சிக்கலில் ஜீ தமிழ்.. டான்ஸ் ஜோடி டான்ஸ் ஷோவால் முளைத்த பஞ்சாயத்து! பாய்ந்த நோட்டீஸ்.. பரபர டெல்லி!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3' நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் நடனமாடிய ஜோடி இந்து கடவுள்களை அவமதித்ததாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டுமென ஜீ தமிழ் நிர்வாகத்திற்கு மத்திய ஒளிபரப்பு துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடியை அவமதித்ததாக இந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், அந்த தொலைக்காட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொடிகட்டி பறக்கும் தொலைக்காட்சி நெட்வொர்க்களில் ஒன்று ஜீ . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த தொலைக்காட்சி தமிழகத்தில் கால் பதித்தது. ஜீ தமிழ், ஜீ சினிமா என இரு சேனல்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைனில் ஜீ நியூஸ் செயல்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல நிகழ்ச்சிகளை காப்பி அடித்ததாக புகார் உண்டு. இருந்த போதும் ஜீ தமிழ் சீரியல்களுக்கும், ரியாலிட்டி ஷோக்களுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் சரிகமப, சரிகமப ஜூனியர், டான்ஸ் ஜோடி டான்ஸ் ஆகிய நிகழ்ச்சிகள் பொதுமக்களுடைய பலத்த வரவேற்பை பெற்றது.

குறிப்பாக டான்ஸ் ஜோடி டான்சில் வரலட்சுமி, சினேகா உள்ளிட்ட பிரபலங்கள் நடுவர்களாக பங்கேற்று உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் மிகத் திறமையாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால் அதே நேரத்தில் பல்வேறு சர்ச்சைகளில் இந்த நிகழ்ச்சி சிக்குவது உண்டு. அப்படித்தான் தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மூலம் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சிக்கல் முளைத்திருக்கிறது.
கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் டான்ஸ் ஜோடிகள் நடனமாடிக் கொண்டிருக்க, துணை நடிகர்கள் சிவன், முருகன், விநாயகர் உள்ளிட்ட வேடங்களை அணிந்து நடனம் ஆடினர். அப்போது நடனமாடிய ஜோடி ஆபாசமாக நடந்து கொண்டதாகவும் அவர்களுக்கு அருகில் கடவுள் வேடத்தில் இருந்தவர்களை நடனமாட விட்டு இந்து மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தி விட்டதாக இந்து முன்னணி ட்விட்டரில் புகார் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய ஒளிபரப்பு துறை அமைச்சகம் இந்த நோட்டீசை அனுப்பி இருக்கிறது. அதில், 'கடந்த 12ஆம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் 1994 கேபிள் தொலைக்காட்சி சட்டம் விதி 1(6) சி பிரிவை மீறுவது போல நிகழ்ச்சி ஒளிபரப்பானதாகவும், அந்த நிகழ்ச்சியில் மதம் மற்றும் சமூக நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள், வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாகவும். இது குறிப்பிட்ட சமூகத்தின் நம்பிக்கைகளை புண்படுத்துவது போல் உள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், விளக்கம் அளிக்கவில்லை என்றால், இது தொடர்பாக கேபிள் டிவி சட்டம் 1995 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை அவமதிப்பது போல காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாக ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக அந்த தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஜீ தமிழ் நிர்வாகம் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் இந்த நோட்டீசை சட்டரீதியாக அணுகுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications