தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்க போவது நடுத்தர வயது வாக்காளர்களா? இளம் வாக்காளர்களா?
சென்னை: தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்க போவது நடுத்தர வயது வாக்காளர்களா? இளம் வாக்காளர்களா? என்ற கேள்வி இருக்கும்.. சந்தேகமே வேண்டாம்.. நடுத்தர வயது வாக்காளர்கள் தான் ஆட்சியாளர்களின் தலையெழுத்தை தீர்மானிக்க போகிறார்கள்.
லோக்சபா தேர்தல் அனேகமாக ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தின் தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக போகிறது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 10 வருடங்களில் எப்போதுமே ஒன்று ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி என மொத்தமாக மாற்றி வாக்களிப்பார்கள்.. அந்த வகையில் 2014ம் ஆண்டு தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக 37 தொகுதிகளில் வென்றது. அன்றைய எதிர்க்கட்சியான திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.. அதேநேரம் பாஜக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன.
அடுத்து 2019ல் நடந்த தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வென்றது.. அதிமுக கூட்டணி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.. எனவே தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரும்பாலும் ஒரு கட்சியை மொத்தமாக ஜெயிக்க வைக்கும் முறையை மக்கள் தேர்வு செய்கிறார்கள்.. அந்த வகையில் இப்போது யாரை மக்கள் தேர்வு செய்ய போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் 2024 தேர்தலை பொறுத்தவரை யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்க போவது நடுத்தர வயது வாக்காளர்களா? இளம் வாக்காளர்களா? என்ற கேள்வி இருக்கும்.. சந்தேகமே வேண்டாம்.. நடுத்தர வயது வாக்காளர்கள் தான் ஆட்சியாளர்களின் தலையெழுத்தை தீர்மானிக்க போகிறார்கள்.. ஏனெனில் அந்த வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் தற்போது 6 கோடியே 18 லட்சத்து 90,348 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில், 3 கோடியே 3 லட்சத்து 96,330 ஆண் வாக்காளர்கள், 3 கோடியே 14 லட்சத்து 85,724 பெண் வாக்காளர்கள், 8,294 மூன்றாம்பாலினத்தவர் ஆவார். இதில், ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 89,394 பேர் அதிகம் ஆகும்.
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர் உள்ள தொகுதி: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6 லட்சத்து 60,419 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர் உள்ள இரண்டாவது தொகுதி: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 4 லட்சத்து 62,612 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலேயே குறைந்த வாக்காளர் உள்ள தொகுதி: குறைந்த வாக்காளர்களை கொண்டதொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் 1 லட்சத்து 72,410 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலேயே குறைந்த வாக்காளர் உள்ள 2வது தொகுதி: கீழ்வேளூர் தொகுதிக்கு அடுத்ததாக சென்னை துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 72,624 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 18 முதல் 19 வயது வரை உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 9,18, 313 ஆகும். 20 முதல் 29 வயது வரை உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 1,08,26,070 ஆகவும், 30 முதல் 39 வயது வரை உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 1,28,47,489 ஆகவும் உள்ளது. 40 முதல் 49 வயது வரை உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 137,66,566 ஆகவும், 50 முதல் 59 வயது வரை உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 1,10,34,639 ஆகவும் இருக்கிறது.
60 முதல் 69 வயது வரை உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 71,60,092 ஆகவும். 70 முதல் 79 வயது வரை உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 38,70,910 ஆகவும்,, 80 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 1251931 ஆகவும் உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் 40 முதல் 49 வயது வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். ஒட்டுமொத்தமாக பார்த்தால் 30 முதல் 50 வயது உள்ள வாக்காளர்களே ஆட்சியை தீர்மானிக்க போகிறார்கள்..
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications