கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தர்மசங்கட திமுக".. ஸ்விக்கி ஊழியர் கன்னத்தில்.. வெளியான வீடியோ.. கோவை போலீசுக்கு வந்த சிக்கல்

ஸ்விக்கி டெலிவரி பாயின் கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர் மீது புகார் தரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

கோவை: போலீஸ்காரர் ஒருவர், ஸ்விக்கி டெலிவரி பாயின் கன்னத்தில் அறைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி வருகிறது.

Recommended Video

    ஸ்விக்கி ஊழியர் கன்னத்தில்.. கோவை போலீசுக்கு வந்த சிக்கல் - வீடியோ

    நடந்த சம்பவம் என்ன?

    கோயம்புத்தூர் மாவட்டம் நீலம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம்... இவர் ஸ்விக்கி என்ற தனியார் உணவு டெலிவரி ஆபீசில் டெலிவரி பாய் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று மாலை ப்ரூக் பாண்ட் சாலையில் வந்து கொண்டிருந்தார்.. அப்போது, இந்த ஊழியரை, அங்கிருந்த டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், பளார் என கன்னத்தில் அறைந்தார்.. பிறகு சரமாரியாக தாக்கியும் உள்ளார்.

    ஸ்விக்கி, சொமேட்டோவுக்கு 'செக்’ - பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை- அதிர்ச்சி கொடுத்த போக்குவரத்து துறை! ஸ்விக்கி, சொமேட்டோவுக்கு 'செக்’ - பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை- அதிர்ச்சி கொடுத்த போக்குவரத்து துறை!

     சோஷியல் மீடியா

    சோஷியல் மீடியா

    இதை ரோட்டில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. உடனே தங்கள் கேமராவில் இதை வீடியோ எடுத்து அதை சோஷியல் மீடியாவிலும் போட்டுவிட்டனர். அந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது... இதற்கு பிறகு, போலீசாரிடம் அடிவாங்கிய அந்த ஊழியர் மோகனசுந்தரம், கலெக்டர் ஆபீசில் இது தொடர்பாக புகார் கொடுக்க வந்திருந்தார்.. அவரை பார்த்ததுமே அங்கிருந்த செய்தியாளர்கள் சுற்றிக் கொண்டனர்.. எதற்காக, அந்த அதிகாரி உங்களை தாக்கினார் என்று கேள்வி எழுப்பினார்கள்.

     கன்னத்தில் பளார்

    கன்னத்தில் பளார்

    அதற்கு மோகனசுந்தரம், "நான் அந்த வழியாக போய்க் கொண்டிருந்தேன்.. அப்போது, தனியார் பள்ளி வாகனம் ஒன்று, ரோட்டில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது இடித்து விபத்து ஏற்படுத்திவிட்டு சென்றது.. இதை எல்லாருமே பார்த்தார்களே தவிர, ஒருத்தரும் தட்டிக் கேட்கவில்லை.. அதனால், நான் அந்த பள்ளி வாகனத்தை விரட்டிச் சென்று தட்டிக்கேட்டேன். இதை பார்த்த அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், என்னை இழுத்து பிடித்து கன்னத்தில் அறைந்துவிட்டார். நடந்த சம்பவத்தை அவர்களிடம் தெளிவாக நான் எடுத்து சொன்னேன்..

     ஸ்கூல் வேன்

    ஸ்கூல் வேன்

    ஆனாலும், அவர்கள் நான் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.. 'இதெல்லாம் தட்டிக் கேட்க நீ யார்? அவங்களை நீ ஏன் விரட்டிட்டு போனே? அதுக்குதான் நாங்க இருக்கோமே என்று கேட்டு என்னை சரமாரியாக அடித்தார்கள்.. நான் அந்த ஸ்கூல் வேன் பின்னாடியே விரட்டிட்டு போய், விபத்து ஏற்படுத்திய டிரைவரை கஷ்டப்பட்டு பிடித்து கொண்டு வந்து ஒப்படைத்தேன்.. ஆனால், அந்த டிரைவரை எந்த கேள்வியும் கேட்காமல், டிராபிக் இன்ஸ்பெக்டர் திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்" என்றார்.

     கலெக்டரிடம் புகார்

    கலெக்டரிடம் புகார்

    இது தொடர்பாக மனு தரப்பட்டுள்ள நிலையில், கலெக்டர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்று தெரியவில்லை.. அதேசமயம், இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டு வருகிறது.. முதல்வரின் கீழ் இயங்கி வருகிறது காவல்துறை.. அதுமட்டுமல்லாமல், "காவல்துறை உங்கள் நண்பன்" என்ற வாசகத்துடன் மக்களிடம் நெருங்கி உள்ளது.. விபத்தை ஏற்படுத்திய குற்றவாளியை பிடிக்க உதவி செய்த ஊழியரை தாக்குவது எந்த வகை நியாயம்? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. ஏற்கனவே, சட்டம் ஒழுங்கு சரியில்லை, திமுகவை பார்த்தாலே பயமா இருக்கு? என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார்..

     எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    போதாக்குறைக்கு லாக்கப் மரணங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.. இப்படி காவல்துறையில் உள்ள ஒருசிலரால், அடுத்தடுத்த தர்மசங்கடங்கள் திமுக அரசுக்கு ஏற்பட்டு வருகிறது.. ஊழியர் மோகனசுந்தரத்தின் துணிச்சலை கேள்விப்பட்டால் முதல்வரே பாராட்டுவார்.. காரணம், தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகள் தேவை இல்லை என்று ஏற்கனவே கறாராக சொல்லி உள்ளார்... அதுமட்டுமல்ல, கன்னத்தில் அறைந்துவிட்டு, மோகனசுந்தரத்தின் செல்போனையும் இன்ஸ்பெக்டர் பறிப்பது சரியல்ல? அதைவிட முக்கியமாக, "எளியவர்களை" அடிக்கும் இந்த போக்கு மாற வேண்டும்.. இது கிட்டத்தட்ட வழிபறிக்கு சமம் என்பதையும் நாம் இங்கு சொல்ல வேண்டி உள்ளது.

    English summary
    swiggy employee complaint against traffic inspector and what happened in coimbatore ஸ்விக்கி டெலிவரி பாயின் கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர் மீது புகார் தரப்பட்டுள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X