கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க பொண்டாட்டிக்காக என் வாய்ப்பை மறுப்பீங்களா? சீறிய திமுக பெண் நிர்வாகி! ஆப் செய்த செந்தில் பாலாஜி

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: திமுக கூட்டம் ஒன்றில் திமுக மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் பேசிய விதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் கொங்கு மண்டலம் மொத்தத்தையும் திமுக கைப்பற்றியுள்ளது. முக்கியமாக கோவை தேர்தல் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி உழைப்பால் திமுக மாபெரும் வெற்றியை கோவையில் பெற்றுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு தற்போது மேயரை தேர்வு செய்ய ஆலோசனை நடந்து வருகின்றன. மேயர் ரேஸில் பல நிர்வாகிகள் இருப்பதால் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை செய்து வருகிறார்.

 செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

இந்த நிலையில் கோவையில் நேற்று ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கலந்து கொண்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த மேடையில் இருந்தார். கோவை மற்றும் மற்ற சில கொங்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் இந்த மேடையில் இடம்பெற்று இருந்தனர். தேர்தல் சீட் கிடைக்காத விரக்தியில் மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இந்த கூட்டத்தில் கடுமையாக பேசியதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

 மீனா ஜெயக்குமார்

மீனா ஜெயக்குமார்

மீனா ஜெயக்குமார் பெசும்போது, கோவையில் திமுக வென்றதில் மகிழ்ச்சி. அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை பொறுப்பாளராக நியமித்த போது ஒரு நல்ல ஆம்பிளை கோவைக்கு வந்துவிட்டார் என்று சந்தோஷப்பட்டேன். தலைவர் நல்ல ஆண் ஒருவரை அனுப்பி இருக்கிறார் என்று சந்தோஷமாக இருந்தேன். என்னை தேர்தலில் புறக்கணித்து உள்ளனர்.

 கார்த்தி

கார்த்தி

மாவட்டப் பொறுப்பாளர் கார்த்தி சொல்லித்தான் எனக்கு இந்த புறக்கணிப்பு நிகழ்ந்து உள்ளது. அவர்தான் எனக்கு எதிராக பேசி வருகிறார். நான் மனம் விட்டு சொல்கிறேன்.. என்னை பற்றி அவர் மோசமான வார்த்தைகளில் பேசினார். (மேடையில் அந்த வார்த்தைகளை குறிப்பிட்டார் மீனா ஜெயக்குமார்). என்னை பற்றி பலரிடம் தவறான தகவல்களை பரபபினார்.

புகார்

புகார்

அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர் தொடர்ந்து என்னை பற்றி தவறாக பேசி வருகிறார் என்று கூறி மீனா ஜெயக்குமார் மாவட்டப் பொறுப்பாளர் கார்த்தி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதோடு அங்கேயே கெட்ட வார்த்தைகளில் பேசியவர், சில தகாத சொற்களை பயன்படுத்தி தன்னை மாவட்டப் பொறுப்பாளர் கார்த்தி திட்டியதாகவும் கூறினார். இதனால் மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.

 மோசமான வார்த்தைகள்

மோசமான வார்த்தைகள்

ஆனால் மீனா ஜெயக்குமார் பேச்சை நிறுத்தவில்லை.. உங்க பொண்டாட்டிக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் விட்டுடீங்க என்று மாவட்டப் பொறுப்பாளர் கார்த்தி மீது மீனா குற்றஞ்சாட்டினார். இதையடுத்து மேடையில் கைதட்டல்கள் கேட்டன. இதையடுத்து அங்கு இருந்த செந்தில் பாலாஜி மீனா ஜெயக்குமாரை பார்த்து.. பிறகு பேசுங்கள் என்று கை காட்டினார். ஆனால் அதை மீனா பார்க்கவில்லை. தொடர்ந்து மீனா ஜெயக்குமார் மாவட்டப் பொறுப்பாளர் கார்த்தி பற்றி ஒருமையில் பேசினார்.

 புகார் மேல் புகார்

புகார் மேல் புகார்

இதனால் அங்கு கூட்டத்தில் இருந்தவர்கள்.. மாவட்டப் பொறுப்பாளர் கார்த்தி பற்றி நீ எப்படி பேசலாம்.. மன்னிப்பு கேள் என்று கோஷம் போட்டனர். இதனால் அங்கு பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தனக்கு முன்பு இருந்த மைக்கை எடுத்த செந்தில் பாலாஜி.. கூட்டத்தில் இருக்குறவங்க அமைதியா இருங்க.. தப்பா பேசாதீங்க என்றார். அதன்பின் மீனா ஜெயக்குமாரை அமைதிப்படுத்தி அமரும்படி கூறினார். புகார் இருந்தால் தனிப்பட்ட வகையில் சொல்லுங்கள்.

 சமாதானம்

சமாதானம்

இப்படி பொது மேடையில் பேச வேண்டாம். இப்படி பேசுவது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும். நாம் கட்சி ரீதியான ஆலோசனையில் இருக்கிறோம். உங்கள் புகாரை தனியாக கொடுங்கள் என்று கூறினார். இதையடுத்து ஒரு வழியாக சமாதானம் அடைந்த மீனா ஜெயக்குமார் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.

English summary
DMK woman cadre's speech in a meeting with Minister Senthil Balaji creates discussions and controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X