அமைச்சரை விடுங்க.. ‛நீங்க அழகா இருக்கீங்க’ பாராட்டிய முதியவர்! சென்னை மேயர் பிரியா ரியாக்சன பாருங்க!
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று ராயபுரத்தில் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த வேளையில் ‛நீங்கள் அழகா இருக்கீங்க' என முதியவர் பாராட்டிய சம்பவம் நடந்துள்ளது.
சென்னை மாநகராட்சி மேயராக பிரியா உள்ளார். இவர் சென்னையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் இன்று சென்னை ராயபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார்.

பதிவேடு சரிபார்ப்பு
அதன்படி ராயபுரம் சூரிய நாராயணா தெருவில் உள்ள பள்ளிக்கூட சமையலறையை அவர் பார்வையிட்டு ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து பனைமர தொட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்துக்கு மேயர் பிரியா சென்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். பணியாளர்கள், அதிகாரிகளின் சரியான நேரத்தில் வேலைக்கு வந்துள்ளனரா? என பதிவேட்டை சரிபார்த்தார்.

ரூ.2 கோடி பணி ஆய்வு
அதன்பிறகு அர்த்தன் சாலையில் உள்ள உருது தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளை ஆய்வு செய்து குழந்தைகளுக்கு கணிவோடு பரிமாறினார். பின்னர் சென்னை 2.O திட்டத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் அண்ணா பூங்கா மறுசீரமைப்பு பணிகளை அவர் பார்வையிட்டார். அங்கு 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் நினைவஞ்சலி பேனருக்கு பிரியா, எம்எல்ஏ ஐட்ரீம் இரா மூர்த்தி மரியாதை செய்தனர்.

அழகாக இருக்கீங்க..
அதன்பிறகு பூங்காவுக்கு வந்திருந்த பொதுமக்களிடம் மேயர் பிரியா குறைகளை கேட்டார். இந்த வேளையில் முதியவர் ஒருவர், ‛‛நாங்கள் உங்களை தான் எப்போதும் பார்க்கிறோம். பக்கத்தில் சேகர் சார் (அமைச்சர் சேகர்பாபு), இந்த பக்கத்தில் பிற அமைச்சர்கள் இருந்தாலும். நடுவுல நீங்கள் அழகாக இருக்கிங்க. நல்லா பணி செய்யுங்க. வாழ்த்துகள்'' என பாராட்டி கைப்கூப்பி வணக்கம் தெரிவித்தார். இதை கேட்ட மேயர் பிரியா, சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டார்.

காரில் தொங்கிய மேயர் பிரியா
முன்னதாக மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை காசிமேடு பகுதிகளை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டவர்கள் உடன் சென்றனர். இந்த வேளையில் முதல்வர் ஸ்டாலின் சென்ற கான்வாயில் சென்னை மேயர் பிரியா, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டவர்கள் புட்போர்டு அடித்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications