ஆளுநரை கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்தியுள்ளார்கள்.. வானதி சீனிவாசன் ஆவேசம்
சென்னை: நீங்கள் நினைப்பதை, சொல்வதை செய்யவில்லை என்றால் கவர்னரை அசிங்கப்படுத்துவீர்களா என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆவேசமாக பேசினார்.
2023-ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கியது. வழக்கமாக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அதேபோல் நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடரும் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.
அப்போது, ஆளுநர் ஆர் என் ரவி சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்காமல் முழுமையாக கடந்து சென்றார். இதற்கு சட்டசபையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார். இதையடுத்து ஆளுநர் படித்த உரை, வாக்கெடுப்பு மூலம் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. மாறாக அரசு தயாரித்த மொத்த உரையும் அவை குறிப்பில் இடம்பெற்றது. அந்த உரை அவை குறிப்பில் சேர்க்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்த உரையை நிகழ்த்தும் போது ஆளுநர் ஆர். என் ரவி பாதியிலேயே அவையில் இருந்து வெளியேறினார்.

நீங்கள் நினைப்பதைத்தான் பேசனுமா
இதனை தொடர்ந்து சட்டசபையை விட்டு வெளியே வந்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீங்கள் நினைக்கிறதை அல்லது சொல்வதை கவர்னர் செய்யவில்லை என்பதற்காக அவரை கூப்பிட்டு வைத்து தமிழக சட்டப்பேரவையில் அசிங்கப்படுத்துவீங்களா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக வானதி சீனிவாசன் கூறியதாவது:- ஆளுநர் எந்த உரைகளை தவிர்த்து பேசினாரோ அது குறித்து ஆளுநர் அலுவலகத்தில் தான் மாநில அரசு பேச வேண்டும். ஆனால் ஒரு மாநில அரசு ஆளுநரின் உரையைக்கூட சரியாக அவரிடம் பெசி ஒப்புதல் வாங்காமல் அச்சிட்டு வருகிறீர்கள் என்றால் நீங்கள் அதிகாரத்தை கவர்னர் மீது காட்ட வேண்டும் என்று நினைக்கிறீங்களா... இல்லை நீங்கள் நினைப்பதைத்தான் கவர்னர் பேச வேண்டும் என்று நினைக்கிறீங்களா. என்று பேசினார்.

தனிப்பட்ட தாக்குதலாகும்
மேலும் அவர் கூறுகையில், "இந்த விஷயங்களை பொறுத்தவரை மாநில அரசு அவர்களுடைய உறவு பேணாத நிலைமையை காட்டுகிறது. இது ஆளுநர் மீதான தனிப்பட்ட தாக்குதலாகும். ஆளுநர் பேசி முடித்த பிறகு முதல்வர் அவருக்கான ஜஸ்டிபிகேஷனை சொல்கிறார். ஆனால் இன்றைக்கு இருக்கும் நிலைமை என்ன? ஆளும் கட்சிக்கோ அரசாங்கத்திற்கோ செய்தி தொடர்பாளர் உண்டு. இங்க இருக்கும் அமைச்சர்கள் பேசுவாங்க.

வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்
ஆனால் கவர்னர் அலுவலகம் வழக்கமாக எந்த ஒரு விஷயங்களையும் வெளியில் சொல்லும் வாய்ப்பு கிடையாது. நீட் விஷயத்தை பொறுத்தவரைக்கும் தேவையான தகவல்களை கொடுத்து இருக்கிறோம் என்று இந்த மாநில அரசு சொல்கிறது. வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஆளுநர் என்ன விளக்கத்தை கேட்டார்.. அரசு என்ன விளக்கத்தை கொடுத்தது என்று ஏன் மக்கள் முன்னாள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

கூப்பிட்டு அசிங்கப்படுத்துவீங்களா?
நீங்கள் நினைக்கிறதை, சொல்வதை கவர்னர் செய்யவில்லை என்பதற்காக அவரை கூப்பிட்டு வைத்து தமிழக சட்டப்பேரவையில் அசிங்கபடுத்துவீங்களா? இதுதான் உங்களின் ஜனநாயக போக்கா? இப்படித்தான் ஒரு கட்சி நடந்து கொள்ள வேண்டுமா? மிக மிக தவறான முன்னுதாரணத்தை ஆளும் கட்சியும் முதல்வரும் இங்கே நடத்தி கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடைய தயவினால் எம்.எல்.ஏ ஆனவர்கள் இவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுகிறார்கள். இதுதான் இங்கே இன்று நடந்துள்ளது" என்றார்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications