திருமாவளவனுக்கு சேலை கட்டும் போராட்டம்.. சர்ச்சையை கிளப்பும் வேலூர் இப்ராகிம்
கோவை: இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடையில் மத வெறியை தூண்டும் வகையில், திருமாவளவன் செயல்பட்டால் அவருக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும் என சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுர் இப்ராஹிம் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் என்ற அமைப்பை நடத்தி வரும் சையது இப்ராகிம் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். சிஏஏ சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கூறிவரும் நிலையில் இவர் பாதிப்பு இல்லை என்று கூறினார்.
இப்ராஹிம், தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். மேல்ம் டிவி விவாத நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போவது கலந்து கொண்டு பாஜகவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகிறார். மேலும் சில சர்ச்சைக கருத்துக்களை வெளியிட்டு சிக்கல்களில் சிக்குவதையும் வாடிக்கையாகக் கொண்டவர் இப்ராஹிம். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த வேலூர் இப்ராஹிமை பாஜக தேசிய சிறுபான்மைப்பிரிவு செயலாளராக நியமிக்கப்படுவதாக அதிரடி அறிவித்தது.

வேலூர் இப்ராஹிம் பேட்டி
அப்போது இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து வரும் அவர் பாஜக தொண்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போழுது பேசிய அவர், அனைவருக்கும் இனிய புத்தாண்டு, மற்றும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

ஏவல்துறையாக காவல்துறை
காவல்துறையை திமுக தலைமையிலான தமிழக அரசு ஏவல் துறையாக கையாண்டு வருகின்றது என்றும் திமுக அரசை குற்றம் சாட்டிய அவர், தமிழக முதல்வர் சட்ட ஒழுங்குக்கு விரோதமாக பேசுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதை விட்டுவிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றது எனவும், இதனை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

திமுக அரசுக்கு பயம்
பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்வது, நிர்வாகிகளை கைது செய்வதை திமுக தலைமையிலான அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் விரைவில் தமிழகம் தழுவிய போரட்டம் நடத்தப்படும் எனவும், அதிமுக கட்சியினர் மீதும் முன்னாள்ன் அதிமுக அமைச்சர்கள் மீதும் துரத்தி, துரத்தி, வழக்கு பதிவு செய்வது, திமுக அரசின் பயத்தை வெளிபடுத்துகின்றதாக தெரிவித்தார்.

சேலை கட்டும் போராட்டம்
விடுதலைப் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், வேண்டுமென்றே இந்துக்களையும், இஸ்லாமியர்களுக்கும் மதவாத தூண்டுதலை ஏற்படுத்தி வருகினற்தாக, இதனை அவர் மீண்டும் மீண்டும் செய்வதை, தொடர்ந்தால் அவருக்கு சேலை உடுத்தும் போராட்டம் நடத்தவும் பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாகவும் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுர் இப்ராஹிம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக்












Click it and Unblock the Notifications