சென்னை, ஒசூர், திருச்சி, சேலத்தை முந்திய கோவை.. மத்திய அரசின் பாதுகாப்பு துறை உற்பத்தியில் அசத்தல்
கோயமுத்தூர்: தொழில் துறையில் செய்யமுடியாத விஷயம் ஒன்று இருந்தால் அதை செய்து முடிப்பதுதான் கோயமுத்தூர் தொழிற்பேட்டையின் ஒரே இலக்கு என்று சிலாகிக்கிறார்கள் தொழிலதிபர்கள் வட்டாரத்தில்.
கோயமுத்தூர் தொழில் நிறுவனங்கள் இப்படித்தான் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள மற்ற தொழில் நகரங்களைவிட கோயமுத்தூர் அனைத்து துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கிறது.
பாதுகாப்பு துறைக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பது, விமான பாகங்கள் தொடங்கி தற்போது இஸ்ரோவுக்கும் உதிரிபாகங்களை செய்து கொடுக்கிறது கோயமுத்தூர்.

சென்னை
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் மிகப்பெரிய தொழில் நகரம் கோவை. ஓசூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட தொழில்நகரங்களுக்கு கடும் போட்டி கொடுக்கும் நகரமாக கோவை வளர்ந்துள்ளது. சென்னையில் ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான விஷயங்கள் கிடைக்கும். சேலம் இரும்பு ஆலை, வெள்ளி பொருட்களுக்கு பெயர் பெற்றது. இப்படி தொழில்நகரங்கள் சில துறைகளில் மட்டும் சிறப்பாக இருக்கும்.

கோயமுத்தூர்
கோயமுத்தூர் அப்படி கிடையாது. ஆட்டோமொபைல், இன்சினியரிங் என எல்லா துறைகளிலும் கலக்கும். கோவை மற்றும் கோவையை சுற்றி நிறைய பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அங்கு படித்து வரும் மாணவர்கள் பலரும் சொந்தமாக தொழில் தொடங்குகிறார்கள். அவர்களின் அறிவை சுயதொழிலில் செலுத்துகிறார்கள். இதனால் தான் கொஞ்சம் கொஞ்சமாக கோவையில் தொழில்துறை வளர்ச்சி அடைந்தது. இதன் காரணமாக, ஒசூர், திருச்சி, சேலம், சென்னையைவிட மத்திய அரசின் பாதுகாப்பு காரிடார் திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வருகிறது கோவை. 3 வருடங்கள் முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் இப்போது கோவை டாப்.

சிறப்பு
கோயமுத்தூரின் சிறப்பே, மற்ற தொழில் நகரங்கள் தங்களால் செய்ய முடியாது என்று சொன்னதை, இங்குள்ள பொறியியல் அறிவைப் பயன்படுத்தி அதை சாத்தியமாக்கியதுதான். முடியாததை முடித்துக்காட்டுவதில் கோவை மக்களுக்கு பெரும் சந்தோஷம். கோயமுத்தூரில் பாதுகாப்பு துறை சார்ந்த தொழில்களுக்கும் பிற தொழில்துறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, கோவை கொடிசியாவில் திறனை அதிகரிக்க பாதுகாப்பு துறை முடிவெடுத்தது.

பாதுகாப்பு துறை
பாதுகாப்பு துறைக்கு உபகரணங்கள் செய்யும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசால் இந்த ஆண்டு 143 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 32 புதிய தொழில் திட்டங்களை, பாதுகாப்பு துறையிடம் சொல்லி இருக்கிறார்கள். அதில் 20 தொழில்கள் பாதுகாப்பு துறை அனுமதி அளித்திருக்கிறது. கோவையில் இஸ்ரோவுக்கு தேவையான உதிரிபாகங்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாது, இஸ்ரோவுக்கு தேவையான ஆராய்ச்சிகளும் இங்கு நடைபெறுகிறது.

டி.ஆர்.டி.ஓ
பாதுகாப்பு துறை பட்ஜெட்டில், தனியார் பங்களிப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல டி.ஆர்.டி.ஒ-வும் விரைவில் தனியார் பங்களிப்பை கொண்டுவரவுள்ளது. பாதுகாப்புதுறை அலுவலர்களை விரைவில் சந்தித்து அவர்களிடம், கோவை பாதுகாப்பு துறைக்கான தொழில் அமைப்புகள் குறித்து பேச இருக்கிறார்கள் கோவை நகர் தொழில் கூட்டமைப்பினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications