அதிகம் அறிந்து கொள் அச்சம் குறையும்.. கோவை பெரியார் அறிவுலக பதிவேட்டில் விஜய் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கோவை: முதலமைச்சரான பிறகு விஜய் முதல்முறையாக கோவை அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கோவையில் அவரை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். விமான நிலையம் முதல் காந்திபுரம் வரை சுமார் 10 கி.மீ தொலைவுக்கு அவர் ரோட்ஷோ சென்றார். பெரியார் அறிவுலகம் திறந்து வைத்துவிட்டு விஜய் மேடையில் எதுவும் பேசவில்லை. ஆனால் நூலக பதிவேட்டில் அவர் அதிகம் அறிந்து கொள். அச்சம் குறையும் என்று இரண்டு வரிகளில் குறிப்பிட்டு மாணவர்களுக்கு ஸ்ட்ராங் மெசேஜை சொல்லியுள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.301.71 கோடி மதிப்பில் 7 தளங்களுடன் திமுக ஆட்சியில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டது. நூலகம் மற்றும் அறிவியல் மையமாக இது செயல்படும். 2025 நவம்ரில் அப்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் திமுக ஆட்சியில் 95 சதவிகிதம் பணிகள் முடிந்தன. கடந்த ஜனவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டது. தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் நடக்கவில்லை. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் எஞ்சிய பணிகள் முந்தன. இதனை முதலமைச்சர் விஜய் நேற்று திறந்து வைத்தார்.

know-more-fear-less-cm-vijay-at-coimbatore-periyar-arivulagam-register

கோவை பெரியார் அறிவுலகம்

தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் பிரிவு, ஆடிட்டோரியம், கோளரங்கம், முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் கண்காட்சி அறை, 2ஆம் தளத்தில் சொந்த நூல்கள் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகம், 3 ஆம் தளத்தில் நிர்வாக அலுவலகம், போட்டி தேர்வுக்கான நுாலகம், 4 ஆம் தளத்தில் பருவ இதழ்கள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, 5 ஆம் தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், 6 ஆம் தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், 7 ஆம் தளத்தில் அறிவியல் மையம், டிஜிட்டல் நூலகம் உள்ளது.

356 இருக்கைகன் அடங்கிய கலையரங்கம் உள்ளது. மொத்தம் 6.96 ஏக்கரில், 1.98 லட்சம் சதுரடியில் பெரியார் அறிவுலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவில் தவெக மீது திமுக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. திமுக கொண்டு வந்தத்திட்டத்திற்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டுகிறது என்று விமர்சித்து வருகிறார்கள்.

விஜயின் ஸ்ட்ராங் மெசேஜ்

நேற்றைய நிகழ்வில் மேடையில் விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அறிவுலகத்தை திறந்து வைத்தார். நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 7 தளங்களிலும் ஆய்வு செய்து மாணவர்களுடன் உரையாடினார். அறிவுலகத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆனால் நூலக பதிவேட்டில் பெரிய சம்பவம் நடந்தள்ளது. பெரியார் அறிவுலகம் பதிவேட்டில் விஜய் தான் முதலில் கையெழுத்திட்டார்.

அதில் தேதி, பெயர், கமென்ட் ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன. விஜய் பச்சை நிற இங்கில் எழுதியுள்ளார். தேதியில் 16.10.2026 என குறிப்பிட்டு, பெயரில் சி.ஜோசப் விஜய் என தன்னுடைய பெயரை ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கமென்டில், 'Know More Fear less' என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். 'அதிகம் அறிந்து கொள். அச்சம் குறையும்' என்பதே இதன் அர்த்தம். விஜயின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+