திமுகவின் பல நாள் கனவு.. கோவையில் நாளை நிறைவேற்றும் ஸ்டாலின்.. அதிரும் ஏற்பாடு

Subscribe to Oneindia Tamil

கோவை: சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து 6 மாதங்களாகியும் தமிழக அரசியலின் பரபரப்பு ஓயவில்லை. 50 ஆண்டு கால அரசியலில் எதிரும், புதிருமாக இருந்த திமுக மற்றும் அதிமுக இணைந்து தவெகவை மாறி மாறி விமர்சனம் செய்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை கோவை செல்லவுள்ளார். பெரியார் அறிவுலகத்துக்காக பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதேபோல திமுகவின் பல நாள் கனவை நிறைவேற்றும் செயலிலும் ஈடுபட போகிறார்.

தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு திராவிட இயக்கங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சியில் இருந்தன. இரு பெரும் திராவிட கட்சிகளை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. ஆட்சி மாற்றத்தால் தமிழக அரசியலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தீவிர பாஜக எதிர்ப்பில் இருந்த திமுக, இப்போது தவெக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. முன்பு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், ஐயுஎம்எல் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகயில் தவெக கூட்டணியில் இணைந்து திமுகவை விமர்சித்து வருகிறார்கள்.

Stalin Coimbatore

ஸ்டாலினுக்கு பாராட்டு விழா

தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க திமுக கடுமையாக முயற்சி செய்தது. அது முடியவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினே கொளத்தூரில் வெற்றி பெற முடியவில்லை. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலிலும் தவெகவே வெற்றி பெற்றது. திமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு, வழக்கு, கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தவெகவுக்கு கடுமையான அரசியல் சண்டை கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டது. பணிகள் முடியாததால் தேர்தலுக்கு முன்பு திறக்க முடியவில்லை. தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாறியதால், கடந்த மாதம் அதை முதலமைச்சர் திறந்து வைத்தார். திமுக ஆட்சிக்கு விஜய் ஸ்டிக்கர் ஒட்டுவதில் என்ன பயன் இருக்கிறது என்று விமர்சனம் எழுந்தது. தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் நாளை கோவை வரவுள்ளார்.

திமுகவின் பல நாள் கனவு

பெரியார் அறிவுலகத்தை பார்வையிடவுள்ளார். பெரியார் அறிவுலகம் கட்டியதற்காக, திராவிடர் கழகம் சார்பில் வ.உ.சி மைதானத்தில் நாளை மாலை பாராட்டு விழா நடைபெறுகிறது. கோவை திமுகவுக்கு ஒருங்கிணைந்த அலுவலகம் இல்லை. மாநகர், தெற்கு, வடக்கு ஆகியவற்றுக்கு தனித்தனி அலுவலகங்கள் உள்ளன. அவை மிகவும் சிறிதாக உள்ளது. செந்தில் பாலாஜி கோவை பொறுப்பாளராக இருந்தபோது கோவை திமுகவுக்கு பிரம்மாண்ட அலுவலகம் கட்ட திட்டமிட்டார்.

இதற்காக நீலாம்பூரில் இடமும் பார்க்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் கட்டுமான பணிகள் தாமதமாகி வந்தது. இந்நிலையில் நீலாம்பூரில் திமுக அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நாளை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் செய்கிறார்கள். செந்தில் பாலாஜி மேற்பார்வையில் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் கோவை திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+