நிரம்பி வழியும் பில்லூர், சோலையாறு அணைகள்..உபரி நீர் திறப்பால் ஆறுகளில் பெருகும் வெள்ளம்
கனமழை காரணமாக அணைகள் நிரம்பி வழிவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை: கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியது. அணையில் இருந்து 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால் ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் சோலையாறு அணை நிரம்பியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது.

நீர்வரத்து அதிகரிப்பால், அணையின் நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்து, நேற்று பில்லூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதாவது, அணையின் மொத்த நீர்தேக்க உயரம் 100 அடி ஆகும். பாதுகாப்பு கருதி 97.5 அடி வரைக்கும் மட்டுமே நீர் தேக்கப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட அளவை கடந்தது மற்றும் தற்போது அணைக்கு, விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து வந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று மதியம் 4 மதகுகள் வழியாக பில்லூர் அணையில் இருந்து, விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரி நீராக பவானியாற்றில் திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீர் வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றின் வேகம் அதிகரித்து, வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் பவானியாற்று கரையோர பகுதிகளில் வசிக்கும் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினரும் கரைப் பகுதிகளில் பாதுகாப்பு உபகரணங்களுடன் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.
இதே போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் மழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. தற்பொழுது அணைக்கு நீர் வரத்து 6916 கன அடியாகவும் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 5423 கன அடியாகவும் உள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி அணையில் இருந்து மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வால்பாறை பகுதி கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கோவை மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் பொள்ளாச்சி ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவி எனப்படும் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வால்பாறை கவர்கள் சக்தி எஸ்டேட் பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், பொள்ளாச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியார் கவி அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வால்பாறையில் கனமழை பெய்வதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் தொடர்மழை பெய்து வருவதால் மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கனமழை நீடிப்பதால் இன்றும் நான்கு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications