கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரைட்டு.. அப்போ.. சி.வி.சண்முகம் எம்.பி ஆனதே செல்லாது.. கோர்ட்டுக்கு போவேன்.. புகழேந்தி தடாலடி!

Google Oneindia Tamil News

கோவை : அ.தி.மு.க செயற்குழுவில் முடிவு செய்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது என்றால், சி.வி.சண்முகம் எம்.பியானதும் செல்லாது என புகழேந்தி போட்டுத் தாக்கியுள்ளார்.

Recommended Video

    Pugalenthi தடாலடி! OPS இல்லன..CV சண்முகத்துக்கு பதவி மட்டும் எப்படி? *Politics

    அ.தி.மு.க பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு அங்கீகாரம் பெறப்படாததால் அந்தப் பதவிகள் காலாவதியாகிவிட்டன என சி.வி.சண்முகம் எம்.பி நேற்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அதிகாரத்தை பயன்படுத்தியே சி.வி.சண்முகம் ராஜ்யசபா எம்.பி ஆகி இருக்கிறார், அப்படியென்றால் அதுவும் செல்லாது என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

    3 பேருதான்.. அவங்களும் எந்தக் கட்சிக்கு போறாங்கனு தெரியல - ஓபிஎஸ்ஸை கிண்டல் செய்த சி.வி.சண்முகம்! 3 பேருதான்.. அவங்களும் எந்தக் கட்சிக்கு போறாங்கனு தெரியல - ஓபிஎஸ்ஸை கிண்டல் செய்த சி.வி.சண்முகம்!

    சி.வி.சண்முகத்திற்கு பயப்படும் அதிமுக

    சி.வி.சண்முகத்திற்கு பயப்படும் அதிமுக

    அ.தி.மு.க முன்னாள் செய்தி தொடர்பாளரும் ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான புகழேந்தி கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "பொதுக்குழுவில் 23 தீர்மானங்களில் எந்தவித திருத்தமும், வேறு எந்த தீர்மானமும் கொண்டு வரக்கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகிறது என்றால், அதிமுக நிர்வாகிகள் 10 நாட்களாக உட்கார்ந்து எதற்கு இவற்றை தேர்வு செய்தனர். அதிமுகவில் இருப்பவர்கள் சி.வி.சண்முகத்திற்கு பயப்படுகின்றனர்.

    ரோடு ரோடாக

    ரோடு ரோடாக

    டிசம்பர் 1ஆம் தேதி செயற்குழுவில் 43 விதியின்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் 5 வருடத்திற்கு தொடரலாம். இரு பதவிகளும் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதை யாராலும் மாற்ற முடியாது. எம்ஜிஆர் கொண்டுவந்த பை-லாவில் கை வைத்துத்தான் இன்று ரோடு ரோடாக அலைகின்றனர்.

     நீதிமன்ற அவமதிப்பு

    நீதிமன்ற அவமதிப்பு

    அனைத்துப் பதவிகளும் போய்விட்டது என சி.வி.சண்முகம் கூறுகிறார் என்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை பேரும் காலியா? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சியை இன்று மக்கள் காறித் துப்புகிறார்கள். எல்லோருடைய பதவியும் பறிபோக சி.வி.சண்முகம்தான் காரணமாக இருக்கிறார். நீதிமன்றத்தை அவமானப்படுத்தி இருக்கின்றனர். ஐகோர்ட் நீதிபதி கொடுத்த தீர்ப்பை தூக்கி எறிந்துள்ளார்கள்.

    கோர்ட்டுக்கு போவோம்

    கோர்ட்டுக்கு போவோம்

    கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி செயற்குழுவின் அதிகாரத்தை பயன்படுத்தி தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்தான் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரை நாடாளுமன்ற உறுப்பினராக்கி இருக்கின்றனர். அப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்றால் சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்ட பதவியும் இருக்காது. இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    English summary
    CV Shanmugam has become a Rajya Sabha MP by using the power of coordinator and that too is not valid, said OPS supporter Pugazhendhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X