தவெக போனவங்க எல்லாம் திரும்பி அதிமுக வராங்க.. பரபரப்பை பற்ற வைத்த வேலுமணி.. அதிர்ச்சியில் விஜய்
கோவை: சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து எப்படியாவது ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரத்தில் திமுகவின் அதிரடி மூவ்களாலும், உள்கட்சி பிரச்சனைகளாலும் நெருக்கடிக்குள்ளாகி வருகிறார்கள். அதிமுகவில் உள்ள பல நிர்வாகிகள் திமுக மற்றும் தவெக கட்சிகளுக்கு மாறி வருகிறார்கள். இந்நிலையில் தவெக சென்றவர்களுக்கு அங்கு உரிய மரியாதை இல்லாததால் மீண்டும் அதிமுக வர தயாராக இருப்பதாக எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார் [SP Velumani].
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 4 முனை போட்டியால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது [SP Velumani].

தவெகவுக்கு தாவும் திமுக
தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் திமுக மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு மாறி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து, முன்னாள் சபாநாயகர் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் சமீபத்தில் தவெக வில் இணைந்தார். இது கொங்கு மண்டல அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "எந்த காலத்திலும் திமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம். திமுக மட்டுமல்ல புதிய கட்சிகளையும் சேர்த்துதான் சொல்கிறேன். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். பயங்கரமாக பேசுகிறார். அவர் தான் பெரிய தலைவர் போல பேசுகிறார். அவ்வபோது வருகிறார். வந்து பேசிவிட்டு வீட்டிற்கு செல்கிறார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதை தப்பு சொல்லவில்லை.
தலைவர் எப்படி இருக்கணும்
எல்லோருக்கும் ஆசை இருக்கும். அந்த ஆசைக்கு நியாயம் இருக்க வேண்டும். ஒரு தலைவர் எப்பிட இருக்க வேண்டும். எம்ஜிஆர் எப்படி செயல்பட்டார் என எல்லோருக்கும் தெரியும். அவர் ஒரு நடிகராக மட்டும் செயல்படவில்லை. மக்கள் நலனில் அக்கறை எடுத்து செயல்பட்டு, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியதால் அவர் மகத்தான தலைவராக மாறினார்.
அப்போது திமுக ஆட்சிக்கு வருவதற்கே எம்ஜிஆர் தான் காரணம். கரூரில் அவரை பார்க்க வந்த அப்பாவி மக்கள், கட்சிக்காரர்கள் 43 பேர் உயிரிழந்தனர். அவர்களை கூட பார்க்காமல் விஜய் வீட்டிற்கு சென்றார். ஒவ்வொரு குடும்பத்தில் வாரிசுகள் கூட இல்லாமல் போய்விட்டனர். அதை கூட பார்க்காமல் ஓடிப்போனவர் விஜய். அவர் திரும்பி வரவே இல்லை. என்னவாக இருந்தாலும் அவர்களை நின்று காப்பாற்றியிருக்க வேண்டாமா.
கட்சி மாறியவர்கள் அதிருப்தி
உயிருக்கு போராடுபவர்களையும், உயிரிழந்தோரின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூற வேண்டுமல்லவா. அவரின் செயல்பாட்டை எப்படி ஏற்க முடியும். எனக்கு விஜய் நண்பர். அது வேறு. பொது வாழ்விற்கு வரும்போது மக்களுக்காக செயல்படுபவர் தான் தலைவராக இருக்க முடியும். மக்கள் யாருக்கு வாக்களித்தாலும் செல்லாத ஓட்டாக மாறிவிடும். எங்களுக்கு மட்டுமே வாக்களியுங்கள்.
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்களுக்கு அங்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே பதவியும், மரியாதையும் வழங்கினால் அவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வர தயாராக உள்ளனர். அதிமுகவில் கிடைக்கும் மரியாதை வேறு எங்கும் கிடைக்காது. கட்சி மாறுவதற்கு முன்பு இதை யோசிக்க வேண்டும்" என்றார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்!












Click it and Unblock the Notifications