சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி சொமேட்டோ, ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்ய போகிறீர்களா? இதை கொஞ்சம் படிங்க.. விலை எகிற போகுது!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் சொமேட்டோ , ஸ்விக்கி, ஓலா, உபர் போன்றவற்றில் ஆர்டர் செய்வதற்கு இனி வரும் நாட்களில் அந்த நிறுவனங்கள் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

2022ம் ஆண்டு தொடங்கியதை முன்னிட்டு இன்று முதல் புதிய ஜிஎஸ்டி விதிகள் அமலுக்கு வந்து இருக்கின்றன. பல்வேறு ஜிஎஸ்டி விதிகளில் வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முக்கியமாக ஆன்லைன் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஓ.பி.எஸ்.க்கு வெற்றிலை மாலை சூடிய ஆர்.பி.உதயகுமார்! பெரியகுளத்தில் குவிந்த தென்மாவட்ட நிர்வாகிகள்! ஓ.பி.எஸ்.க்கு வெற்றிலை மாலை சூடிய ஆர்.பி.உதயகுமார்! பெரியகுளத்தில் குவிந்த தென்மாவட்ட நிர்வாகிகள்!

 கோரிக்கைகள்

கோரிக்கைகள்

ஜிஎஸ்டி தொடர்பாக பல்வேறு துறைகளில் வரிகளை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறையில் மூலப்பொருட்களின் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

 ஜவுளித் துறை

ஜவுளித் துறை

சமீபத்தில்தான் ஜவுளித் துறையின் ஜிஎஸ்டி 5% இருந்து 12 % உயர்த்தப்பட்டது. இந்த நிலையில்தான் இன்றில் இருந்து இந்தியாவில் சொமேட்டோ , ஸ்விக்கி உள்ளிட்ட உணவு ஆர்டர் நிறுவனங்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இந்த 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை சோமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.

 உணவு ஆர்டர்

உணவு ஆர்டர்

இதற்கு முன் உணவக நிறுவனங்கள் மட்டும் உணவு ஆர்டருக்கு பில்லில் 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை செலுத்தி வந்தது. இனி கூடுதலாக 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை சொமேட்டோ , ஸ்விக்கி நிறுவனங்கள் செலுத்த வேண்டும். எனவே இதனால் உணவு பொருட்களின் விலை இனி சொமேட்டோ , ஸ்விக்கியில் உணவு பொருட்களின் விலை 5 சதவிகிதம் கூடுதலாக இருக்கும்.

ஓலா, உபர்

ஓலா, உபர்

அதேபோல் இனி ஓலா, உபர் ஆகிய பிக் அப் டிராப் வாகன டாக்சி சேவைகளிலும் கூடுதலாக 5 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இதற்கு முன் ஜிஎஸ்டிக்கு வெளிப்பகுதியில் இருந்த இந்த நிறுவனங்கள் இனி ஜிஎஸ்டி வரையறைக்குள் வரும். இதனால் ஓலா, உபர் மூலம் கார், பைக் புக் செய்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

English summary
Zomato, Swiggy, Ola, Uber come under GST from today: What will be new price from now on?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X