தமிழ்நாடு அரசியல்தான் தெரியல.. பொது அறிவுமா இல்லை பவர் ஸ்டார்? பவன் கல்யாணுக்கு 8 கேள்விகள்!
சென்னை: ஒவ்வொரு முறை சினிமாவிற்கு போகும் போதெல்லாம்.. ஒரு கார்டு கண்டிப்பாக திரையில் வரும். அது.. "Smoking is injurious to health".. "புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்".. இந்த வசனம் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அப்படித்தான் இனிமேல்.. "நடிகர்கள் அரசியலுக்கு வருவது சமூகத்திற்கு கேடு விளைவிக்கும்" என்று சொல்லும் அளவிற்கு ஒரு சம்பவத்தை செய்து இருக்கிறார் பவன் கல்யாண்.
ஆந்திர பிரதேச துணை முதல்வர் ஒரு முத்தை உதிர்த்து இருக்கிறார்.. தன்னுடைய மசாலாத்தனமான டோலிவுட் படம் என்று நினைத்துக்கொண்டு தமிழ்நாடு பற்றி அவர் பேசியதுதான் சிக்கலாகி உள்ளது. தற்போது இந்தி திணிப்பு பிரச்சனை உச்சத்தில் இருப்பது பலருக்கும் தெரிந்தது. மும்மொழி கொள்கை வழியாக இந்தியை திணிக்கும் முயற்சிக்கு கடுமையான எதிர்ப்பு வர தொடங்கி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்.. பவன் கல்யாண்.. ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார்.. அதன்படி தமிழர்கள் இந்தியை எதிர்க்கிறார்கள். ஆனால் தங்களின் கோலிவுட் படங்களை மட்டும் இந்தியில் மொழி பெயர்க்கிறார்கள். உங்களுக்கு இந்தி வேண்டாம்.. இந்தி மார்க்கெட் பணம் மட்டும் வேண்டுமா? என்று பவன் கல்யாண் கேட்டு உள்ளார். அவரின் இந்த பேச்சு ஏன் முட்டாள்தனமானது? ஏன் மிக மிக அரசியல் முதிர்ச்சியற்ற கருத்து என்பதற்கு பின்வரும் 10 காரணங்கள் உள்ளன.
பவன் கல்யாணின் முதிர்ச்சியற்ற பேச்சு
1. தமிழ் படத்தை இந்தியில் மொழிபெயர்ப்பதே.. நாம் சொல்லும் மொழி உரிமை. அதாவது நமது படத்தை எங்கள் மொழியிலோ பாருங்கள் என்று திணிக்காமல்.. உங்களுக்காக உங்கள் மொழியில் மொழி பெயர்ப்பதே மொழி உரிமை.. மொழி சமத்துவம்.. இந்த அடிப்படை புரியுதா பவர் ஸ்டார்?
2. சரி.. இந்தியை எதிர்ப்பதால் (இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்) இந்தி மார்க்கெட் வேண்டாம் என்றால்.. இந்தி மொழி பேசும் வடஇந்திய மக்கள் இந்தி இல்லாத இந்த தமிழ்நாட்டில் பிஸ்னஸ் செய்ய கூடாது தானே? உங்களின் லாஜிக்படி அப்படித்தானே சொல்ல வேண்டும்? அப்படி பவன் சொல்ல முடியுமா?
3. நீங்கள் சொல்வது சரி என்று வைத்தாலும்.. தமிழ் படங்களை திமுக அரசா.. தமிழக அரசா மொழி பெயர்த்து வெளியிடுகிறது?
4. சரி.. அப்படி என்றால் ஒரு படம் ஒரு பகுதியில் ரிலீஸ் ஆக அந்த படத்தை எடுத்தவர்களுக்கு அந்த மொழி தெரிய வேண்டும். அதாவது தமிழர்கள் இந்தியை எதிர்க்கிறார்கள். ஆனால் தங்களின் கோலிவுட் படங்களை மட்டும் இந்தியில் மொழி பெயர்க்கிறார்கள். அது தவறு தானே.. அப்படி என்றால் தெலுங்கு படம் பல தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகிறதே.. உங்கள் மாநிலத்தில் தமிழ் 3வது மொழியா? கேரளாவில் ரிலீஸ் ஆகிறதா ஆந்திரா, தெலுங்கானா கேரளாவை ஏற்றுக்கொண்டு விட்டதா?
5. நீங்களே ஒரு காலத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து உள்ளீர்கள்.. இப்போது அதை ஏற்றுக்கொள்ள என்ன காரணம்?
6. தமிழ்நாட்டு படங்கள் சீனாவில் பல ரிலீஸ் ஆகின்றன.. சமீபத்தில் மகாராஜா.. சீனாவில் பெரிய ஹிட். அப்படி என்றால்.. தமிழ்நாட்டில் சீனா 3வது மொழி என்று மாற்றிக்கொள்ளலாமா? 7ம் அறிவு பார்ட் 2 எடுக்கவும் வசதியாக இருக்கும் ?
7. ஆந்திர துணை முதல்வர் பவன் அம்மாநில விவகாரம் எதற்கும் கருத்து சொல்வதில்லை என்ற புகார் உள்ளது. அப்படி இருக்க.. தமிழக அரசியலில் அவருக்கு என்ன வேலை?
8. ஏற்கனவே சாம்பார் வுட் - கோல்டி வுட் என்று சண்டை போடும் ரசிக படைகளுக்கு இடையே உங்களின் பேச்சு மேலும் வெறுப்பை திணிக்கும் என்பது உங்களுக்கு தெரியாதா?
இப்படியே போனால் பவர் ஸ்டார் என்று உங்களை சொல்பவர்கள் பவர் போன ஸ்டார் என்று சொல்லும் காலம் வரலாம். எல்லாம் இருக்கட்டும்.. உங்களின் அரசியல்.. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் பலரின் மீது அச்சத்தை ஏற்படுத்துகிறது. உங்களை போல வெந்தும் வேகாத ஆப்பாயில் அரசியலை "வரப்போகிற" சினிமா அரசியல்வாதிகளும் செய்ய போகிறார்களோ என்ற அச்சம் எழுந்து உள்ளது!












Click it and Unblock the Notifications