இந்த மாதிரி பேசாதீங்க.. அண்ணாமலையை சீண்டிய செல்லூர் ராஜு பேச்சு குறித்து வானதி சீனிவாசன் ஆதங்கம்!
கோவை: பாஜக மாநிலத் தலைவருக்கு, அதிமுக தலைவர்கள் தரும் மரியாதை தனி நபருக்கானது அல்ல என்பதை செல்லூர் ராஜூ போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கூட்டணியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அண்ணாமலையை விமர்சித்துப் பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையை பொறுத்தவரை பாஜகவின் மாநில தலைவர். ஜஸ்ட் லைக் அவ்வளவு தான். எங்களுக்கு மோடி ஜி, அமித் ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். அதனால் தான் 38 கட்சிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் மோடி. மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை? எனப் பேசியிருந்தார் செல்லூர் ராஜூ.

இது பாஜகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாகப் பேசிய அண்ணாமலை, யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது. மேலும் நாங்கள் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என பதில் கொடுத்தார். இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், அதிமுகவினர் கூட்டணியை பாதிக்கும் வகையில் பேசக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வானதி சீனிவாசன், "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதனால் கூட்டணியை பாதுகாக்க வேண்டிய கடமை, பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அதிமுக தலைவர்களின் கருத்துக்களால் குழப்பம் ஏற்பட வேண்டாம்.
பாஜக கூட்டணியை உருவாக்கியுள்ளது. பாஜக மாநிலத் தலைவருக்கு, அதிமுக தலைவர்கள் தரும் மரியாதை தனி நபருக்கானது அல்ல என்பதை செல்லூர் ராஜூ போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கூட்டணியை பாதிக்கும் கருத்துக்களைத் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம் மிக்கதாக உள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications