாலயத்தின் கதவை தட்டியது இதே காங்கிரஸ் தான்.

இன்று: கூட்டணிக் கட்சிகள் எல்லாம் கோதாவில் இறங்கிவிட்ட நிலையிலும், 'பரிசீலனை', 'டெல்லி மேலிடம்', 'ஸ்கிரீனிங் கமிட்டி' என கோப்புகளைத் தூக்கிக் கொண்டு அலைகிறார்கள்.

இதுதான் அந்த 'கை' ராசியா?

அவசரம் அவசரமாக கூட்டணியை உறுதி செய்யக் காட்டிய வேகத்தில், ஒரு சதவீதத்தையாவது வேட்பாளர்களை முடிவு செய்வதில் காட்டியிருக்க வேண்டாமா? "ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்பார்கள். இங்கே காங்கிரஸின் உள்கட்சி கோஷ்டிப் பூசலோ, 'யார் அந்த 28 பேர்?' என தி.மு.க-வையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேர்தல் தேதி நெருங்கும் வேளையில், இன்னும் 'மறைமுக நேர்காணல்' நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் இவர்களின் வேகத்தைப் பார்த்தால், மற்ற கட்சிகள் பிரசாரத்தை முடிக்கும்போதுதான் காங்கிரஸ் வேட்பாளர்கள் 'ஆரத்தி' எடுக்கவே கிளம்புவார்கள் போலிருக்கிறது.

கூட்டணி எண்ணிக்கையை அறிவிக்கத் துடித்தவர்கள், வேட்பாளர் பெயரை அறிவிக்கத் தயங்குவது எதனால்? 'சீட்' வாங்குவதில் இருந்த வேகம், 'வேட்பாளரை' நிறுத்துவதில் காணாமல் போனதுதான் இப்போதைய அரசியல் நகைமுரண்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+