வாட்ஸ்அப் திறந்து பார்த்தால்.. அத்தனையும் ஆபாச படம்.. அதிர்ந்த பெண் வக்கீல்.. சிக்கிய கார்த்திகேயன்
கோவை: திடீரென வாட்ஸ்அப்புக்கு வந்த ஆபாச படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டார் அந்த பெண். வக்கீலும் கூட. விடுவாரா, போலீசில் சொல்லி, காமுகனை கம்பி எண்ண வைத்துள்ளார்.
Recommended Video
கோவையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதே நேரம் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்நிலவுவதையும், இந்த சம்பவம் உறுதி செய்வதை போல அமைந்துள்ளது.

திடீரென வந்த ஆபாச படங்கள்
கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்த பெண் வழக்கறிஞர். அவரின், வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆபாச படங்களை அனுப்பி வந்துள்ளார். இதை பார்த்த அந்த பெண் வக்கீல், அதிர்ச்சியடைந்தார். பதில் மெசேஜ் போட்டு, இதுபோன்று அனுப்பாதீர்கள் என்று எச்சரித்துள்ளார்.

பெண் வக்கீல்
இருப்பினும் கேட்பதாக இல்லை அந்த நபர். வேறு வேறு எண்கள் மூலம் பெண் வழக்கறிஞருக்கு அந்த நபர் தொடர்ந்து ஆபாச படங்களை அனுப்பி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் இதுதொடர்பாக மாநகர சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

செல்போன் நம்பரை வைத்து பிடிபட்ட குற்றவாளி
மர்ம நபரின் தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது தொலைபேசி எண் என கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் கார்த்திக்கை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆபாச படங்கள்
போலீசார் தக்க முறையில் விசாரணை நடத்தி கேட்டபோது, அவர்தான் அந்த பெண்ணிற்கு ஆபாச படங்களை அனுப்பியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண்ணின் நம்பர் இவருக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications