For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீர்மேலாண்மை, மராமத்து பணிகள்.. அதிரடி காட்டும் முதல்வர் பழனிசாமி.. கலக்கும் தமிழக அரசு!

நீர்நிலை மேலாண்மையிலும் அது தொடர்பான மராமத்து பணிகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது.

சென்னை: நீர்நிலை மேலாண்மையிலும் அது தொடர்பான மராமத்து பணிகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. பாராட்டதக்க வகையில் தமிழக அரசு இதில் பல புரட்சிகளை செய்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு பல்வேறு துறைகளில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிலும் நீர் மேலாண்மை, மராமத்து பணிகள் செய்தல், அணைகள் மறு சீரமைப்பு, குளங்கள், ஏரிகள், அணைகள் தூர் வாருதல் உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் கீழ்தான் மேட்டூர் அணை 4 முறை மொத்தமாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

CM Palanisamy s works hard on Water Management and developing sector

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நிரந்தர வற்றாத ஆறுகள் என்று எதுவும் இல்லை. பருவ மழையை நம்பியே இந்த ஆறுகள் உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில், ஆற்று நீரை கொண்டு ஏரி, குளம், குட்டை, ஊருணிகளை நிரப்பி, பின்னர் அந்த நீர் குடிநீருக்காவும் பாசனத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறான பொறியியல் கட்டமைப்புகளை நமது முன்னோர்கள் கட்டமைத்து இருந்தனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஆற்றை சுற்றியுள்ள கிராமங்கள் பாசன வசதி பெற்றன. நிரம்பிய ஒரு ஏரியிலிருந்து வெளியேறும் நீர் அடுத்த ஏரிக்கு பாயும் விதத்தில் கட்டமைப்புகளை ஏற்படுத்தினர். கல்லணை போன்ற சிறப்பான அணைகளை கட்டி, காவேரி ஆற்றை பாசன வசதிக்கு பயன்படுத்திக் கொண்டனர். இதேபோன்று, பல நீர் நிலைகளை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தி நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர்.

பொருளாதார வளர்ச்சிக்கு நீர் மேலாண்மை மிகவும் அவசியமானதாகும். பருவமழை பொய்க்கும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதற்கான நிரந்தர தீர்வை காண்பது மிகவும் இன்றியமையாதது. விண்ணிலிருந்து மண்ணில் விழும் ஒவ்வொரு நீர்த்துளியும், பயன்படுத்தப்பட்ட நீரும் மறுசுழற்சி செய்து முறையான பயன்பாட்டிற்காக சேமிக்கப்பட வேண்டும்.

CM Palanisamy s works hard on Water Management and developing sector

இதற்கென அனைத்து ஏரிகளிலும், குளங்களிலும், குட்டைகளிலும், கண்மாய்களிலும், ஊருணிகளிலும், வரத்து வாய்கால்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் புதிய ஏரிகளையும், குட்டைகளையும், நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் உருவாக்க வேண்டும். பாசன வாய்க்கால்களை செப்பனிடவும் பண்ணைக் குட்டைகள் உருவாக்குவதை ஊக்கப்படுத்தவும் வேண்டும்.
நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்த மாண்புமிகு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மழைநீர் சேகரிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார்கள்.

தற்போது முதல்வர் பழனிச்சாமி அதை பின்பற்றி தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வழியிலேயே மழை நீர் சேகரிப்பை முன்னெடுத்துச் செல்லவும், நீர் நிலைகளின் கொள்ளளவினை அதிகப்படுத்தி பாதுகாக்கவும், வேளாண்மைக்கு நீர் திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்யவும், கழிவுநீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட நீரினை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் உபயோகிப்பதை பெருமளவில் ஊக்கப்படுத்த "நீர் வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம்" என்ற ஒரு தீவிர மக்கள் இயக்கத்தை தொடங்க சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்து, துவங்கி வைத்துள்ளார்.

இந்த தீவிர இயக்கத்தில், கீழ்க்காணும் வழிமுறைகளின் மூலமாக அதிமுக அரசு செயல்படுத்த உள்ளது என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

CM Palanisamy s works hard on Water Management and developing sector

மழை நீர் சேகரித்தல், நீர் நிலைகளைப் பாதுகாத்து அதன் கொள்திறனை அதிகரித்தல் • நிலத்தடி நீரை செறிவூட்டி, குடிநீர் வழங்குதலை நிலைப்படுத்துதல் • வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பதோடு, மானாவாரி வேளாண்மைக்காக மழை நீர் சேகரிக்கும் திட்டத்தையும் செயல்படுத்துதல் • பயன்படுத்தப்பட்ட நீரினை மறுகழற்சி செய்து உபயோகப்படுத்துவதன்
மூலம் நன்னீருக்கான தேவையை குறைத்தல். இதன் மூலம் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி கோட்பாட்டினை தீவிரமாக கடைபிடித்தல் • ஆறுகள், ஏரிகள், முக்கிய கடற்கரை பகுதிகள், முகத்துவார நீர்நிலைகள், கழிமுகங்கள், சிற்றோடைகள் மற்றும் சதுப்பு நிலங்களின் சூழலியலை மீட்டெடுத்தல் ஆகிய பணிகளை செய்கிறது.

இச்செயல் திட்டம் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில், பல்வேறு துறைகளின் உதவியுடன் செயல்படுத்தப்படும். நகர்ப் பகுதிகளில் வார்டு வாரியாகவும், ஒவ்வொரு கிராமத்திலும், ஒன்றியத்திலும் நீர் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்டு, அவற்றில் பெண்கள் பெருவாரியாக கலந்து கொண்டு செயல்படுவதை இத்திட்டம் உறுதி செய்கிறது.

குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 499.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, 1829 பணிகளும், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டின் ஒரு பகுதியாக, காவேரி டெல்டா பகுதியில் உள்ள கால்வாய்களை சீரமைக்க 61 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ள பணிகளும், இந்த இயக்கத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டது.

இத்தீவிர பிரச்சார இயக்கத்தின் மூலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் கிராமம் தோறும் சிறுபாசன ஏரிகள், குட்டைகள் மற்றும் ஊருணிகளின் கொள்ளளவினை அதிகரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 750 கோடி ரூபாயுடன், கூடுதலாக சிறப்பு நிதியாக 500 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு வழங்கி, மொத்தம் 1,250 கோடி ரூபாய் நிதியின் மூலம் இப்பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மாநகரத்திலுள்ள 210 நீர்நிலைகளில், மாநகராட்சி நிதி மற்றும் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் மூலமாக 53 நீர் நிலைகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், 114 நீர்நிலைகளில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகளும் இத்தீவிர இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்கத்தின் மூலம் நீண்ட கால செயல்பாடுகளாக, மாநிலத்தில் பாயும் நதிகளை இணைத்தல், கோதாவரி காவேரி ஆறுகளை இணைக்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களும் எடுத்துக் கொள்ளப்படும். - இதுதவிர, கழிவுநீரை மறு சுழற்சி மூலம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து நன்னீருக்கான தேவையைக் குறைத்தல், ஆறுகள், ஏரிகள், முக்கிய கடற்கரைப் பகுதிகள், முகத்துவார நீர்நிலைகள், கழிமுகங்கள், சிற்றோடைகள் மற்றும் சதுப்பு நிலங்களின் சூழலியலை மீட்டெடுத்தல், சொட்டுநீர் பாசன திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல் போன்ற எண்ணற்ற திட்டங்களை மாண்புமிகு முதல்வர் பழனிச்சாமி அரசு செயல்படுத்தி வருகிறது.

கங்கையை தூய்மைப் படுத்தும் திட்டத்தைப் போன்றே, காவேரி மற்றும் அதன் துணை ஆறுகளை தூய்மைப்படுத்த "நடந்தாய் வாழி காவேரி" என்னும் ஒரு புதிய திட்டத்தை தமிழக அதிமுக அரசு, இந்த இயக்கத்தின் மூலம் செயல்படுத்தும். இத்திட்டம், இந்திய அரசு மற்றும் வெளிநாட்டு நிதியுதவி முகமைகளின் உதவியுடன் அதிமுக அரசு படிப்படியாக நிறைவேற்றும். காவேரி ஆற்றில், கழிவு நீர்
மற்றும் தொழிற்சாலைக் கழிவு கலப்பதை தடுக்கவும், கடல் முகத்துவாரம் வரை ஆற்றை மீட்டெடுக்கவும் ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, பவானி, வைகை, அமராவதி மற்றும் தாமிரபரணி ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்கவும் அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

இந்த நீர் வள பாதுகாப்பு இயக்கத்தில் மிகப் பெரிய அளவில் பொது மக்களும், இளைஞர்களும், தனியார் நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் முனைப்புடன் பங்கேற்க தொடங்கி உள்ளனர்.

வறட்சியான காலத்திலே நமக்குத் தேவையான நீரை சேமிப்பது தான் இந்தத் திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும். 40 ஆண்டுகாலம் இல்லாத வறட்சி. இரண்டு மூன்று ஆண்டு காலமாக பருவமழை முழுமையாக நமக்கு பொழியவில்லை. இதனால் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே செல்கின்றது. ஆகவே, நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்கும், நிலத்தடி நீரை வேளாண் பெருமக்கள் பயன்படுத்தி வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கும், குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் இந்தக் குடிமராமத்துத் திட்டம் மிகப் பெரிய திட்டமாக - செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக, தமிழகத்திலிருக்கின்ற ஏரிகள் பொதுப்பணித்துறை மூலம் சரிசெய்யப்பட்டு, வரத்து வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்பட்டு, உபரி நீர் வெளியேறுகின்ற கால்வாய்கள் சுத்தப்படுத்தப்பட்டு, சீரமைக்கப்பட்டு இன்றைக்கு ஒரு முழுமையான ஏரியாக காட்சி அளிக்கக்கூடிய அளவிற்கு அதிமுக அரசு திட்டம் தீட்டி செயல்படுத்துகிறது.

பல ஆண்டுகாலமாக, கிட்டத்தட்ட 20, 30 ஆண்டுகளாக தூர்வாராமல் இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள். அதிமுக அரசு தான் இந்தத் திட்டத்தை கையிலெடுத்து, இன்றைக்கு சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. தூர்வாரும்பொழுது ஏரிகள் ஆழமாவதுடன், கிடைக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றது. இருவிதத்தில் நன்மை கிடைக்கின்றது.

பருவ காலங்களில் பொழிகின்ற மழை நீர் ஒரு சொட்டுக்கூட வீணாகாமல் பாதுகாப்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தை நாங்கள் துவக்கி வைத்திருக்கின்றோம். இந்தத் திட்டத்திற்கு புத்துயிர் கொடுத்த அரசு அதிமுக அரசு. 2017-18ஆம் ஆண்டு பரீட்சார்த்த முறையில் இந்தத் திட்டத்தை துவக்கி. முதற்கட்டமாக 1519 ஏரிகளும், இரண்டாம்கட்டமாக 2018-2019-ஆம் ஆண்டில் ரூபாய் 328 கோடியில் 1511 ஏரிகளுக்கான திட்டத்தை அறிவித்தனர்.

2019-2020-ஆம் ஆண்டிற்கு 1829 ஏரிகள் ரூபாய் 499 கோடியில் தூர்வாருவதற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு மனிதனுக்கு நீர் எப்படியோ, அதுபோல் விவசாயத்திற்கு உயிராக இருப்பது நீர். எனவே, அந்த நீரை, ஒரு சொட்டுகூட வீணாகாமல் பாதுகாப்பது அரசின் கடமை என்பதால் இப்படி ஒரு செயல்திட்டத்தைத் தீட்டி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பொதுப்பணித் துறை சார்பில், குடிமராமத்துத் திட்டம் மூலமாக, முழுக்க, முழுக்க விவசாயப் பெருங்குடி மக்கள், பாசனத்திற்குட்பட்ட விவசாயிகள் சங்கம், ஆயக்கட்டுதாரர்களை ஈடுபடுத்தி, அவர்களிடத்தில் நிதியை கொடுத்து அவர்கள் மூலமாக ஏரிகளை சீரமைத்து ஏரிகளில் வண்டல் மண் அள்ளுவது, கரையை பலப்படுத்துவது, மதகுகளை சீர் செய்வது, வரத்து வாய்க்கால்களை சுத்தப்படுத்துவது, உபரிநீரை வெளியேற்றுகின்ற கால்வாய்களைவறட்சியால் பாதிக்கப்படும் காலங்களில் பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து, இந்தியாவிலேயே அதிகளவில், கிட்டத்தட்ட ரூபாய் 3400 கோடி பெற்றுத் தந்த அரசு முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு.

விவசாயிகளின் நலன் கருதி வேளாண் கருவிகளான டிராக்டர், இடுபொருள், விதை போன்றவற்றிற்கு மானியம் கொடுக்கின்றோம். விவசாயிகளின் பணி சிறக்க அதிமுக அரசு துணை நிற்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மார்கெட் கட்டப்பட்டு, அங்கே விவசாயிகள் விற்பனை செய்து தங்களுக்குத் தேவையான வருமானத்தை ஈட்டிக் கொள்ளவும் அதிமுக அரசு ஏற்பாடு செய்திருக்கின்றது.
விவசாயிகள் மலர்களை அதிகளவில் பயிரிட்டு விற்பனை செய்கின்றார்கள். அதற்குத் தகுந்த விலை கிடைப்பதில்லை. எனவே, சர்வதேச மலர் ஏல மையம் ஒன்றை ஓசூரில் ஏற்படுத்த அண்மையில் முதல்வர் அறிவித்தார் சென்னைக்கு அருகே ரூபாய் இரண்டாயிரம் கோடியில் மிகப் பெரிய உணவுப் பூங்கா அமைக்கவிருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்த காலத்திலேயே, வெண்மைப் புரட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டுமென்ற அடிப்படையில், விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் ஆகியவற்றை நம்முடைய பெண் பயனாளிகளுக்குக் கொடுத்தார்கள். அதை அம்மாவின் அரசும் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. இத்திட்டத்தை மேலும் செம்மைப்படுத்த, அம்மாவின் அரசு, ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான, கிட்டத்தட்ட 1000 ஏக்கரில் ரூபாய் 1000 கோடியில், கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி, கலப்பினப் பசுக்கள் உருவாக்குதல், அனைத்து ரக மீன் வளர்ப்பு, ஆடுகள், கோழிகள்
வளர்த்தல் போன்ற பல வசதிகளுடன்கூடிய "கால்நடைப் பூங்கா" அமைக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாகொடுத்த அத்தனை திட்டங்களையும் சிந்தாமல், சிதறாமல் கிராமத்திலிருந்து நகரம் வரை அனைத்து மக்களுக்கும் கொடுக்கக்கூடிய ஒரே அரசு அதிமுக அரசு தான். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உழைக்கின்ற மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படுமென அறிவித்தார்கள். ரூபாய் 25 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.

திருமணமாகாத ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு 4 கிராமிலிருந்து 8 கிராமாக தாலிக்குத் தங்கம் வழங்கி அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியது அதிமுக அரசு. பட்டப் படிப்பு படித்த பெண்களுக்கு 50 ஆயிரமும், +2 படித்த பெண்களுக்கு ரூபாய் 25 ஆயிரமும் உதவித் தொகையாக அதிமுக அரசால் வழங்கப்படுகிறது. இந்தியாவில், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில், ஏழை, எளிய, . ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கிராமத்தில் குடிசையில் வாழ்கின்ற மக்கள் கூட நிம்மதியாக வாழ்கின்ற ஒரு இடம் தமிழ்நாடு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கருவுற்ற தாய்மார்களின் கரு சிறப்பாக வளர வேண்டுமென்பதற்காக அவர்களுக்கான உதவித் தொகை ரூபாய் 6 ஆயிரத்திலிருந்து ரூபாய் 12 ஆயிரமாக உயர்த்தப்பட்டு, பின்னர் ரூபாய் 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. கரு வளரும்பொழுதே குழந்தை நன்றாக வளர வேண்டுமென்பதற்காக ஊட்டச் சத்து அடங்கிய பெட்டகம் வழங்கிய அரசு அதிமுக அரசு. ஏழைத் தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் இந்த மண்ணில் பிறக்கும்பொழுதே நன்றாக வாழ வேண்டுமென்பதற்காக, பிறந்தவுடன் 16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் அதிமுக ஆட்சியில் தான் கொடுக்கின்றோம்.

அதிகமாக ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டிருக்கின்றது, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அதிக அளவில் திறக்கப்பட்டிருக்கின்றது. கிராமத்தில் வாழ்கின்ற மக்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கக்கூடிய சூழ்நிலையை நாம் உருவாக்கி தந்திருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், அம்மா இருந்த காலத்தில் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் வரை பயன்பெறலாம் என்று இருந்தது, ஆனால் தற்போது, ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதமான திட்டம்.

இன்றைக்கு சாலை வசதிகள் அதிக அளவில் கொடுத்துள்ளது. அதிக அளவில் தடுப்பணைகளை கொடுத்துள்ளது. இதற்காக மூன்றாண்டு திட்டத்தில் ரூபாய் 1000 கோடி ஒதுக்கி, இப்பொழுது தடுப்பணைக்காக ரூபாய் 600 கோடி அளவில் திட்டத்தை உருவாக்கியிருக்கின்றோம். அதிமுக அரசு, ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருப்பதற்கு எங்கெங்கெல்லாம் தடுப்பணை கேட்கின்றார்களோ, அங்கெல்லாம் அதிமுக அரசால் தடுப்பணை கட்டித் தரப்படும். தமிழ்நாட்டில் ஓடைகள், நதிகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டிய பகுதிகளில் எல்லாம் தடுப்பணைகள் கட்டுவதற்கு ஓய்வு பெற்ற பொறியாளர்களை நியமித்து, அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்து, எங்கெங்கெல்லாம் மழைநீர் வீணாக கடலில் கலக்கின்றது என்பதை கண்டறிந்து அரசுக்கு தெரிவித்து, ஓடையின் குறுக்கே, நதிகளின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கும் அதிமுக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கின்றபொழுது என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தார்களோ, அத்தனைத் திட்டங்களையும் முதல்வர் பழனிசாமி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

இன்றைக்கு விவசாயத் தொழிலாளியானாலும், நெசவுத் தொழிலாளியானாலும், கட்டடத் தொழிலாளியானாலும் சரி, தொழிலாளி குடும்பங்களுக்கு அதிமுக அரசு 2000 ரூபாய் கொடுக்கப்படும். கணக்கெடுப்புப் பணி நிறைவடைந்தவுடன் அனைத்து ஏழை தொழிலாளர் குடும்பத்திற்கும் அம்மாவினுடைய அரசு 2000 ரூபாய் வழங்கும்

நீர்வளத்தை பாதுகாப்போம்! அனைத்து வளத்தையும் பெருக்குவோம்! வறட்சியை விரட்டுவோம்! தமிழ்நாட்டை நீர் மிகை மாநிலமாக உருவாக்குவோம்! என்று மாபெரும் லட்சியத்துடன் தமிழக அதிமுக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X