Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா.. மலைக்க வைக்கும் தமிழக காடுகள் - முதலமைச்சர் ஸ்டாலின் 920 கோடி மாஸ்டர் ப்ளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருஅரசுக்கு நாட்டு நலன் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் காட்டுநலன். அதை உணர்ந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த ஆட்சியில் காடுகளைக் காப்பாற்றுவதற்காக பல்வேறு அறிவிப்புகள் கடந்த ஒராண்டுக் காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தேவாங்குகளுக்கு என்று தனி சரணாலயம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து மேட்டூர் நீர்ப்பரப்பு பகுதிகளை உள்ளடக்கிய தென் காவிரி வன உயிரின சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத்தலமாக மதுரை அரிட்டாபட்டியை சமீபத்தில் தான் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

 920 கோடி செலவில் பல்லுயிர்பாதுகாப்பு:

920 கோடி செலவில் பல்லுயிர்பாதுகாப்பு:

ஆக, ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தது முதல் நீர் நிலைகளில் தொடங்கி, மலைத் தொடர்களைக் காப்பது வரை மிகத் தீவிரமாக இயக்கி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலினே, "காடுகள் இன்றி நீர் வளம் சிறக்காது. நீர்வளம் இன்றி வேளாண்மை வளமாகாது. எனவே, வளமான எதிர்காலத்திற்குக் காடுகள் அவசியம். காடுகள் வளம் பெற வனஉயிரினங்கள் அவசியம்" என்று கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மாநில வன உயிரின வாரிய கூட்டத்தில் எடுத்துக் கூறினார். இந்த வாரியத்திற்காக ஸ்டாலின் தலைமையில் 28 உறுப்பினர்களை அரசு நியமித்துள்ளது.

இந்த உறுப்பினர்கள், அரசுக்கு வன உயிரின பாதுகாப்பு தொடர்பாகக் கொள்கைகள் வகுக்கவும் வனப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள், பழங்குடியினருடன் இணைந்து வன உயிரினங்களைப் பாதுகாப்பது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை கால நிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டம் 920 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது கூடுதல் தகவல்.

 23.69% இருந்து 33% ஆக உயர்த்த லட்சியம்:

23.69% இருந்து 33% ஆக உயர்த்த லட்சியம்:

தமிழ்நாட்டில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதி ஏறக்குறைய 23.69% ஆக உள்ளது. அதை 33% ஆக உயர்த்துவதே அரசின் லட்சியம் என்றும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டைப்பற்றி இதைவிட இன்னொரு குட்நியூஸ் இருக்கிறது. இந்திய அளவில் அதிகமான மரவகைகள் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் காட்டுவளத்தில் தமிழகம் 9வது இடத்தில் இருக்கிறது.

ஆக, வனவளத்தைப் பொறுத்தளவில் தமிழ்நாட்டிற்கு நல்ல ரேட்டிங் இருக்கிறது. இந்த வனங்களில் 1559 வகையான அரிய மருத்துவக் குணங்கொண்ட மூலிகை தாவரங்கள் உள்ளன என்கிறது புள்ளி விவரம். அதில் நம் நிலத்திற்கே உரிய 533 வகையான மூலிகைகள் இருக்கின்றன. இதில்அழிவின் விளிம்பிலுள்ளவை என்று 230 வகை தாவரங்களை இனம் கண்டுள்ளனர். இதுபோன்றே அழிவின் விளிம்பில் 140 உயிரினங்கள் இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் 331 வகையான நம் நிலத்திற்கே உரிய பறவைகள், ஊர்வன, பாலூட்டிகள் என்று ஆக மொத்தமாக 818 உயிரினங்கள்உள்ளன. இவற்றைக் குறைந்து விடாமல் காப்பாற்றுவதில்தான் வருங்கால வளமான வாழ்க்கை அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த விவரங்களை வைத்துப்பார்த்தால் தமிழ்நாடு 'உயிர்ப்பன்மை'யில் நல்ல தரவரிசையில் இருக்கிறது என நம்பிக்கைக் கொள்ளலாம்.

இந்த விவரங்களைக் கொண்டு மட்டும் வனத்தைச் செழிப்பாக்கிவிட முடியாது. அதை நிர்வாகம் செய்ய ஒரு சரியான அரண் அமைக்கவேண்டும். அப்போதுதான் இவை சமூக விரோதசக்திகளால் சூறையாடப்படாமல் காப்பாற்றப்படும். அதனடிப்படையில் பார்த்தால் 152 இந்திய வனப்பணி அதிகாரிகளும் 109 மாநில வனப்பணியாளர்களுமாகச் சேர்ந்து கூடவே 9578 உதவி பணியாளர்கள் காட்டைக்காப்பாற்ற களத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் மிகமுக்கியமான புலிகள் சரணாலயம்:

தமிழ்நாட்டின் மிகமுக்கியமான புலிகள் சரணாலயம்:

இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டும் வனவளம் என்பது பலவகை சரணாலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. புலிகள் காப்பகங்கள், வனஉயிரின சரணாலயங்கள், பறவை சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், உயிர்க்கோளகாப்பகங்கள், யானைகள் காப்பகங்கள் எனப் பல நிலைகளில் வனமேம்பாடு செயல்பட்டு வருகின்றன. இதில் புலிகள் காப்பகங்கள் எனப் பார்த்தால் களக்காடு முண்டாந்துறையில் அமைந்துள்ளது. இதில் 8 புலிகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 20 புலிகள்உள்ளன.

முதுமலை காப்பகத்தில் 103 புலிகளும் சத்தியமங்கலத்தில் 83 புலிகளும் திருவில்லிப்புத்தூர் மேகமலை காப்பகத்தில் 15 புலிகளும் இருப்பதாகக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன. ஆக மொத்தம் புலிகளுக்கு என்று தமிழ்நாட்டில் 5 காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது இந்திய அளவில் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன.

காட்டின் கோட்பாட்டின் படி புலிகளைக் காப்பாற்றினால் தான் காடு காப்பாற்றப்படும். அதாவது ஒரு புலி உள்ள காடு பசுமையாக இருக்கும். மான்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விடாமல் காக்கும். மான்கள் அதிகமானால் வனத்தில் உள்ள புல் வகைகள் அதிக அளவில் அழிக்கப்படும். புற்கள் அழிந்தால் மலையில் நீர்சேமிப்பு பாதிக்கப்படும். ஆக, புலி என்பது முழுக்காட்டின் பல்லூரியிர் சுழற்சியையும் காக்க உதவி செய்கிறது. அதைத்தான் நாம் தொடக்கத்திலேயே முதலமைச்சர் ஸ்டாலின் உரையின் மூலமாகக் குறிப்பிட்டோம்.

தமிழ்நாட்டில் 17 வன உயிரின சரணாலயங்கள்:

தமிழ்நாட்டில் 17 வன உயிரின சரணாலயங்கள்:

அடுத்து வன உயிரின சரணாலயங்கள் எனப்பார்த்தால் ஆக மொத்தம் தமிழ்நாட்டில் 17 சரணாலயங்கள்உள்ளன. முதுமலை வன உயிரின சரணாலயம், இந்திராகாந்தி வனஉயிரினசரணாலயம், முண்டாந்துறை, களக்காடு, திருவல்லிபுத்தூர், கோடியக்கரை, வல்லநாடுவெளிர்மான்சரணாலயம், கன்னியாகுமரிவனஉயிரினசரணாலயம், சத்தியமங்கலம், மேகமலை, கோடியக்கரை, கொடைக்கானல், கங்கைக்கொண்டான்,வடகாவிரி, நெல்லை, தேவாங்குவனஉயிரினசரணாலயம், தென்காவிரிவனஉயிரின சரணாலயம் எனத்தமிழ்நாட்டைச் சுற்றி மிகப்பசுமையான சரணாலயங்கள் இயக்கிவருகின்றன.

இதைப் போலவே பறவைகள் சரணாலயம் எனப்பார்த்தால் தமிழ்நாடு முழுவதும் 17 உள்ளன. இதில் பலரும் அறிந்தது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்தான். ஆனால் கரிக்கிளி பறவைகள் சரணாலயம் அதிகம் அறியப்படாத பகுதி.இவை தவிரப் பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயம், வேட்டக்குடி, காஞ்சிரங்குளம், சித்திரங்குடி, உதயமார்த்தாண்டபுரம், வடூவூர், கூத்தங்குளம்- காடங்குளம், கரைவெட்டி, வெள்ளேடு, மேலச்செல்வனூர்- கீழச்செல்வனூர், தீர்த்தங்கல், சக்கரக்கோட்டைகுளம், ஒசுடுஏரி, கழுவேலிகாயல் பறவைகள் சரணாலயம், நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயம்எ னப்பெரியபட்டியல்நீள்கிறது.

வேடந்தாங்கல் வந்த 35000 பறவைகள்:

வேடந்தாங்கல் வந்த 35000 பறவைகள்:

வேடந்தாங்கலில் மட்டும் சைபீரியாவிலிருந்து அரியவகைப் பறவைகளும் அலபாமா ஊசியிலைக் காடுகளில் இருந்து இணையைத் தேடி சில பறவைகளும் இங்கு வருவதாகக் கூறப்படுகிறது. 2014 இல் மட்டும் 35,000 பறவைகளுக்கு மேல் இங்கு வந்துசென்றுள்ளன. அதோடு 1,45,212 மக்கள் வந்து பறவைகளைக் கண்டு சென்றுள்ளனர் என்கிறது ஒரு டேட்டா. கூந்தன்குளத்தில் மட்டும் 43 இனத்தைச் சேர்ந்த பறவைகள் வருகின்றன. ஆண்டுதோறும் திசம்பர்த் திங்களில் 10,000க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வலசை வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை 5 தேசிய பூங்காக்கள் இருக்கின்றன.

இதில் முதுமலை தேசிய பூங்காபட்டியலில் உள்ளது. பொள்ளாச்சியில் இந்திராகாந்தி தேசிய பூங்கா இயங்கி வருகிறது. சென்னை கிண்டியிலும் முகூர்த்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் வாழ் தேசிய பூங்கா எனப்பட்டியல் படுத்தப்பட்டுள்ளது. இதில் மன்னார் வளைகுடா 21 சிறிய தீவுகளைக் கொண்டுள்ளது. கடல்பாலூட்டி இனங்களும் இங்கு உள்ளன. முகூர்த்திக்கு உரித்தான விலங்கு வரையாடு. இப்பூங்கா முன்னர் வரையாட்டின் ஆங்கிலப் பெயரான நீலகிரிதார் தேசியப்பூங்கா என அறியப்பட்டது. இந்திராகாந்தி தேசிய பூங்கா யுனெஸ்கோவினால் மேற்குத்தொடர்ச்சிமலை உலக பாரம்பரியக்களமாக அறிவிப்பதற்கான ஆய்வில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடுமுழுவதும் 260 கோடிநாற்றுகள்:

தமிழ்நாடுமுழுவதும் 260 கோடிநாற்றுகள்:

பறவைகள், புலிகளுக்குத் தமிழகம் எப்படிச் சிறந்த வாழ் நிலமாக விளங்குகிறதோ அதேபோல், யானைகளுக்கும் சிறந்த வாழ்விடமாக விளங்கிவருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 5 யானை காப்பகங்கள் உள்ளன. நீலகிரி, நீலாம்பூர், பெரியார் யானைகள் காப்பகம், ஆனை மலை பரம்பிக்குளம் யானைகள் காப்பகம், அகத்தியர் மலை யானைகள் காப்பகம் ஆகியவை பட்டியலில்அடங்கும். இதில்அகத்தியர் மலை யானைகள் காப்பகம் ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்றதும் அறிவிக்கப்பட்ட காப்பகமாகும்.

2017ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அகத்தியர் மலை யானைகள் காப்பகத்தில் மட்டும் 2,761 யானைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அவரது ட்விட்டர் பதிவு ஒன்றில் இக்காப்பகம் குறித்து அளித்துள்ள த கவலின்படி 'இம்மலையானது 1,197 சதுர கி.மீ பரப்பளவு விரிந்து பரந்துள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புள்ளி விவரங்களைக் கடந்து 260 கோடி நாற்றுகளைத் தமிழ்நாடு முழுவதும் 10 ஆண்டுகளில் நட தமிழ்நாடு அரசால் இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2.8 கோடிநாற்றுகள் 2022 முதல் 23 வரை நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. இவைதவிர 360 நர்சரிகள்இயங்கிவருகின்றன. ஆக, காடு வளர்ந்தால் நாடு தானே வளரும் என்ற புதிய பாதையில் முதலமைச்சர் ஸ்டாலினின் கனவுக்குப் பின்னால் இத்தனை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+