சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அக்னி கலச காலண்டர்.. குருமூர்த்தி.. சர்ச்சையை ஏற்படுத்திய நடிகர் சூர்யாவின் ஜெய்பீம்.. பிளாஷ்பேக்!

Google Oneindia Tamil News

சென்னை: அக்னி கலச காலண்டரை ஜெய்பீம் படத்தில் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்து வன்னியர் சங்கத்தினரும் பாமகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன் நடிகர் சூர்யா மீது புகாரையும் கொடுத்தனர்.

ஜெய்பீம் என்ற திரைப்படம் ஓடிடியில் கடந்த மாதம் தீபாவளிப் பண்டிகையையொட்டி வெளியானது. இந்த படத்தில் இருளர் இன அப்பாவி மக்கள் மீது போலீஸார் பொய் வழக்குகளை எப்படி புனைகிறார்கள்.

 காதலியை நள்ளிரவில் சந்திக்கப் போன பிளஸ் 2 மாணவன்... தாலி கட்டச்சொன்ன ஊர் மக்கள் - 6 பேர் கைது காதலியை நள்ளிரவில் சந்திக்கப் போன பிளஸ் 2 மாணவன்... தாலி கட்டச்சொன்ன ஊர் மக்கள் - 6 பேர் கைது

அதை எப்படி நீதிபதியாக நடித்திருக்கும் சூர்யா உடைத்தெறிகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாகும். இது உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட கதையாகும்.

நியாயம்

நியாயம்

உண்மையான சம்பவத்தில் பலதரப்பட்ட மக்களுக்கும் நியாயத்திற்காக நீதிக்காக குரல் கொடுத்த நிலையில் ஜெய்பீம் படத்திலோ கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே உதவியதாக கூறியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் உண்மையில் ராஜாகண்ணுவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் போலீஸ்காரின் பெயர் ஆண்டனி.

குருமூர்த்தி கேரக்டர்

குருமூர்த்தி கேரக்டர்

ஆனால் படத்தில் வந்த இன்ஸ்பெக்டரின் கேரக்டர் பெயர் குருமூர்த்தி, அவரது வீட்டில் வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசம் பதித்த காலண்டர் இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காடுவெட்டி குரு என்கிற குருமூர்த்தியின் மகன் கனலரசு தனது தந்தையின் பெயரை கொடுமைக்கார போலீஸாருக்கு வைத்ததற்கு கண்டனம் தெரிவித்தார். சூர்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதை அடுத்து 4 போலீஸார் இருந்தால் சூர்யாவை காப்பாற்றிவிட முடியுமா, 1000 வன்னியர்கள் சென்றால் 4 போலீஸாரால் என்ன செய்துவிட முடியும் என கனலரசு பகிரங்கமாக மிரட்டினார்.

அங்கீகாரம்

அங்கீகாரம்

இதையடுத்து வன்னியர் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ராஜா ஆகியோர் மீது 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கப்பட்டது. மேலும் உண்மையை மறைத்து படம் எடுத்ததாக நடிகர் சூர்யா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இந்த படத்தை விருது கொடுத்தோ பாராட்டியோ அங்கீகரிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு கோரிக்கையும் வன்னியர் சங்கம் சார்பில் வைக்கப்பட்டது.

Recommended Video

    Jai Bhim Controversy! வருத்தம் தெரிவித்த Director Gnanavel | OneIndia Tamil
    வன்னியர் சங்கத்தின் அடையாளம்

    வன்னியர் சங்கத்தின் அடையாளம்

    எனினும் அக்னி கலச காலண்டரை நாங்கள் வேண்டுமென்றே வைக்கவில்லை. அது வன்னியர் சங்கத்தின் அடையாளம் என்பதும் எனக்கு தெரியாது. இதில் சூர்யாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என கூறிய இயக்குநர் ஞானவேல்ராஜா தான் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துவதாக தெரிவித்திருந்தார். எனினும் குருமூர்த்தி கேரக்டர் குறித்து அவர் எதையும் சொல்லவில்லை. அனைவராலும் பாராட்டப்பட்ட இந்த படம் இத்தனை சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Year Ender 2021: Here is the memorable moment of Jaibhim controversy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X