கோவையில் "கொரோனா தேவி"க்கு சிலை.. 48 நாள் பூஜைகள் ஆரம்பம்.. பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு
கோவை: உலகம் முழுக்க.. அதிலும் குறிப்பாக, நமது நாட்டில் கொரோனா பரவல் மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கோவை நகரத்தில், கொரோனா தேவி என்ற பெயரில் அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
48 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பிறகு, கொரோனா தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. நம்மூரில் ஏற்கனவே இருக்கும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள கூட மக்கள் அச்சப்படுகிறார்கள். ஆனால் இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது. இளம் வயதைச் சேர்ந்த பலரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தேவி சிலை
இந்த நிலையில்தான், கொரோனாவிலிருந்து தப்பிக்க கொரோனா தேவி சிலையை உருவாக்கி அதற்கு பூஜைகள் செய்ய தொடங்கியுள்ளனர் கோவை நகரில். காமாட்சிபுரி பகுதியிலுள்ள 51வது சக்தி பீடத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காமாட்சிபுரி ஆதீனம், ஸ்ரீ சிவலிங்கேஸ்வரா சுவாமிகள் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதை பாருங்கள்.

பிளேக் மாரியம்மன் வழிபாடுகள்
கோவிட்-19 என்ற வைரஸ், மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இதை மனதில் வைத்து, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம். 400 வருடங்கள் முன்பாக, பிளேக் நோய் பரவியபோது, பிளேக் மாரியம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு வழிபடப்பட்டது. காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோய்களின்போது, தங்களை காப்பாற்ற, அம்மனை வழிபட்டது வரலாறு.

இடையூறுகளை நிறுத்த
கடவுள் மட்டுமே ஒரே நம்பிக்கை என்ற நிலையில், இதுபோல சிலைகள் வடிக்கப்பட்டு வழிபாடுகள் நடந்துள்ளன. சில மரங்கள் கூட வழிபாடு செய்யப்பட்டுள்ளன. முன்பு அப்படி நடைமுறை இல்லாதபோதிலும், இடையில் ஏற்பட்ட இடையூறுகளை களைய இப்படிச் செய்யப்பட்டன. அதே மாதிரிதான், கொரோனாவின் கோரத் தாண்டவத்தை நிறுத்தச் செய்ய, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம்.

மஹா ஹோமம்
48 நாட்கள் மகா யக்ஞம் நடத்தி, வழிபடுவோம். பக்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் பூஜையில் கலந்து கொள்ள அனுமதியில்லை. கோவில் பூசாரிகள் மட்டுமே பூஜைகள் நடத்துவார்கள். மாரியம்மன், மாகாளியம்மன் வழிபாட்டை போலவே, கொரோனா தேவி வழிபாடும் முக்கியமானது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications