’உங்களை பார்க்கணும்’ விஜய் வீட்டுக்கு சென்ற இளம்பெண்..கேட்டில் நின்று கண்ணீருடன் இன்ஸ்டாவில் ரீல்ஸ்
சென்னை: சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டு முன்பாக இளம்பெண் ஒருவர் நின்றுகொண்டு அண்ணா உங்களை பார்க்கனும்.. என கேமராவை பார்த்து கோரிக்கை விடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் விஜய். சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் வசித்து வருகிறார். விஜயைக் காண அவ்வப்போது அவர் வீடு அமைந்துள்ள சாலைகளில் அவரது ரசிகர்கள் பலரும் சென்று வருவதும் வீட்டின் முன் நின்று செல்பி எடுப்பதுமாக என கொஞ்சம் பரபரப்பாகவே காணப்படும். சில சமயங்களில் விஜய் வீட்டு முன்பாக ரசிகர்கள் வரம்பு மீறி நடந்து கொள்வதையும் காண முடியும்.

வீட்டிற்குள் சென்று விஜயை பார்க்க முயற்சிப்பதும் அங்கு இருக்கும் வீட்டுக்காவலர்களுடன் வாக்கு வாதம் நடக்கும் காட்சிகளும் சில நேரங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், இளம்பெண் ஒருவர் சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டு முன்பாக நின்று அண்ணா உங்களை பார்க்கனும்.. என கேமராவை பார்த்து கோரிக்கை விடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இது குறித்த விவரம் வருமாறு:-
காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார் பகுதியை சேர்ந்தவர் சங்கர் - இந்திரா தம்பதியினர். பானிபூரி வியாபாரம் செய்து வரும் இவர்களது மகள் நடிகர் விஜயின் தீவிர ரசிகை. விஜயை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு பெற்றோரை வலியுறுத்தி கூட்டி சென்றுள்ளார். விஜய் வீட்டு முன்பு இருந்த சிசிடிவி கேமரா முன்பாக நின்று நடிகர் விஜயை ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதை அந்த பெண்ணின் தந்தை தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவில் பேசும் இளம் பெண், விஜயை பார்க்க வந்ததாகவும் எப்படியும் பார்க்க முடியாது.. இந்த வீடியோவை விஜய் பார்க்குற வரை ஷேர் பண்ணுங்க.." என்று பேசுகிறார்.
தொடர்ந்து விஜய் வீட்டு வாசலில் இருக்கும் சிசிடிவி கேமராவை பார்த்து பேசும் அந்த இளம் பெண், உங்க வீடு வரைக்கும் வந்துட்டோம்.. உங்களை பார்க்க முடியல... என சொல்லி வீட்டு வாசலை தொட்டு கும்பிடுகிறார். எப்படியாவது கூப்பிடுங்க... நீங்கள் கூப்பிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கேன்.. அழுகையாக வருது... ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கிறேன்.. விஜய் கூப்பிடுவார் என்ற நம்பிக்கை இருக்கு" என்று கூறுகிறார்.
அந்த இளம்பெண்ணின் பெற்றோர்களும் விஜய் ஒருமுறையாவது தனது மகளுடன் ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications