சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீட்டுக்கு போங்க.. பேசி தீர்க்கலாம்.. ராமதாஸ் - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்து ஏன் என்ற விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ராமதாஸ் விஜயகாந்தை சந்தித்ததன் பின்னணி என்ன?- வீடியோ

    சென்னை: பாமக நிறுவனர் ராம்தாஸ் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்தது ஏன் என்ற விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

    தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு நடத்தி உள்ளார். சென்னையில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

    இவர்கள் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். கூட்டணி குறித்த முக்கிய விவரங்களை, அதிமுக தொகுதி பங்கீடு குறித்த விவரங்களை இவர்கள் ஆலோசித்து இருக்கிறார்கள்.

    அட என்ன ஒரு அதிசயம்.. விஜயகாந்தை வீட்டிற்கே சென்று சந்தித்த ராமதாஸ்! அட என்ன ஒரு அதிசயம்.. விஜயகாந்தை வீட்டிற்கே சென்று சந்தித்த ராமதாஸ்!

    தொகுதி பங்கீடு

    தொகுதி பங்கீடு

    அதிமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வருகிறது. இதற்காக நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரங்களுக்கு மேலாக இதற்காக ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆனால் அப்போது எந்த விதமான உடன்படிக்கையும் எட்டப்படவில்லை.

    நேற்றே ஆலோசனை

    நேற்றே ஆலோசனை

    நேற்றே இதற்காக அதிமுக கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த ஒரு உத்தேச பட்டியல் உருவாக்கபட்டது. ஆனால் தேமுதிக அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தேமுதிக கேட்ட சில தொகுதிகளை பாமக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பாமக பெற்ற கிருஷ்ணகிரி உள்ளிட்ட தொகுதிகளை தேமுதிக தங்களுக்கு வேண்டும் என்று நேற்று கேட்டுள்ளது. அதனால் நேற்று அறிவிப்பு வெளியாகவில்லை .

    பாமக நிறுவனர்

    பாமக நிறுவனர்

    இந்த நிலையில் இதுகுறித்து பேசுவதற்காகத்தான் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் என்று கூறுகிறார்கள். பிரச்சனையை இப்படியே விட்டால் பெரிதாகிவிடும். நேரடியாக சென்று விஜயகாந்தை சந்தித்தால்தான் சரியாக இருக்கும், பேசி தீர்க்க வேண்டும் என்று இருவரும் சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள்.

    சமாதானம்

    சமாதானம்

    இதில் ராமதாஸ் விஜயகாந்திடம் சமாதானம் பேசியதாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் இருவரும் இணைந்து பணியாற்றுவது முக்கியம் என்று சமாதானம் பேசி இருக்கிறார். தொகுதி பங்கீடு குறித்து இவர்கள் இருவரும் ஆலோசனை செய்து இருக்கிறார்கள். சுமார் 1 மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது.

    சுமூகமான தீர்வு

    சுமூகமான தீர்வு

    இந்த நிலையில் இவர்கள் பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு ஏற்பட்டுவிட்டது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இன்றும் நாளையும் அஷ்டமி, நவமி என்பதால் தொகுதி விவரங்களை அறிவிக்க கூடாது என்று அதிமுக முடிவெடுத்துள்ளது. சனிக்கிழமை அதிமுக தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Why PMK founder Ramadoss met DMDK chief Vijayakanth? Here is the real reason behind it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X