Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயில்வான் ரங்கநாதன் கைதாகிறாரா.. "ஆபாசமும் அந்தரங்கமும்".. பெருகும் மலிவு ரசனைகள்.. யார் காரணம்?

பயில்வான் ரங்கநாதன் விரைவில் கைதாவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளுக்கு நாள் பயில்வான் ரங்கநாதன் மீது புகார்கள் குவிந்தும், வலுத்தும் வரும் நிலையில், அவர் கைதாவாரா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

சினிமா பத்திரிகையாளரும், பல படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன்.. இவர் இப்போதைக்கு எந்த பத்திரிகையிலும் வேலை பார்க்கவில்லை என்றே தெரிகிறது. அதேசமயம், பெரிதாக எந்த படத்திலும் நடித்து வரவில்லை.

ஆனால், கடந்த சில காலங்களாகவே பயில்வான் ரங்கநாதன் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அவர் அளிக்கும் ஒவ்வொரு பேட்டியும் சினிமா நடிகர் - நடிகைகள் சம்பந்தப்பட்டவையாகவே இருந்து வருகின்றன.

அந்தரங்கம்

அந்தரங்கம்

குறிப்பாக, அவர்களின் அந்தரங்க விஷயங்களை பகிரங்கப்படுத்தி வருகிறார்.. இவர் சொல்லும் கிசு கிசு தகவல்களை பெறுவதற்காக, ஏகப்பட்ட யூடியூப் சேனல்கள் போட்டி போட்டுக் கொண்ட இவரை பேட்டி எடுத்து வருகின்றன.. அதற்காக ஒரு கணிசமான தொகையை கொடுக்கவும் தயாராக இருக்கின்றன.. இப்படித்தான் கொஞ்ச காலம், ராதாரவியை சூழ்ந்து கொண்டிருந்தனர் யூடியூப் சேனல்கள்.. ராதாரவி ஒரு பேட்டி தந்தால் போதும், அதை வைத்து காசு பார்த்துவிடலாம் என்று, அவரை வட்டமடித்த யூடியூப் சேனல்கள் ஏராளம்..

சேனல்கள்

சேனல்கள்

அப்படித்தான் இன்று பயில்வான் ரங்கநாதனும் யூடியூப் சேனல்களுக்கு "படியளக்கும்" நபராக காட்சி தந்து வருகிறார். ராதாரவியும் சரி, பயில்வானும் சரி.. இவர்கள் இருவருமே, சமூக சீர்திருத்தவாதிகளும் இல்லை.. மக்களுக்காக போராடி சிறை சென்ற போராளிகளும் இல்லை.. இவர்கள் இத்தனை வீடியோ பேசி, அதன்மூலம் அடித்தட்டு ஏழை மக்களின் வயிறு நிரம்பியதும் இல்லை.. வாயை திறந்தாலே ஆபாசங்கள் கொப்பளித்து வருவதை தவிர வேறு எதுவும் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது..

ராதாரவி

ராதாரவி

ராதாரவியாவது அரசியல் என்ற ரூட்டில் செல்கிறார் என்று எடுத்துக் கொண்டாலும், அந்தரங்க விஷயத்தில் அவர் மூக்கை நுழைத்தது இல்லை.. ஆனால், பத்திரிகையாளர் என்ற முறையிலும் இல்லாமல், சீனியர் நடிகர் என்ற முறையிலும் இல்லாமல், வயதில் பெரியவர் என்ற முறையிலும் இல்லாமல், ஒருவரின் அந்தரங்க விஷயத்தை, அவர்களின் அனுமதி இல்லாமல் பொதுவெளியில் பேசிவருவது பலரையும் தொடர்ந்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது..

ரசனைகள்

ரசனைகள்

"நீ யார் இன்னொருத்தர் படுக்கையறையை எட்டிப்பார்க்க? நீ யார் அவர்களின் அந்தரங்கங்களை பொதுவெளியில் பேசுவதற்கு?" தயாரிப்பாளர் கே.ராஜன் போன்றோர் எச்சரித்திருந்த நிலையில், நியாயமான பதில் இதுவரை அவருக்கு கிடைக்கவில்லை.. இதற்கெல்லாம் ஒரே காரணம், மக்களின் ரசனைகள் மலிந்து கிடப்பதுதான்.. பயில்வான் போடும் வீடியோக்களை பலரும் ரசித்து பார்க்கிறார்கள்.. மற்றொரு பக்கம் பயில்வானையும் திட்டுகிறார்கள்.. ஆக, பயில்வானை இதுவரை ஊக்கப்படுத்துவது, மலிவு ரசனைவாதிகள்தான்..!

 பயில்வான் ரங்கநாதன்

பயில்வான் ரங்கநாதன்

"நடிகர், நடிகைகளை பற்றி நான் சொல்வதை கேட்பதற்காகவே 3 லட்சம் பேர் இருக்கிறார்கள்.. அதனால் தொடர்ந்து பேசுங்கள் என்று பொதுமக்கள் முதல் காவல் துறை அதிகாரிகள் வரை பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.. தமிழ் சினிமாவில் எம்ஜிஆரை தவிர யாரும் யோக்கியர் கிடையாது.. நான் யாரை பற்றியும் ஆபாசமாக பேசவில்லை. சட்டத்திற்கு உட்பட்டே பேசுகிறேன்" என்று பயில்வான் விளக்கம் தருகிறார்.. இன்று பாடகி சுசித்ரா கொந்தளித்துள்ளதுபோல், நடிகர், நடிகைகள் அன்றே கொந்தளிக்கவில்லை.. பயில்வானை கண்டிக்கவும் இல்லை.. இதற்கு என்ன காரணம்?

 ராஜன், திருமலை

ராஜன், திருமலை

இவருக்கெல்லாம் பதில் அளித்து, தேவையில்லாமல் அவரை வளர்த்துவிடக்கூடாது என்று பிரபலங்கள் நினைத்தார்களா? அல்லது "பயம்" தான் காரணமா? என்று தெரியவில்லை.. ஏற்கனவே இவர் மீது ராஜன் மற்றும் இயக்குநர் திருமலை ஆகியோர் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தாலும், தற்போது சுசித்ரா அளித்துள்ள புகார் காரணமாக பயில்வான் ரங்கநாதனுக்கு பிடி இறுகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன... சட்ட ரீதியாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது..

 கைதாகிறாரா பயில்வான்

கைதாகிறாரா பயில்வான்

ஒருவேளை பயில்வான் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.. "தனிமனித ஒழுக்கம்" என்பது எல்லா கால கட்டத்திலும், எல்லா நபர்களுக்கும் அவசியமானது.. அதை தவறும் பட்சத்தில், மக்களின் மதிப்பை நேரடியாகவே இழந்து விடுகிறார்கள்.. அது நடிகர் - நடிகைகளாக இருந்தாலும் சரி, பொதுவெளியில் பிறரை கேவலப்படுத்துவதாக நினைத்து கொண்டு, தன்னை தானே இழிவுபடுத்தி கொண்டிருக்கும் பயில்வானாக இருந்தாலும் சரி.!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+