இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
சென்னை: விஜய் யாருக்கு ஓட்டு போடுகிறார் என போட்டோ எடுத்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தல் மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்தல் முதல் கட்டமாகவே தமிழகம், புதுவையில் இன்று நடக்கிறது.

இந்த தேர்தலில் காலை முதல் ஆளாக வந்து வாக்களித்தார் நடிகர் அஜித். அவர் திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் அரைமணி நேரமாக காத்திருந்துவிட்டு வாக்களித்துவிட்டு சென்றார். அவரை போல் நிறைய பிரபலங்கள் காலையிலேயே வாக்குச் சாவடிக்கு குவிந்தனர்.
கோட் படப்பிடிப்புக்காக துபாய் சென்றிருந்த விஜய், அங்கு தொடர் மழையால் விமானங்கள் ரத்தாகியுள்ள நிலையில் அவர் தமிழக லோக்சபா தேர்தலுக்கு வாக்களிக்க வருவாரா என்ற சந்தேகம் இருந்தது. எனினும் இன்று துபாயில் நிலைமை சீரானதை அடுத்து அவர் சென்னைக்கு வந்துவிட்டார்.
இதையடுத்து அவர் நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடி மையத்திற்கு சென்றார். அங்கு அவரை புகைப்படம் , வீடியோ எடுக்க நிறைய மீடியா புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்தனர். அவர் யாரெல்லாம் வேட்பாளர்கள் என்பதை ஒரு பார்வை பார்த்தார். அவரை சுற்றி கேமரா இருந்ததால் அவர் வாக்கு பதிவு செய்யவிருந்த இயந்திரம் நன்றாகவே தெரிந்தது.

நல்ல வேளையாக அங்கு ஒரு போலீஸ்காரர் வந்து வீடியோ எடுத்த மீடியாக்காரர்களை அப்புறப்படுத்தினார். இல்லாவிட்டால் விஜய் யாருக்கு ஓட்டு போட்டார், எந்த வேட்பாளருக்கு நேராக சிகப்பு விளக்கு எரிந்தது என்பது உலகத்திற்கே தெரிந்திருக்கும். மீடியாக்காரர்களை அப்புறப்படுத்திய நிலையில் வேறு ஒரு போலீஸ்காரர் விஜய் வாக்களித்ததை தனது செல்போனில் பதிவு செய்தார்.
இது முற்றிலும் தவறு. ஒரு குடிமகன் யாருக்கு வாக்களித்தார் என்பதை யாருக்கும் சொல்ல தேவையில்லை. அது அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டது. யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை உறவினர்களிடம் கூட சொல்ல தயங்கும் அளவுக்கு பர்சனலான விஷயம்! ஆனால் விஜய் யாருக்கு வாக்களித்தார் என்பதை அந்த போலீஸ்காரர் எதற்காக படம் பிடித்தார் என தெரியவில்லை. அவர் ஒரு வேளை உளவுத் துறையை சேர்ந்தவராகவே இருந்தாலும் இது மிகவும் தவறான செயல். எனவே அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications