சனியன்கள் ஒழிந்தது? வாய் துடுக்கு ஆர்எஸ் பாரதி! இத்தோடு பேசுவதை நிறுத்திக்கனும்! சண்முகம் வார்னிங்!
கோவை; திமுகவுடன் வலுவான கூட்டணி இருந்த போது தான் கடந்த தேர்தலில் நாங்கள் உட்பட தோல்வி அடைந்தோம். அதற்கு திமுக தான் காரணம் என்று நாங்கள் சொல்லவில்லை எனவும், ஆர்எஸ் பாரதி மூத்த அரசியல்வாதி பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். வாய் துடுக்காக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி சங்கம்பாளையம் காலனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா குழு அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்து , நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," 13 கோடி மக்களின் வாக்குரிமைகளை மீட்டெடுக்க இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் போராட்டத்தில் திமுகவும் இணைய வேண்டும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் டெல்லி போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
பெ.சண்முகம்
அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது என முடிவு எடுக்கப்பட்டு தேதிகள் அறிவிக்கப்படும். இந்த சூழலில் இன்று திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுள்ளது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எஸ்ஐஆர் நடவடிக்கை
ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எஸ்ஐஆர் நடவடிக்கை காரணமாக வாக்குரிமை இழந்துள்ள 13 கோடி பேரின் வாக்குரிமையை மீட்கப்பட வேண்டும் காவல்துறையினரின் அடக்குமுறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தலைவரை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய எம்பிக்கள் சந்திப்பார்கள் என தெரியவருகிறது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி
இந்த கோரிக்கையை பொருத்தவரை இந்திய கூட்டணி கட்சி சார்பில் நடைபெறும் போராட்டமாக இருந்தாலும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்துகின்ற போராட்டமாக இருந்தாலும், இந்தியா முழுவதும் ணவர்களும் இளைஞர்களும் நடத்துகின்ற போராட்டங்களாக இருந்தாலும் சரி, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தான் போராட்டம் நடைபெறுகிறது. கட்சிகளுக்கு இடையே பல்வேறு முரண்பாடுகள் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் இந்த பிரச்சனைக்காக நாடு முழுவதும் ஒருங்கிணைந்து போராடி கொண்டு வருகிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மக்களுடைய வாக்குரிமை என்பது அடிப்படையான ஜனநாயக உரிமை. இந்த போராத்தில திமுகவும் இணைய வேண்டும் வேண்டுகோளை வைக்கின்றேன். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் முரண்பாடு உள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல காங்கிரஸ்க்கும் எங்களுக்கும் முரண்பட்ட கருத்து உண்டு. இந்த முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு முதலில் அடிப்படை வாக்குரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும்.
திமுக
ஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் முனைப்பாக செயல்படுகிறோம். இக் கோரிக்கையில் மாறுபட்ட கருத்துக்கள் கிடையாது. திமுகவும் நாடு தழுவிய போராட்டத்தில் இணைய வேண்டும். திமுகவுடன் வலுவான கூட்டணி இருந்த போது தான் கடந்த தேர்தலில் நாங்கள் உட்பட தோல்வி அடைந்தோம். அதற்கு திமுக தான் காரணம் என்று நாங்கள் சொல்லவில்லை.
ஆர்எஸ் பாரதி
ஆர்எஸ் பாரதி மூத்த அரசியல்வாதி பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். வாய் துடுக்காக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கூட்டணியில் இருந்த போது தான் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளின் பலம் இல்லாமல் அவர்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது. மூத்த அரசியல் தலைவர் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்.
இளைய தலைமுறை
பலமுறை வாய் துடுக்காக பேசியிருக்கிறார். கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். அத்தகைய போக்குகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய மூத்த தலைவர்கள் பேசுவதை தவிர்ப்பது இளைய தலைமுறையினருக்கும் இளையவர்களுக்கு நல்ல வழி காட்டக் கூடிய ஒன்றாக இருக்கும்." என்றார்.


Click it and Unblock the Notifications
