டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது ஏன் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
கொரோனா தொற்று குறைந்து வருவதால் டாஸ்மாக் கடை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் டாஸ்மாக் கடை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பதாக நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இருப்பினும் இந்த ஊரடங்கு நீட்டிப்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழக பாஜக மற்றும் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கடந்த முதல் அலையின் போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, டாஸ்மாக் கடை திறப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது ஆளும் கட்சியாக மாறியுள்ள நிலையில் எதற்காக டாஸ்மாக் கடையை திறக்கிறது என்ற கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் இன்று மேட்டூர் அணையை திறந்து வைத்த பேசிய முதல்வரிடம் டாஸ்மாக் கடைகள் திறக்க உத்தரவிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த முதல்வர் முதல்வர் மு.க ஸ்டாலின், கொரோனா குறைந்துள்ளதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் டாஸ்மாக் கடையை திறக்க உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த மு.க ஸ்டாலின்,வரும் 17ஆம் தேதி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications