பட்டை உரியும் கட்டை வேகும்! கருணாநிதி பிறந்தநாளில் பிரம்மாண்டம்.. மாஸ் காட்டிய கோவை உடன்பிறப்புகள்!
கோவை : திமுக முன்னாள் தலைவரும் மறைந்த தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதியில் பிறந்தநாளை முன்னிட்டு , அவர் சாதிய அடக்குமுறை பற்றி பேசிய வசனங்களை 30 அடி போஸ்டராக ஒட்டி கோவை திமுகவினர் கொண்டாடினர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் மு.கருணாநிதியின் 99வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
மேலும் அவரது பிறந்த நாளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் கட்சியின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.

கருணாநிதி பிறந்ததாள்
இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.

தொண்டர்கள் உற்சாகம்
இதேபோல் இந்நிலையில், திமுக எம்எல்ஏவும், கலைஞரின் பேரனுமான உதயநிதி ஸ்டாலின், சென்னை கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினார். இதேபோல் தமிழகம் முழுவதும் அமைச்சர், நிர்வாகிகள், பல்வேறு உதவிகள் வழங்கி கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

கோவை திமுக
இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக கோவை மாநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ரயில் நிலையம் காந்திபுரம் உக்கடம் போன்ற பகுதிகளில் கலைஞர் சாதிய அடக்குமுறை பற்றி பேசிய வசனமான "கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்" என்ற வரிகளை போஸ்டராக ஒட்டியுள்ளனர்.

பிரம்மாண்ட போஸ்டர்
ரயில் நிலையம், உக்கடம், போன்ற பகுதிகளில் இந்த போஸ்டரை சுமார் 30 அடி நீளத்திற்கு ஒட்டியுள்ளனர்.
பெரிய கடை வீதி பகுதி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை நிர்வாகியும், வர்த்தக அணி துணை நிர்வாகி ஒருவரும் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர்.இந்த 30 அடி நீள போஸ்டரை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். மேலும் இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications