பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் இயங்குமா? நடப்பது என்ன? - முழு பின்னணி
சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதால்.. பொங்கலுக்கு களமிறக்கப்படும் சிறப்பு பேருந்துகள் மற்றும் மற்ற பேருந்துகள் சரியாக இயக்கப்படும் என்று தகவல் வந்துள்ளது. அதாவது பேருந்து இயக்கத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது .
தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்ததால், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டது.

போராட்டம்: 9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடந்து வந்தது. வேலை நிறுத்த போராட்டத்தை அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தி வருகிறது. அதிமுக ஆதரவு இயக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு AITUC, CITU உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு வழங்க ஒருமனதாக முடிவு செய்துள்ளன. ஏழு கோரிக்கைகளை முன்னிறுத்தி, 7 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கி இருந்த நிலையில்தான் ஸ்டிரைக் நடத்தி வருகின்றன.
தமிழ்நாட்டில் நடைபெறும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கம் பங்கேற்காது என முதன்மை பொதுச்செயலாளர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இது திமுக ஆதரவு தொழிற்சங்கம் ஆகும்.
இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் பெரும்பாலான இடங்களில் 80 சதவிகிதம் வரை பேருந்துகள் இயங்குகின்றன.
இரண்டாவதாக, தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் விவரத்தை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது போக்குவரத்துத்துறை. சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கத்தை விட கூடுதலாக 103% இயக்கம். மாநிலம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துகழக பேருந்துகள் 100% இயக்கப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வாபஸ்: இந்த நிலையில் தற்போது அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் வாங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 19ஆம் தேதி வரை போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஊழியர்கள் அறிவித்து உள்ளனர். நாளை முதல் ஊழியர்கள் பணிக்கு செல்வார்கள் என தொழிற்சங்கம் உறுதி அளித்துள்ளது .
பொங்கல் குழப்பம்: இதனால் பொங்கல் சிறப்பு பேருந்துகள் பிரச்சனை இன்றி இயங்கும். பொங்கல் அன்று கூடுதலாக 3-5 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும். இதை செயல்படுத்த கிட்டத்தட்ட 8 ஆயிரம் ஊழியர்கள் வரை தேவை. தற்போது ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டதால் இதில் பிரச்சனை இல்லை.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்: பொங்கலுக்கு முன் 12-01-24 முதல் 14-01-24 2 (சிறப்பு பேருந்துகள் இயக்கம்) செய்யப்படும்.
பொங்கல் பண்டிக்கைக்காக தமிழ்நாடு முழுவதும் 19,484 பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு 17,589 பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் பொங்கலுக்காக கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்.
பொங்கலுக்கு பின் 16-01-24 முதல் 18-01-24 வரை (சிறப்பு பேருந்துகள் இயக்கம்) இயக்கப்படும்.
ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
பொங்கலுக்கு பிறகு வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரைதான் இயக்கப்படும்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 5 முன்பதிவு மையங்கள் செயல்படும். மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் பொங்கலுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
சிக்கல் வருமா?: இன்று பேருந்துகள் வழக்கம் போல இயங்கினாலும் பொங்கல் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்படலாம்.
போராட்டம் ஏன்: சிறந்த ஊதியம் (15வது ஊதிய திருத்த ஒப்பந்தம்), காலியாக உள்ள பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புதல், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாநில அரசின் நிதியுதவி, ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்குதல் உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன. இதை முன் வைத்து தொடர் போராட்டங்களை அவர்கள் அறிவித்தனர்.
தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு இடையே சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதில் அதிகாரிகள்) மீண்டும் ஒருமுறை அவகாசம் கோரினர். அவர்களின் பதிலில் நாங்கள் திருப்தி அடையவில்லை, என்று சிஐடியு தலைவர் ஏ சௌந்தரராஜன் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பொங்கல் பயணம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பஸ்களில் ஏற்கனவே முன்பதிவு துவங்கி உள்ளது. பேருந்து முன் பதிவு இணையதளம் வழியாகவும், முகாம் மூலமாகவும் துவங்கி உள்ளது. பொதுவாக நீண்ட விடுமுறை வரும் போதெல்லாம் தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் விடப்படுவது வழக்கம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications