ஒரு ரூபாய் காயினை சுண்டி விட்டு.. அடப்பாவி மலைச்சாமி.. என்னா மாதிரி திருட்டு கூட்டம் பாருங்க மக்களே
கோவை பஸ்ஸில் நூதனமாக திருடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்
Recommended Video
கோவை: ரஜினியின் சிவாஜி படத்துல.. ஒரு ரூபாய் காயின் கோடி ரூபாயாக பெருக்கெடுக்குமே.. அந்த மாதிரி, ஒரு ரூபாய் காயினை சுண்டிவிட்டு, கரன்சியை அள்ளி உள்ளார் ஒரு கொள்ளை கூட்ட தலைவன் மலைச்சாமி!
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் அபினவ். இவர் ஒரு தங்க வியாபாரி. இவரிடம் வேலை பார்ப்பவர்தான் ரவிச்சந்திரன். இவருக்கு வயது 60 பெரியவர்.
போன மாசம் 20ம் அபினவ் நகைகளை விற்பனை செய்வதற்காக, ரவிச்சந்திரனை சேலத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார். சேலத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு கொடுத்தது போக, மீதம் 116 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு ரவிச்சந்திரன் கோவை வந்தார்.

காணவில்லை
ஒரு தனியார் பஸ்ஸில் ஏறினார். பீளமேடு வந்தபோது, நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக பீளமேடு போலீசில் புகார் தரவும் தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை போலீசார் தேடி வந்தனர். பின்னர், கொள்ளை போனதாக சொல்லப்பட்ட தனியார் பஸ்ஸில் இருந்த சிசிடிவி காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது போலீசாருக்கே அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

சுண்டி விடுகிறார்
5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பஸ்ஸில் ஏறுகிறது. 5 பேருமே செம டீசன்ட்டாக டிரஸ் அணிந்துள்ளனர். ரவிச்சந்திரனுக்கு பக்கத்திலும் பின்னாலும் அந்த 5 பேர் சூழ்ந்து உட்கார்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர், ஒரு ரூபாய் காயினை பெரியவர் ரவிச்சந்திரன் உட்கார்ந்திருக்கும் சீட் அருகே சுண்டிவிடுகிறான். பின்னர் கீழே விழுந்த காயினை தேடுவது போல பாவ்லா செய்து, ரவிச்சந்திரனுக்கே தெரியாமல், பையில் இருந்து தங்க நகைகளை எடுத்துக்கொள்கிறான்.

கைது
நகைகள் கைக்கு வந்தது, சிக்னல் காட்டப்பட, அந்த 5 பேருமே பஸ்ஸை விட்டு உடனே இறங்கிவிடுகிறார்கள். இந்த காட்சிகளை வைத்து தேடுதலை வேட்டை தீவிரமாகி, சந்தையில் விற்பனை செய்ய வந்தபோது அந்த கும்பலும் சிக்கிவிட்டது. கொள்ளைகூட்ட கும்பலின் தலைவன் பெயர் மலைச்சாமியாம். கூட்டாளிகள் வீரபாண்டி, சீனிவாச பாண்டியன் ஆகியோர் கைதாகி உள்ள நிலையில், மற்றவர்களை தேடும் படலம் தொடர்கிறது.

மலைச்சாமி
லேசுபட்ட ஆள் இல்லை மலைச்சாமி.. 25-க்கும் மேற்பட்ட கேஸ்கள் இவர் மீது உள்ளது. 2 முறை குண்டர் சட்டத்தில் கைதானவர். ஒரு ரூபாய் காயினை சுண்டவிட்டே.. பணத்தில் புரண்டு உள்ளார் மலைச்சாமி. இப்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications