திமுகவுடன் மோதுவது பங்காளி சண்டை.. நானே திராவிட கட்சிகளில் இருந்து வளர்ந்தவன்.. சீமான் அந்தர் பல்டி!
கோவை: அதிமுக திமுகவுடன் நான் மோதுவது என்பது பங்காளி சண்டைதான். திராவிட கட்சிகளில் இருந்து வளர்ந்து வந்தவன் தான் நான். திராவிட கழகங்களுக்கும் நாம் தமிழருக்கும் இருப்பது சகோதர யுத்தம் என சீமான் 'பல்டி' அடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடப் போவதாக ஒரு தகவல் அண்மைக்காலமாக உலவி வருகிறது. தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கும் நோக்கில், தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட பரிசீலிப்பதாக பரவி வரும் தகவல் அரசியல் அரங்கில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். அவர் தமிழ்நாட்டில் போட்டியிடவில்லை என்றால், நான் எம்.பி தேர்தலில் போட்டியிடமாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து திமுக நேரடியாக களம் கண்டால், நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. திமுகவுக்கு ஆதரவளிக்கும் என சீமான் தெரிவித்துள்ளார். திமுகவிற்கு ஆதரவளிப்போம் என சீமான் தடாலடியாகத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் போட்டியிடுவதாக கூறுகின்றனர். அப்படி பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடும் பட்சத்தில் திமுக வேட்பாளரை நிறுத்தட்டும். பிரதமர் மோடிக்கு எதிராக திமுக நேரடியாக போட்டியிட்டால் அத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. ராமநாதபுரம் தொகுதியில் திமுகவை ஆதரிக்கும்." எனத் தெரிவித்தார்.
மேலும், அதிமுக திமுகவுடன் நான் மோதுவது என்பது பங்காளி சண்டைதான். திராவிட கட்சிகளில் இருந்து வளர்ந்து வந்தவன் தான் நான். திராவிட கழகங்களுக்கும் நாம் தமிழருக்கும் இருப்பது சகோதர யுத்தம். திமுகவை வீழ்த்துவதற்கு எனக்கு அண்ணாமலை எதற்கு? திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்பது எனது கனவல்ல, தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. நாம் தமிழர் என்பதே சாதி ஒழிப்பு தான் என்றும் சீமான் பேசியுள்ளார்.
நடிகர் விஜயலட்சுமி புகார் மீது சீமான் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுகவை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும் என்றும், திமுக அதிமுகவுடன் நடப்பது சகோதர யுத்தம் என்றும் சீமான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், சீமானுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. தனித்துப் போட்டியிட்டு தன்னை விட அதிக ஓட்டு வாங்கிக் காட்ட முடியுமா என அண்ணாமலைக்கு சீமான் சவால் விட்ட நிலையில், அவரும் அதை ஏற்றுக்கொள்வதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications