சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

24 மணி நேரம் கூட ஆகல.. அடுத்தடுத்து வந்த கெட்ட செய்தி.. நடுங்கி போன எடப்பாடி டீம்.. என்ன நடக்குது?

எடப்பாடி இக்கட்டான அரசியல் சூழ்நிலையில் எந்த முடிவை எடுக்க போகிறார் என்பதை பொறுத்தே அவரின் அரசியல் எதிர்காலம் உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து கெட்ட செய்திகளாக வந்து கொண்டு இருக்கின்றன. இதை எடப்பாடி பழனிசாமி தரப்பு எப்படி சமாளிக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் தமிழ்நாடு அரசியலில் எதிர்பார்க்காத சூட்டை கிளப்பி விட்டுள்ளது. மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுக உருவாக வேண்டும் என்று குரல்கள் கேட்க தொடங்கி உள்ளன. ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமியின் உட்கட்சி மோதல் இந்த தேர்தலால் உச்சம் தொட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளராக கே. எஸ் தென்னரசு சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். அதே நாளில் அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அவர்கள் தரப்பு களமிறக்கி உள்ளது.

ஓ இதுக்குத்தானா? பாஜக பேசிய டீலிங்.. எடப்பாடி டீம் வேட்பாளர் வேட்புமனு தாக்கலை தள்ளிப்போட்டது ஏன்? ஓ இதுக்குத்தானா? பாஜக பேசிய டீலிங்.. எடப்பாடி டீம் வேட்பாளர் வேட்புமனு தாக்கலை தள்ளிப்போட்டது ஏன்?

சின்னம் முடங்கும்

சின்னம் முடங்கும்

இதனால் இரட்டை இலை முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்தே உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, அதிமுக பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் இன்று இடைக்கால உத்தரவு வரும் நிலையில்தான் கடந்த 24 மணி நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து கெட்ட செய்திகளாக வந்து கொண்டு இருக்கின்றன. இதை எடப்பாடி பழனிசாமி தரப்பு எப்படி சமாளிக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையம் பதில்

தேர்தல் ஆணையம் பதில்

கெட்ட செய்தி 1 - எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் செய்துள்ள பதிலில், அதிமுக சார்பாக ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. இந்த பொதுக்குழு நடந்த விதத்தை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. எடப்பாடியை இன்னும் நாங்கள் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்று தேர்தல் நடத்தும் அலுவலர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அளித்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது. அதாவது அதிமுகவில் இன்னும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டுமே இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

பெரிய சிக்கல்

பெரிய சிக்கல்

இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு தனது தரப்பு வேட்பளாரை களமிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு அவர் இடைக்கால பொதுச்செயலாளர் என்று கூறி எடுக்கும் நடவடிக்கைகளும் பவர் இல்லாமல் போய் உள்ளது. எடப்பாடிதான் ஒற்றை தலைமை என்று இத்தனை காலம் வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தும் பொருளற்றதாகி உள்ளது. இரண்டாவது கெட்ட செய்தி - தற்போது பாஜகவும் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கி உள்ளது. அதிமுகவில் பிரிந்த தலைவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று பாஜக கூறி உள்ளது.

பாஜக நிலைப்பாடு

பாஜக நிலைப்பாடு

பாஜக தலைவர் அண்ணாமலை இன்று எடப்பாடியை மற்றும் ஓ பன்னீர்செல்வத்தை சென்று சந்தித்து உள்ளார். எடப்பாடி - ஓபிஎஸ் ஒன்று சேர வேண்டும் என்று இருவரிடமும் பாஜக தரப்பு கேட்டு இருக்கிறது. எடப்பாடி - ஓபிஎஸ் ஒன்று சேர வேண்டும் என்று இருவரிடமும் பாஜக தரப்பு கேட்டு இருக்கிறது. இருவரும் ஒன்றாக இருந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று இந்த சந்திப்பில் பேசி உள்ளனர். எடப்பாடி ஒற்றை தலைமைதான் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்திற்கு இடமே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக கூறியும் வருகிறார். இந்த நிலையில்தான் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று பாஜக அவரிடம் போய் பேசி உள்ளது.

எல்லோரும் சொல்வது ஒன்றுதான்

எல்லோரும் சொல்வது ஒன்றுதான்

தேர்தல் ஆணையத்தின் பதில், பாஜகவின் நிலைப்பாடு எல்லாம் எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளது. அனைத்து விஷயங்களும் கடந்த 24 மணி நேரத்திற்கு உள்ளாக நடந்து உள்ளது. இதையடுத்தே எடப்பாடி தரப்பு வேட்பாளர் கே. எஸ் தென்னரசும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில், வேட்பு மனு தாக்கலை பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளார். எடப்பாடி இப்போது பொதுக்குழு வழக்கில் வென்று இரட்டை இலையை பெற வேண்டும், அல்லது சின்னம் இல்லாமல் போட்டியிட வேண்டும், இல்லை என்றால் பாஜகவின் பேச்சை கேட்டு ஓ பன்னீர்செல்வத்துடன் இணைய வேண்டும். எடப்பாடி இதில் எந்த முடிவை எடுக்க போகிறார் என்பதை பொறுத்தே அவரின் அரசியல் எதிர்காலம் உள்ளது.

English summary
Within 24 hours Edappadi Palanisamy team getting negative news one by on ahead of Erode East by-election?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X