திமுக Vs அதிமுக.. பாஜகவை "சேர்க்காத" திராவிட கட்சிகளால் சிதறும் தாமரை? என்னாச்சு
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தை கவனித்தீர்களா? திமுகவைவிட, பாஜக கதிகலங்கி போயிருக்கிறதாம்.. என்ன காரணம்?
லோக்சபா தேர்தலுக்கு முன்பேயே, பலம்வாய்ந்த திமுகவை, பக்காவாக காய்களை நகர்த்தி வீழ்த்த வேண்டும் என்பதில் பெரிதும் முனைப்பு காட்டியது தமிழக பாஜக.. முக்கியமாக பொதுவெளியில் "டேமேஜ்" செய்வதன் மூலம், திமுக மீதான நன்மதிப்பை குறைக்க முடியும் என்ற வியூகத்தையும், கடந்த 2 வருட காலமாகவே தமிழக பாஜக முன்னெடுத்து வருகிறது.

அதிமுக: இந்த புள்ளியிலிருந்துதான், அதிமுகவுடன் முரண்பட்டு நிற்க தொடங்கியது தமிழக பாஜக.. "நிஜமான எதிர்க்கட்சி தாங்கள்தான்" என்ற அஸ்திரத்தையும், திராவிட கட்சிகள் மீது வீச துவங்கியது.
ஆனால், பாஜகவின் ராஜதந்திரத்தை புரிந்துகொள்ளாத அதிமுகவோ, தங்களது உட்கட்சி பிரச்சனையில் சிக்கிக்கொண்டு, சற்று சுணங்கிப்போனது உண்மைதான்.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், இந்த விஷயத்தில் அண்ணாமலையிடம், அதிமுக கோட்டைவிட்டது என்றே சொல்லலாம். அதிமுக Vs திமுக என்ற கள அரசியலை முறியடித்து, திமுக Vs பாஜக என்ற கோணத்தை அழுத்தமாக முன்னெடுத்தது தமிழக பாஜக..
பாஜக பிளான்: ஆனால், இது தமிழக அரசியலுக்கு சாத்தியமாகாது என்றாலும், அப்படி ஒரு பிம்பத்தை கட்டமைக்க, கமலாலயம் எடுத்துக்கொண்ட முயற்சிகளும், உழைப்பும் அதிகம் என்றே சொல்லலாம். அதில் ஓரளவு தமிழக பாஜக வெற்றியையும் பெற்றுவிட்டது என்றே சொல்லலாம்..
அதற்கேற்ப, தமிழக மக்களிடம் ஸ்கோர் செய்யக்கூடிய எத்தனையோ வாய்ப்புகளை எடப்பாடி பழனிசாமி, நழுவவிட்டுவிட்டார்.. அவ்வளவு ஏன்? டிசம்பர் மாதம் பெய்த வெள்ளம், புயல் சமயத்தில், அதிமுகவைவிட பாஜகதான் ஸ்கோர் செய்தது..
தேர்தல் பிரச்சாரம்: இப்படிப்பட்ட சூழலில்தான், தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகி உள்ளது.. இந்த தேர்தலில் 5 சீட்டுகளில் வெற்றி பெற வேண்டும் என்பதுடன், இரட்டை இலக்கு வாக்கு சதவீதத்தை எட்டிவிட வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் வியூகமாக உள்ளது.
சுருக்கமாக சொல்லப்போனால், வட மாவட்டங்களில் பாமகவை வைத்து தங்களின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க செய்து, அதனை வைத்தே திராவிட கட்சிகளை "பணிய" வைக்கும் அரசியலையும் முன்னெடுக்கலாம் என்று பாஜக கணக்கு போட்டுள்ளதாக தெரிகிறது.
தவிடுபொடி: ஆனால், பாஜகவின் அத்தனை வியூகங்களும் தவிடுபொடியாகி கொண்டிருக்கிறது.. திமுகவை பொறுத்தவரை, கடந்த தேர்தலில் பாஜகவின் கண்ணை உருத்தியதே உதயநிதியின் செங்கல் பிரச்சாரம்தான்.. இந்த முறையும் அதே பாணியை உதயநிதி கையாண்டு வருவது பாஜகவுக்கு கடுப்பை தந்து கொண்டிருக்கிறது.
ஆனால், இந்த இடத்தில்தான் எடப்பாடி பழனிசாமி, ஸ்கோர் செய்ய துவங்கி உள்ளார்.. திமுகவுக்கு சரியான பதிலடிகளை உடனுக்குடன் தந்து வருகிறார்... உதயநிதியையும் நேரடியாகவே விமர்சித்து வருகிறார்..
உதயநிதி: செங்கல்லை தூக்கிய உதயநிதியை, "ஸ்க்ரிப்ட்" மாற்ற சொல்லி, திமுகவுக்கே ஷாக் தந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு உதயநிதி, "காஞ்சிபுரத்தில் நடந்த பிரச்சாரத்தில் நான் கல்லைக்காட்டுகிறேன் எடப்பாடி பல்லைக்காட்டுகிறார்" என்று மோடியுடன் எடப்பாடி பழனிசாமி எடுத்துக்கொண்ட போட்டோவை உதயநிதி காட்டினார். உடனே எடப்பாடி பழனிசாமி, "நீங்களும் பல்லைக்காட்டுகிறீர்கள்" என்று பதிலுக்கு போட்டோவை காண்பித்தார்.
இதற்கு உதயநிதி, சசிகலா காலில் விழும் எடப்பாடி பழனிசாமி போட்டோவை காட்டி, "இப்படி நாங்கள் விழுவதை காட்டினால் அரசியலை விட்டே விலகுகிறேன்" என்றுசவால் விடுத்தார்.
மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஜனநாயக வாய்ப்பாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் #INDIA கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தேடித் தரும் விதமாக விருதுநகர் மக்களவைத் தொகுதி திருமங்கலத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம்.
— Udhay (@Udhaystalin) March 23, 2024
விருதுநகரில் காங்கிரசின் 'கை' சின்னத்துக்கு வாக்களித்து பெருவாரியான… pic.twitter.com/VnQ0wuDEVE
சவால் அதிமுக: இந்த சவாலுக்கு எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம், உதயநிதியின் வீடியோவையே போட்டு காட்டி, மானம் இருக்கா? என்று வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்.
"ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்துவிட்டீர்கள் என்று சொன்னீங்க. எங்க ரத்து பண்ணியிருக்கீங்க.. வீடியோவை போட்டு காட்டுங்கப்பா" என்று உதயநிதி ஸ்டாலின் பேசிய பழைய வீடியோவை போட்டு காட்டினார் எடப்பாடி,
மானம் இருக்கா: "ஆகவே நாங்க கேட்கிறோம்.. உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் இருக்குதா?... நீங்க கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா?.. அப்பாவுக்கும் மகனுக்கும் சூடு சொரணை இருக்கிறதா? இப்படி நாட்டு மக்கள் கேட்கிறார்கள் ஸ்டாலின் அவர்களே.. பதில் சொல்லுங்க" என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
"நாங்கள் நினைத்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்க முடியும்.. ஆனால், திமுகவைப் போல பதவி வெறி பிடித்த கட்சி அண்ணா திமுக இல்லை" என்று ஒரே போடாக போட்டு, அதிர வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
உக்கிரமம்: இப்படியாக பாஜகவை உள்ளே நுழைய விடாமல், திமுக - அதிமுக என்ற இரு தரப்புமே உக்கிரமாக மோதிக்கொண்டுள்ளன... இது பாஜகவுக்கு சற்று உதறலை தர துவங்கியிருக்கிறதாம்..
தேர்தல் முடிவுகளில் முதலிடம் இல்லாவிட்டாலும், 2வது இடத்தை அதிமுக தக்க வைக்க வேண்டும், 2வது இடத்தை பாஜகவிடம் எக்காரணம் கொண்டும் இழந்துவிடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளாராம். எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பேச்சுக்களை கவனித்தால், அவரது தோரணையே மாறியுள்ளதையும் உணர முடிகிறது.
திமுகவைப் போல பதவி வெறி பிடித்த கட்சி அண்ணா திமுக இல்லை..
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) March 26, 2024
பிரச்சார பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்#வாக்களிப்பீர்_இரட்டைஇலை pic.twitter.com/DyukzDNzBA
மும்முனைப்போட்டி: மொத்தத்தில், மும்முனைப்போட்டி என்பது மெல்ல மறைந்து, இருமுனைப் போட்டியாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது.. தமிழகத்தின் "நிஜமான" எதிர்க்கட்சி அதிமுகதான் என்பதும் நிரூபணமாகி கொண்டிருக்கிறது. எவ்வளவுதான் முட்டி மோதினாலும், திராவிட கட்சிகளை தாண்டி, வேறு கட்சியும், தமிழகத்தில் லேசில் நுழைய முடியாது என்ற யதார்த்த உண்மையும் புலப்பட்டு கொண்டிருக்கிறது..
அதுமட்டுமல்ல, மதவாதமும், வெறுப்பு அரசியலும் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாத சூழலில் இந்த முறை வெற்றி யாருக்கு? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்..!!
கூட்டணி: அதேபோல, பாஜக அமைத்துள்ள கூட்டணி எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பை தரும் என்று தெரியவில்லை. காரணம், வன்னியர் வாக்குகளுக்கு பாமக, தேவேந்திர குல வேளாளர் வாக்குகளுக்கு தமமுக, முதலியார் வாக்குகளுக்கு புதிய நீதிக்கட்சி, யாதவர் வாக்குகளுக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், முக்குலதோர் வாக்குகளுக்கு டிடிவி தினகரன், ஓபிஎஸ், உடையார் வாக்குகளுக்கு இந்திய ஜனநாயக கட்சி என நாலாபக்கமும் கணக்கு போட்டே, கூட்டணியை பாஜக முன்னெடுத்தாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
சுருக்கமாக சொல்லப்போனால், மூத்த தலைவர் ஜிகே வாசன் தவிர மற்ற அத்தனை கட்சிகளும் ஜாதிக்கட்சிகளாகவே கூட்டணியில் இடம்பெற்றிருப்பது பலரையும் கவனிக்க செய்து வருகிறது..
மதவாதமும், வெறுப்பு அரசியலும் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாத சூழலில், இந்த முறை வெற்றி யாருக்கு? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications