கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவங்க குடும்பத்துக்கு நம்பிக்கை ஊட்டுவோம்.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. செம அப்ளாஸ்

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: கடுமையாக கொரோனா காலத்தில்.. கோவையில் கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கோவைக்கு விசிட் அடித்து இருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

    Go Back Stalin VS We Stand With Stalin | ஸ்டாலின் வருகைக்கு குவிந்த ஆதரவும் , எதிர்ப்பும்

    தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கோவைக்கு கொரோனா பணிகளை பார்வையிட சென்றார். கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

    கொரோனா சிகிச்சை மையம், கார் ஆம்புலன்ஸ், பணி நியமனம்.. திருப்பூரில் அதிரடி காட்டும் முதல்வர் ஸ்டாலின்கொரோனா சிகிச்சை மையம், கார் ஆம்புலன்ஸ், பணி நியமனம்.. திருப்பூரில் அதிரடி காட்டும் முதல்வர் ஸ்டாலின்

    திருப்பூர், ஈரோட்டில் புதிய ஆக்சிஜன் படுக்கைகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்த முதல்வர், அங்கு மருத்துவர்களிடம் கொரோனா சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அதேபோல் கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார்.

    கோவை

    கோவை

    இதையடுத்து கோவைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் கோவை மாநகராட்சி 5 மண்டலங்களில் தலா 10 இன்னோவா ஆம்புலன்ஸ் வீதம், 50 இன்னோவா ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார். பின்னர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்போடு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு நோயாளிகளிடம் அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    மக்களுக்கு நம்பிக்கையூட்டவே இப்படி செய்ததாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் செய்துள்ள ட்வீ ட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!

    கொரோனா

    கொரோனா

    கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!

    புகைப்படம்

    புகைப்படம்

    முதல்வர் ஸ்டாலின் இப்படி பிபிஇ உடையோடு மருத்துவமனையில் ஆய்வு செய்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல்வர் இப்படி பிபிஇ கிட்டுடன் களமிறங்கிய புகைப்படங்கள் கோவை மக்களுக்கு மட்டுமின்றி தமிழகம் முழுக்க எல்லோருக்கும் ஒரு வித நம்பிக்கையை கொடுத்துள்ளது.

    English summary
    CM Stalin tweets about his visit to ESI hospital in PPE kit in Coimbatore today amid rise of covid 19 cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X