கோவையில் ரேபிடோ ஆட்டோவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. நடுரோட்டில் குதித்து தப்பியதால் பரபரப்பு
கோவை: கோவையில் ரபிடோ ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணுக்கு ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் 22 வயதான இளம் பெண் ஒருவர் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
தான் வேலை பார்க்கும் நிறுவனம் அருகே உள்ள செல்வபுரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார்.

ஆட்டோவில் செல்ல..
கடந்த 10 மாதங்களாக அவர் அந்த நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அவர் பணியின் காரணமாக திருப்பூர் சென்றுள்ளார். பின்னர் பணி முடிந்து இரவு மீண்டும் கோவைக்கு திரும்பினார். கோவையில் இருந்து தான் குடியிருக்கும் செல்வபுரத்துக்கு ஆட்டோவில் செல்ல திட்டமிட்டார்.

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
இதற்காக ரேபிடோ ஆட்டோவை இளம்பெண் புக் செய்தார். அதன்படி சிறிது நேரத்தில் ரேபிடோ அட்டோ வந்தது. இதையடுத்து இளம்பெண் அந்த ஆட்டோவில் அமர்ந்து குடியிருப்பு பகுதிக்கு சென்றுகொண்டிருந்தார். இந்த நிலையில், சிறிது நேரத்தில் அந்த ஆட்டோ ஓட்டுநர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்சியடைந்த அந்த இளம்பெண் ஆட்டோவை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

ஆட்டோவில் இருந்து குதித்த இளம்பெண்
ஆனால் அவர் ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன இளம்பெண் தன்னை ஆட்டோ டிரைவர் கடத்த திட்டமிடுகிறார் என்பதை புரிந்துகொண்டார். எனினும் எப்படி தப்பிப்பது என்று தவித்த இளம்பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து குதிக்க முடிவு செய்தார். அதன்படி அந்த இளம்பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

தப்பி சென்றார்
இளம்பெண் ஆட்டோவில் இருந்து குதித்ததை பார்த்ததும் ஆட்டோ டிரைவர் ஆட்டோவை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றார். இதற்கிடையே காயமடைந்து துடித்த இளம்பெண் நடந்த சம்பவம் குறித்து தனது நண்பர்களுக்கு செல்போனில் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அவரது நண்பர்கள் இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து அந்த பெண் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆட்டோ டிரைவர் கைது
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வந்தனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈருபட்டது உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது சாதிக் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ஓடும் ஆட்டோவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications