உஷாரய்யா.. உஷாரு..! வீட்டிலிருந்தே மாதம் 30 ஆயிரம்! பெண்களை குறிவைக்கும் ‘பென்சில் மோசடி’ கும்பல்!
கோவை : வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம்.. படிப்பு தேவையில்லை.. ஒரு மணி நேரம் ஒதுக்கினாலே மாதம் பத்தாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்ற ரீதியிலான மோசடி கும்பலின் நடமாட்டம் கோவையில் அதிகரித்திருக்கிறது.
டாக்குமெண்ட் வேண்டாம், செக் லீப் வேண்டாம், கையெழுத்து கூட வேண்டாம் மொபைல் போனில் அப்ளை செய்தால் அடுத்த நொடியே உங்கள் அக்கவுண்டில் பணம் கிடைக்கும் என ஆன்லைன் சூதாட்டங்களை போல மக்களிடம் பணம் பறிக்கும் லோன் ஆப்களின் கொடூரம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.
கேட்டவுடன் பணம் கிடைக்கிறது என்பதற்காக பலரும் அதனை டவுன்லோட் செய்து ஆயிரக்கணக்கில் கடன் பெறும் நிலையில் அவற்றிற்கு ஆயிரக்கணக்கில் கொடூர வட்டி வசூலிக்கப்படுகிறது.

மோசடி கும்பல்
குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்தாவிட்டால் கடன் பெற்றவர்களையும் அவர்களது குடும்பத்துப் பெண்களையும் ஆபாசமாக சித்தரித்து வாட்ஸாப் மூலம் புகைப்படங்கள் பரப்பப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கடன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம் என அரசும் ரிசர்வ் வங்கியும் எச்சரித்தும் பொது மக்களின் விழிப்புணர்வின்மை காரணமாக கடன் செயலிகளின் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்த விழிப்புணர்வு காரணமாக தற்போது இதுபோன்ற மோசடிகள் குறைந்துள்ளது.

வீட்டில் இருந்தே பணம்
இந்நிலையில் வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம் படிப்பு தேவையில்லை. ஒரு மணி நேரம் ஒதுக்கினாலே மாதம் பத்தாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்ற ரீதியிலான மோசடி கும்பலின் நடமாட்டங்களும் அதிகரித்திருக்கிறது. கல்லூரி மாணவர்கள், வயதானவர்கள், ஓய்வு பெற்றவர்கள், குடும்பத் தலைவிகளை குறிவைத்து ஏதாவது ஒரு சாதாரண வேலையை சொல்லி அதன் மூலம் இவ்வளவு வருமானம் கிடைக்கும் என ஆசை காட்டி அதன் பின்னர் அவர்களை ஏமாற்றும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

பென்சில் மோசடி
பெரும்பாலும் ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை சிறிய தொகையை குறி வைத்து இது போன்ற மோசடிகள் நடைபெறுகிறது, அந்த வகையில் கட்டம் கட்டமாக இருக்கும் அதற்குள் ஒன்று இரண்டு என எழுதி தர வேண்டும். ஒரு பேப்பருக்கு பத்து ரூபாய் கிடைக்கும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மோசடி கும்பல் தமிழகம் முழுவதும் பல குடும்பத் தலைவிகளை ஏமாற்றி லட்ச கணக்கில் பணம் சம்பாதித்தது. அந்த வகையில் தற்போது கோவை மாவட்டத்தில் புதுவகை மோசடி ஒன்றை அரங்கேற்றி வருகிறது.

பேஸ்புக் விளம்பரம்
இந்த மோசடி கும்பல் மொத்தமாக அனுப்பப்படும் பென்சில்களை 10 -10 பென்சில்களாக பிரித்து பேக்கிங் செய்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் பத்தாயிரம் ரூபாய் முன்பணமும், 30 ஆயிரம் ரூபாய் மாத சம்பளமும் கிடைக்கும் என கோவையில் சமூக வலைதளங்களில் விளம்பரம் ஒன்று பரவி வருகிறது. பென்சில் எடுக்கும் வேலைக்கு இவ்வளவு சம்பளமா என நினைத்து பலர் பெண்கள் குறிப்பிட்ட அந்த எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர்.

600 மோசடி
மேலும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளும் பெண்களிடம் பேக்கிங் செய்வதற்கு பொருட்கள் அனுப்பும்போது பத்தாயிரம் ரூபாய் முதலில் செலுத்தி விடுவோம். அதன் பின்னர் மாதம் பென்சில் பேக்கிங் செய்து அனுப்பினால் 30 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வேலை செய்து கொள்ளலாம் என மூளை சலவை செய்கின்றனர். ஓகே சொல்லும் பெண்களிடம் முதலில் 600 ரூபாய் செலுத்த வேண்டும் என சொல்கிறார்கள். பத்தாயிரம் ரூபாய் கிடைக்கிறதே என 600 ரூபாய் செலுத்திய உடன் குறிப்பிட்ட அந்த எண்ணை மோசடி கும்பல் பிளாக் செய்து வருகிறது.

போலீசார் எச்சரிகை
மிகச் சிறிய அளவிலான தொகை என்பதால் பலர் இதனை கடந்து சென்று விடுகின்றனர். ஆனால் 100 பேரிடம் 600 ரூபாய், ஆயிரம் பேரிடம் 600 ரூபாய் என வரும் போது இது மிகப்பெரிய தொகையாக இருக்கிறது. தற்போது இந்த மோசடி கும்பலை நடமாட்டம் கோவை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பரவி இருக்கிறது. மேலும் ஆர்வத்தில் சிலர் ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் என அவர்கள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் கொடுத்து விடுகின்றனர். சிலரிடம் ஆன்லைன் மூலம் கையெழுத்தை ஜெராக்ஸ் எடுத்து அல்லது ஸ்கேன் செய்து அனுப்புமாறு கூறியிருக்கின்றனர். இதனால் பணம் மோசடி போவதோடு முக்கிய ஆவணங்களால் மோசடி செயல்களில் மேலும் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. எனவே போதுமக்கள் பகுதி நேர வேலை என சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் எனக் கூறியிருக்கின்றனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications