கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித் ஷா வர நேரம் பார்த்து.. அடுத்தடுத்து இப்படி நடக்குதே! திமுகவின் மெகா மூவ்.. சலசலத்த "கமலாலயம்"

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா கோவைக்கு வர உள்ள நிலையில் பாஜகவில் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்கள் அக்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு வருகைக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பாஜக தரப்பு தீவிரமாக செய்து வருகிறது.

அமித் ஷா வரும் 29ம் தேதி கோவை வருகிறார். பாஜக அலுவலகங்களை அவர் திறக்க வருவதாக சொல்லப்படுகிறது.

இவர் முழுக்க முழுக்க கட்சி ரீதியான பணிகளை செய்ய, கட்சி ரீதியான ஆலோசனைகளை மேற்கொள்ள இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.

ஹரியானா பாஜக பிரமுகர் சோனாலி போகத் கொலை- உதவியாளர்கள் 2 பேரை கைது செய்த கோவா போலீஸ் ஹரியானா பாஜக பிரமுகர் சோனாலி போகத் கொலை- உதவியாளர்கள் 2 பேரை கைது செய்த கோவா போலீஸ்

ஏன் இப்படி

ஏன் இப்படி

முழுக்க முழுக்க கட்சி ரீதியான பயணம் என்றால்.. இவரை சந்திக்க வேறு எந்த கட்சிக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. அதிமுக தரப்பினர் சிலர் அமித் ஷாவை சந்திக்க இந்த பயணத்தில் நேரம் கேட்டு இருந்தனர். ஆனால் இது பாஜக கட்சி தொடர்பான பயணம். அதனால் சந்திக்க முடியாது என்று அமித் ஷா தரப்பு கூறிவிட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பில் அமித் ஷா முக்கியமான சில ஆலோசனைகளை செய்ய உள்ளார். பாஜக அலுவலகங்களை அவர் திறக்க வருவதாக சொல்லப்படுகிறது.

 ஆலோசனை

ஆலோசனை

திருச்சி, விழுப்புரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக மாவட்ட அலுவலகங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதில் கோவை அலுவலகத்தை அவர் நேரில் திறக்க உள்ளார். மீதம் உள்ள அலுவலகங்களை கோவையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க இருக்கிறார். இது போக கோவையில் பாஜகவின் டாப் தலைகளுடன் அமித் ஷா ஆலோசனை செய்ய உள்ளார். 2024 லோக்சபா தேர்தல்தான் இந்த பயணத்தின் முக்கியமான நோக்கம்.

பயணம் நோக்கம்

பயணம் நோக்கம்

2024 லோக்சபா தேர்தலுக்கு எப்படி திட்டமிடலாம், எப்படி கூட்டணி அமைக்கலாம், அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாமா என்ற ஆலோசனைகளை செய்ய உள்ளனர். இந்த பயணத்திற்கு அமித் ஷாவின் கோபமும் ஒரு காரணம் என்கிறார்கள். தமிழ்நாட்டில் பூத் வாரியாக பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்று அமித் ஷா கடந்த பயணத்தின் போதே கட்டளை போட்டு இருந்தார். ஆனால் இன்னும் பூத் வாரியாக பாஜகவிற்கு ஆள் பிடிக்க முடியவில்லை. பாஜக இதில் இன்னும் பின்னடைவை சந்தித்தே வருகிறது.

பூத்

பூத்

பாஜகவிற்கு பல பூத்களில் ஆட்களே இல்லை. இதனால் அமித் ஷா தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மீது அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இது போக தமிழ்நாடு பாஜகவும் சில முக்கியமான விஷயங்கள் பற்றி அமித் ஷாவிடம் விளக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சமீபத்தில் மாற்று கட்சியினர் 55 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர். முதல்வரின் கோவை பயணத்தில் இந்த இணைப்பு சாத்தியமானது. இதுதான் பாஜகவை அப்செட்டாக்கி உள்ளது.

 கோவை

கோவை

பாஜகவை சேர்ந்த மைதிலி வினோ உட்பட பலர் திமுகவில் இணைந்தார். அதிலும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த கணிசமான பாஜக நிர்வாகிகள் திமுக பக்கம் சாய்ந்தனர். கொங்கில் வேகமாக வளர வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு வருகிறது. அப்படி இருக்கும் போது இப்படி திமுக மெகா கூட்டத்தை நடத்தி ஆட்களை தட்டி தூக்கி உள்ளது. இது கொங்கு மண்டலத்தில் வளர நினைக்கும் பாஜகவிற்கு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.

திமுக

திமுக

அதோடு சமீபத்தில் பாஜக சரவணன் கட்சியில் இருந்து வெளியேறினார். அதோடு பாஜக நிர்வாகிகள் பலர் வேறு வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். இப்படி தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள் பற்றிய ரிப்போர்ட் அமித் ஷாவிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதை பற்றி அமித் ஷா தமிழ்நாடு வருகையின் போது விசாரிப்பார் என்கிறார்கள். முக்கியமாக செந்தில் பாலாஜி மற்றும் அவரின் அரசியல் வியூகங்கள் பற்றி அமித் ஷா ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Series of misfortunate events for BJP including DMK meeting amid Amit Shah Coimbatore visit / பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா கோவைக்கு வர உள்ள நிலையில் பாஜகவில் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்கள் அக்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X