கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரொம்ப சாது.. கூச்ச சுபாவம் வேற.. வரையாட்டின் கொம்பை பிடித்து.. 2 பேரை தட்டி தூக்கிய வால்பாறை போலீஸ்

வரையாட்டினை தொந்தரவு செய்த 2 கேரள இளைஞர்கள் கைதானார்கள்

Google Oneindia Tamil News

கோவை: வரையாட்டின் கொம்பை பிடித்து, இளைஞர்கள் 2 பேர் துன்புறுத்தி உள்ளார்கள்.. அது தொடர்பான போட்டோவையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்ட நிலையில், 2 பேருமே இப்போது ஜெயிலில் உள்ளனர்.

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலை சுமார் 40 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது...

இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், என நிறைய விலங்குகள் காணப்படும்.. அதில் வரையாடும் உண்டு.. வனவிலங்குகள் பட்டியலில் இருக்கும் வரையாட்டினை கூடுதல் கவனத்துடன் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்...

நீலகிரி வரையாடு இனத்தை பாதுகாக்க முதல்வர் தனிக்கவனம்! நாட்டிலேயே முதல்முறையாக அசத்தல் அறிவிப்பு! நீலகிரி வரையாடு இனத்தை பாதுகாக்க முதல்வர் தனிக்கவனம்! நாட்டிலேயே முதல்முறையாக அசத்தல் அறிவிப்பு!

கொம்புகள்

கொம்புகள்

வன விலங்குகள் சிலசமயம், காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் சுற்றிதிரிவது வழக்கம்.. அப்படிப்பட்ட வனவிலங்குகளை சில சுற்றுலா பயணிகள் துன்புறுத்துவதாகவும் புகார்கள் கிளம்பின.. குறிப்பாக, வரையாட்டுக்கு நிறைய தொந்தரவு தந்துள்ளதாக தெரிகிறது. அதன் கொம்புகளை பிடித்து, சுற்றுலா பயணிகள் போட்டோ எடுத்து கொள்வார்கள்.. இந்த விஷயம் கேள்விப்பட்ட ஆனைமலை புலிகள் காப்பக கள டைரக்டர் ராமசுப்பிரமணியம், வன விலங்குகளை அச்சுறுத்தி போட்டோக்களை எடுத்தால் கைது செய்யப்படுவார்கள் என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

 தூக்கிய போலீஸ்

தூக்கிய போலீஸ்

இப்படித்தான் 2 நாட்களுக்கு முன்பு, வால்பாறை ரோட்டில் வரையாடுகள் சில நின்று கொண்டிருந்தன.. அந்த வழியாக வந்த 2 பேர், அதன் கொம்புகளை பிடித்து கொடுமைப்படுத்தினர்.. மேலும் அதை போட்டோவும் எடுத்து சோஷியல்மீடியாவில் வெளியிட்டனர். இதை பார்த்து பொதுமக்களும், விலங்குகள் நல ஆர்வலர்களும் அதிர்ந்து போய்விட்டனர்.. அந்த செயலுக்கு கண்டனமும் தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.. இது தொடர்பாக அவர்களிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, 2 பேருமே கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் பெயர் செல்டன், ஜோபி ஆபிரகாம் என்பதும் தெரியவந்தது.

 வரையாட்டு எண்ணிக்கை

வரையாட்டு எண்ணிக்கை

இப்போது இருவருமே கைதாகி உள்ளார்கள்.. வனவிலங்குகளை இதுபோன்று துன்புறுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். எந்த விலங்குகளையுமே, மனிதர்கள் துன்புறுத்தினால் கைது நடவடிக்கை பாயத்தான் செய்யும்.. அதிலும் இந்த வரையாட்டினை பாதுகாப்பது நம்முடைய கடமையாகவும் உள்ளது. காரணம், இந்த வரையாடுதான், நம்முடைய தமிழ்நாட்டின் மாநில விலங்கு என்பது சிலருக்கு தெரியாத விஷயம்.. நிறைய பேர் இந்த வரையாட்டினை நேரில் பார்க்க முடிந்திருக்காது. பெரும்பாலானோர் போட்டோவில் வேண்டுமானால் பார்த்திருக்கலாம்..

 கூச்ச சுபாவம்

கூச்ச சுபாவம்

இதற்கு காரணம், இந்த விலங்குகள் அழியும் நிலையை நோக்கி செல்வதுதான்.. மலைஆடுகளில் 2 வகை உண்டு.. ஒன்று இமாலய மலை ஆடுகள், இன்னொன்று நம்ம ஊர் வரையாடுகள்... இதை நீலகிரி வரையாடுகள் என்றும் சொல்வார்கள்.. இதுபோன்ற ஆடுகள் உயர்ந்த மலைகளில் செங்குத்தான பாறை முகடுகளில்தான் காணப்படும்.. அதுவும், 3000 முதல் 4000 மீட்டர் வரை உள்ள இடங்களில் மட்டும்தான் காணப்படும்.. அதனால்தான் நிறைய பேரால், இந்த ஆடுகளை பார்க்க முடிவதில்லை... பசும் புற்களே இவற்றின் முக்கிய உணவு... இந்த வரையாடுகள் ரொம்ப சாதுவானவை.. ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவையும்கூட.

 லிஸ்ட் எங்கே

லிஸ்ட் எங்கே

பிரிட்டிஷ்காரர்கள் இங்கே வருவதற்கு முன்பு, லட்சக்கணக்கில் இந்த ஆடுகள் இருந்தனவாம்.. அவர்கள் முதன்முதலில் வேட்டையாடியது இந்த வரையாட்டினை தானாம்.. ஆனால், இப்போது ஆயிரக்கணக்கில் மட்டுமே இருப்பதாக சொல்கிறார்கள்.. அதனால், வரையாடுகளை வேகமாக அழிந்து வரும் லிஸ்ட்டில், பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தால் 1996-ம் ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளது. உலகில் எங்குமே காணப்படாத இந்த வரையாடுகள் நம்முடைய ஊரில் இருப்பதுதான் ஆகச்சிறந்த பெருமை. நமக்கான அடையாளமும் இதுபோன்ற சிறப்புகள் என்பதால், அதை போற்றி பாதுகாக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக உள்ளது..!!!

English summary
Most Important varaiyadu, 2 Kerala youngsters torture Varaiyadu and got arrested
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X