அன்னூர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்..கோபுரத்தின் மீது 121 கிலோ மலர் தூவிய ஹெலிகாப்டர்
கோவை: அன்னூர் அருகே கரியா கவுண்டனூரில் 70 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் கோபுரத்தின் மீது வட்டமடித்த ஹெலிகாப்டர் 121 கிலோ மலர்களை தூவியது பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இறைவனுக்கு கோயில் கட்டி வழிபடுவது வழக்கம். புதிதாக ஓர் ஆலயம் எழுப்பப்படும்போது, விக்கிரகங்களை ஆலயத்தினுள் பிரதிஷ்டை செய்வதோடு மட்டும் ஆலயம் முழுமை பெற்றுவிடுமா என்றால், நிச்சயமாக இல்லை. அது எப்போது முழுமை பெறும்? ஆலயத்தில், 'கும்பாபிஷேகம்' நடந்த பின்னர்தான் அது வழிபாட்டுக்கு உரிய ஸ்தலமாக முழுமை பெறுகிறது.
கும்பம் என்றால் 'நிறைத்தல்' என்று பொருள். நம் ஆலயங்களில் வீற்றிருக்கும் விக்கிரகங்களுக்கு, அபிஷேகங்கள் மூலம் இறைசக்தியை நிறைத்தலே கும்பாபிஷேகம். இதனை சைவர்கள் 'மகா கும்பாபிஷேகம்' என்றும் வைணவர்கள் 'மகா சம்ப்ரோக்ஷணம்' என்றும் அழைக்கிறார்கள். மேலும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் மூலம் யாகங்கள் செய்யப்பட்ட தீர்த்தங்களால் இறைவன் மீதும், கோபுரக் கலசங்கள் மீதும் புனித தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம் மூலமாகவே விக்கிரகங்கள் தெய்வசக்தியைப் பெறுகின்றன. பெரும்பாலும், கும்பாபிஷேகமானது 12 வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. இதன் காரணம், நாம் கும்பாபிஷேகம் செய்யும் போது சாத்தப்பட்ட அஷ்டபந்தனம் எனப்படும் மருந்து 12 வருடங்கள் வரைதான் சக்தியோடு இருக்கும்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
கோயில்களில் அஷ்டபந்தன மருந்தை 12 வருடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பது ஆகம நியதி. அதன்படி அனைத்து ஆலயங்களிலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.
அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை. இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடித்து பக்குவமாக தயாரிக்கிறார்கள்.

அஷ்ட பந்தன மூலிகை
உலக உயிர்களெல்லாம் நலமாக இருக்க வேண்டுமென்றால், மூல தெய்வ மூர்த்தம், தனது ஆதார பீடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உலகத்துக்கும் உலகில் வாழும் மக்களுக்கும் சிறப்பு. மூலவ மூர்த்தி தொடங்கி, எல்லா தெய்வங்களின் திருமேனிகளும் பீடத்திலிருந்து அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அஷ்டபந்தன மூலிகை மருந்தைச் சாத்துகிறார்கள். மேலும் கோயில்களில் ஏதேனும் புனரமைப்பு செய்தாலும் கும்பாபிஷேகம் செய்யப்படும்.

கோவை கும்பாபிஷேகம்
இதனிடையே கோவில்களில் கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியா கவுண்டனூரில் 70 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவிற்கு ஒன்றரை கோடி ரூபாயில் திருப்பணி செய்யப்பட்டது.

மலர் தூவிய ஹெலிகாப்டர்
கும்பாபிஷேக விழாவில் கொச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட சிப் என்னும் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் பத்து நிமிடம் கோவிலுக்கு மேலே கோபுரத்திற்கு மிக அருகே நான்கு முறை வட்டமடித்து 121 கிலோ மலர்களை தூவியது.
நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை மாவட்டத்தில் அன்னூரில் ஒரு கிராம கோயிலில் ஹெலிகாப்டர் வாயிலாக மலர் தூவப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பக்தர்கள் ஆச்சரியம்
கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஹெலிகாப்டர் மூலம் கோபுரத்தின் மீது மலர் தூவியதை ஆர்வத்துடன் பார்த்தனர். மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி ஹெலிகாப்டரை இப்பணியில் ஈடுபடுத்தியதாக கோயில் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications