கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவை பெட்ரோல் குண்டு! பிஎஃப்ஐ நிர்வாகி கைது! தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமா? கமிஷனர் சொன்ன விளக்கம்!

Google Oneindia Tamil News

கோவை பெட்ரோல் குண்டு! பிஎஃப்ஐ நிர்வாகி கைது! தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமா? கமிஷனர் சொன்ன விளக்கம்!

கோவை : கோவை பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு தொடர்பாக ஓருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவர் தலைமறைவாகியுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

கடந்த வியாழக்கிழமை இரவு கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் மாநகர பாஜக அலுவலகம் மீது அடையாளம் தெரியாத சில நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசினர்.

அதைத்தொடர்ந்து கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவியது.

90’ஸ் கிட்ஸ் தான் குறி! 6 பேரை கவிழ்த்த 'கல்யாண ராணி’! இன்னும் 4 குரூப்.. அதிர வைத்த வாக்குமூலம்! 90’ஸ் கிட்ஸ் தான் குறி! 6 பேரை கவிழ்த்த 'கல்யாண ராணி’! இன்னும் 4 குரூப்.. அதிர வைத்த வாக்குமூலம்!

கோவை பெட்ரோல் குண்டு

கோவை பெட்ரோல் குண்டு

இந்நிலையில், கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,"கோவை மாநகரில் வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் கடந்த 22"ம் தேதியன்று இரவு எரிபொருள் பாட்டில் எரிந்த சம்பவத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா

பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா


3 தனிப்படைகள் அமைத்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 100"க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு, தொழில்நுட்ப அடிப்படையிலான விசாரணை, சாட்சி விசாரணை அடிப்படையி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அடிப்படையில் சதாம் உசைன் (31) என்ற துடியலூர் பகுதியை சேர்ந்த பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒருவர் கைது

ஒருவர் கைது

இவ்வழக்கில் தொடர்புடைய இன்னொருவர் தலைமறைவாக உள்ளார். அவரை தேடிக் கொண்டுள்ளோம். சதாம் உசைன் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார். இருவரும் எப்படி திட்டம் தீட்டினார்கள் என்ற கோணத்திலும், வேறு யாராவது சம்மந்தப்பட்டு இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு சட்டம்?

தேசிய பாதுகாப்பு சட்டம்?

சதாம் உசைன் மீது மேலும் சில வழக்குகள் உள்ளது. அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். காந்திபுரம் பகுதியில் நடந்த வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 3 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்களா என்பதை இப்போது சொல்ல முடியாது எனத் தெரிவித்தார்.

English summary
Coimbatore Police Commissioner Balakrishnan has said that while one person has been arrested in connection with the petrol bomb attack on the BJP office in Coimbatore, another is absconding.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X