அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கேட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது: சென்னை நீதிமன்றம்
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கை முன்கூட்டி விசாரிக்க வேண்டுமென்ற மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரிய வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நாளைக்கு தள்ளி வைத்துள்ளது. அதிமுக கட்சி பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டுமென இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிகு எழுதிய கடிதத்தை ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டியை சேர்ந்த எஸ்.சூரியமூர்த்தி என்பவர் அதிமுக உறுப்பினர் என கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், 2017இல் கட்சியின் விதிகளுக்கு முரணாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அதை ஏற்றுக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு உரிமையில்லை என குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்று எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

ஓபிஎஸ், இபிஎஸ் மனு தாக்கல்
இந்த மனு நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்தபோது சூரியமூர்த்தி மனுவை நிராகரிக்கக் கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாள எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து நிராகரிப்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

முன்கூட்டி விசாரிக்க கோரிக்கை
இதையடுத்து வழக்கு ஜூலை 22ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டதால், வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என சூரியமூர்த்தி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு நடைபெற இருப்பதால், தன்னுடைய வழக்கை விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வழக்கை வரும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகலில் பொதுக்குழுவிற்கு தடை கோரிய வழக்கு விசாரணை நடைபெற்றது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம்
இந்நிலையில், வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என சூரியமூர்த்தி தரப்பில் தாக்கல் செய்ய மனு, நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்கக் கோரி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளதால், அந்த கூட்டத்தை எதிர்த்த மனு காலாவதியாகிவிட்டதாக கருத வேண்டுமென வாதிடப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு வாதம்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும், ஆனால் பொதுக்குழுவை தள்ளிவைக்க ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தானே கடிதம் எழுதியுள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அதிமுக உறுப்பினர் இல்லை
அதிமுக கட்சி தரப்பில் விஜய பிரசாந்த் ஆஜராகி, மனுதாரர் சூரியமூர்த்தி கட்சி உறுப்பினரே இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, தான் உறுப்பினர் இல்லை என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என வாதிடப்பட்டது.
Recommended Video

பதில் தர நீதிபதி உத்தரவு
அப்போது பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமென்ற மனு குறித்து அனைத்து மனுதாரர்களும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி பிரியா, விசாரணையை நாளை தள்ளிவைத்துள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications