கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவையில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்! திடீரென ஸ்பாட்டுக்கு சென்ற வானதி.. ஏன் என்னாச்சு?

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக மகளிரணி தேசிய தலைவியுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டுள்ளார்.

மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்டவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் திமுக அரசு கோவையை புறக்கணிப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் துவங்கிய தேரோட்டம்.. ‛‛அரோகரா’’ கோஷம்.. பக்தர்கள் பரவசம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் துவங்கிய தேரோட்டம்.. ‛‛அரோகரா’’ கோஷம்.. பக்தர்கள் பரவசம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டம் நடந்த போது அங்கு திடீரென கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனும் வந்திருந்தார். அவர் அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அவர் பேசுகையில் திமுக நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றி வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என தெரிந்தும் பொய்யான வாக்குறுதிகளை திமுக கொடுத்துள்ளது.

நீட் தேர்வு

நீட் தேர்வு

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய் கூறி நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் கோவையில் முக்கிய சாலைகள், பாலங்களின் நிலை மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமாகிக் கொண்டுள்ளது.

சாலைகளை சரி செய்ய கோரிக்கை

சாலைகளை சரி செய்ய கோரிக்கை

இந்த சாலைகளை சரி செய்ய கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அந்த சாலைகளில் கர்ப்பணிகளும் வயதானவர்களும் பயணிப்பதே கடினமாக உள்ளது. மேலும் இனி வரும் மழைக்காலங்களில் இந்த குண்டு குழிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு மேலும் தகுதியற்றதாக மாறிவிடும் என வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்து பேசினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் வானதி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார். இது போல் சட்டசபை கூட்டத் தொடர்களிலும் இரு கட்சிகளும் பரஸ்பரம் ஆதரவு தெரிவித்து தமிழக அரசை கண்டித்து வெளிநடப்பு செய்து வருவதையும் பார்த்துள்ளோம். தற்போது அதே ஒற்றுமையுடன் இருப்பதை வெளிக்காட்டும் விதமாக அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு வானதி சென்றுள்ளார். மேலும் தான் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஆர் பி உதயகுமார் ஆகியோருக்கு நடுவே அமர்ந்துள்ள படத்தை வெளியிட்டு அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக ஆதரவு அளித்ததையும் வானதி சுட்டிக் காட்டியுள்ளார்.

English summary
BJP MLA Vanathi Srinivasan supported AIADMK Protest against Tamilnadu government in Coimbatore. She also raised Neet exemption promise in DMK election manifesto.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X