கொளுத்தி போட்ட டிரம்ப்.. வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்த காங்கிரஸ் - வானதி குற்றச்சாட்டு
கோவை: அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்த காலகட்டத்தில் இந்திய தேர்தலுக்காக அமெரிக்க அரசு நிதி 182 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அரசை வீழ்த்த வெளிநாட்டு சக்திகளுடன் காங்கிரஸ் கைகோர்த்ததாகவும், ராகுல் காந்தி கூட்டத்தை இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்குத் தொகு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது: அமெரிக்காவின் மயாமி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், "அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்த காலகட்டத்தில், இந்திய தேர்தலுக்காக அமெரிக்க அரசு நிதி 182 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு யாரையோ வெற்றிபெற வைக்க பைடன் அரசு முயற்சி செய்துள்ளது" என பேசியிருக்கிறார்.

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் முன்பாக, நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பு, வெளிநாடுகளில் இருந்து ஏதாவது ஒரு பெரிய பிரச்னையை கிளப்புவார்கள். ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனம், இந்தியாவைப் பற்றி, இந்திய நிறுவனங்களைப் பற்றி ஆய்வறிக்கை வெளிடுவார்கள். அதை வைத்துக் கொண்டு காங்கிரஸும், அதன் கூட்டணி கட்சிகளும் நாடாளுமன்றத்தை முடக்குவார்கள்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, தலைவராக இல்லாமல் காங்கிரஸை வழிநடத்தி கொண்டிருக்கும், இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார். லண்டன் உள்ளிட்ட நகரங்களில் அவர் பேசும்போது, இந்தியாவைப் பற்றிய, பிரதமர் நரேந்திர மோடி அரசைப் பற்றி தவறான தகவல்களை பேசினார். இந்தியா விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்றும் பேசினார்.
இந்தியாவில் அரசியல் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி, இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க, அமெரிக்க பெரும் பணக்காரர் ஜார்ஜ் சோரஸ் பெருமளவில் நிதியளித்து வந்தார்.
இந்தச் சூழலில்தான், இந்தியாவில் வேறு யாரையோ ஆட்சியில் அமர்த்த அமெரிக்க அரசு நிதி 182 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபரே கூறியிருக்கிறார். இதன் மூலம், பிரதமர் மோடியை தோற்கடிக்க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமெரிக்க உதவியை நாடியிருப்பது அம்பலமாகியுள்ளது.
மக்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற முடியாமல், வெளிநாட்டு சக்திகளோடு சேர்ந்து சதித்திட்டம் தீட்டியிருக்கிறது காங்கிரஸ். இதை இந்திய மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தேச விரோத சக்திகள் ஒவ்வொருவராக அம்பலமாகி வருகிறார்கள். மக்கள் மன்றத்தில் அவர்களுக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications