கோவை மேட்டுப்பாளையம் சாலையில் நடக்கும் சூப்பர் மாற்றம்.. அடுத்த 90 நாளைக்கு இது தான் புதிய ரூட்
கோவை: கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனியில் அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக்கம்பெனி வரை 1 கி.மீ. தூரத்துக்கு ரூ.75 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேம்பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி, தாங்கு தூண்கள் அமைப்பது உள்பட பல்வேறு பணி விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் நேற்று முதல் அடுத்த 90 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனியில் அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக்கம்பெனி வரை 1 கி.மீ. தூரத்துக்கு ரூ.75 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தூண்கள் அமைக்கும் பணி, தாங்கு தூண்கள் அமைப்பது உள்பட பல்வேறு பணிகள் என சுமார் 75 சதவீத பணிகள் நடந்து முடிந்துவிட்டன. இப்போது பாலத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

பாலத்தை விரைந்துமுடிக்கும் விதமாக பணிகள் நடைபெற உள்ளது. குறிப்பாக சாய்பாபா காலனியில் அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக்கம்பெனி வரை மின்சார கம்பிகளை மாற்றி அமைப்பது உள்பட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. எனவே நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் 90 நாட்களுக்கு மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில்,"காந்திபுரம், பூமார்க்கெட், வடகோவை, மேட்டுப்பாளையம் சாலை வழியாக செல்லும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து கனரக வாகனங்களும் வடகோவை அவினாசிலிங்கம் கல்லூரியில் இருந்து இடதுபுறம் திரும்பி, பாரதி பார்க் ரோடு வழியாக சென்று ஜி.சி.டி. கல்லூரி ரவுண்டானாவில் வலதுபுறம் திரும்பி தடாகம் சாலை வழியாக, வெங்கிட்டாபுரம், கோவில்மேடு, இடையர்பாளையம் சென்று, அங்கிருந்து கவுண்டம்பாளையம் சாலையை அடைந்து துடியலூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம். கவுண்டம்பாளையம் வழியாக கோவை மாநகருக்குள் வரும் அனைத்து இலகுரக மற்றும் கனரக வாகனங்களும் வழக்கம் போல் வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது. காந்திபுரம், அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள் நல்லாம்பாளையம் வழியாக கணபதியை அடைந்து காந்திபுரம் வழியாக செல்லலாம்.
சங்கனூர் சந்திப்பில் இருந்தும் இடதுபுறம் திரும்பி கண்ணப்ப நகர் புதுப்பாலம் வழியாக சிவானந்தா காலனியை அடைந்து காந்திபுரம் செல்லலாம்.காந்திபுரம் சிவானந்தா காலனியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் ஏ.ஆர்.சி. சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கங்கா மருத்துவமனை, அழகேசன் ரோடு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகேசன் ரோடு வழியாக தடாகம் சாலையை அடைந்து வெங்கிட்டாபுரம், கோவில்மேடு, இடையர்பாளையம் வழியாக செல்லலாம்.
என்.எஸ்.ஆர். ரோடு வழியாக மாநகருக்குள் வரும் பஸ்கள் உள்பட அனைத்து கனரக வாகனங்களும் என்.எஸ்.ஆர். ரோடு, ஸ்டேட் பேங்க் சந்திப்பில் வலது புறம் திரும்பி, ராஜா அண்ணாமலை ரோடு வழியாக பாரதி பார்க் ரோடு சென்று இடதுபுறம் திரும்பி அவினாசிலிங்கம் கல்லூரி சந்திப்பு வழியாக மேடடுப்பாளையம் சாலையை அடையலாம். இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" இவ்வாறு கோவை மாநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications