உட்கட்சி மேட்டர்.. அதிமுக விஷயத்தில் தலையிட்டதே இல்லை.. இனியும் தலையிட மாட்டோம்! பாஜக அண்ணாமலை பளீர்
கோவை: அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக எப்போதும் தலையிட்டதில்லை, தலையிடபோவதும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக 8 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அதிமுக உட்கட்சி விவகாரம், செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள், மத்திய அரசின் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அக்னிபாத் திட்டம்
இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவை அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். முப்படைகளில் 4 ஆண்டுகள் பணியாற்றும் அக்னிபாத் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த திட்டத்தில் தேர்வானவர்களுக்கு எப்படி பணியில் வடமாநிலங்களில் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளதோ, அதேபோல் தமிழகத்திலும் காவல்துறை பணியில் இடஒதுக்கீடு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி மீது விமர்சனம்
தொடர்ந்து தமிழக மின்சார வாரியத்தின் மின்திட்ட ஒப்பந்தங்கள், விதிகளையும் மீறி பிஜிஆர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எங்களிடம் உள்ள ஆதாரத்தில் இருந்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தப்பிக்க முடியாது. தமிழ்நாட்டில் அரசு மாற்றமடையும் போது முதல் ஆளாக செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

கோவை - ஷீரடி ரயில்
தனியார் மூலம் இயக்கப்பட்ட கோவை - ஷீரடி இடையிலான ரயிலில், தங்களுக்கு எந்த வசதி தேவையோ அதனை தேர்ந்தெடுத்து பொதுமக்கள் பயணித்துள்ளனர். இந்த ரயிலில்தான் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இது தவறு என்று கூற முடியாது என்று தெரிவித்தார்.

அதிமுக உட்கட்சி விவகாரம்
அதேபோல் அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டது இல்லை. தலையிடப்போவதும் இல்லை. பாஜக தனிமனிதர்களை எப்போதும் முன்னிலைப்படுத்தாது. எப்போதும் சித்தாந்ததை முன்னிலைப்படுத்துவோம். கட்சியின் தொண்டர்களை முன்னிலைப்படுத்துவோம் என்று தெரிவித்தார்.
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications