உன் புருஷனை தூக்கறேன்.. கேஸ் வாபஸ் வாங்கிட்டு ஓடிடு.. பெண்ணை மிரட்டும் பார் நாகராஜ் ஆடியோ
பார் நாகராஜ் ஒரு பெண்ணை மிரட்டும் ஆடியோ வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி: "இந்த நாகராஜ் யார்னு தெரியும் இல்லை? உன் புருஷன் எங்கே வந்தாலும் தூக்குவேன். உன் குடும்பத்தையும் தூக்குகிறேன்.. கேஸை வாபஸ் வாங்கு.. இல்லாட்டி உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என்று பார் நாகராஜ் ஒரு பெண்ணிடம் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி சம்பவத்தில் ஏராளமான இளம்பெண்களை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததாக 5 பேர் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டனர். சிறையில் உள்ள அவர்களிடம் விசாரணையும் நடந்து வருகிறது.

பெண்களை மிரட்டி வீடியோ எடுத்தது தொடர்பாக, புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை அதிமுக பிரமுகர் பார் நாகராஜ் தாக்கியதாக சொல்லப்பட்டது. இதையடுத்து பார் நாகராஜ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு இப்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பார் நாகராஜ், ஒரு பெண்ணை மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. செல்போனில் பேசும் பார் நாகராஜ், வழக்கை வாபஸ் வாங்குமாறு அந்த பெண்ணை மிரட்டும் ஆடியோதான் அது. அதில் உள்ள விவரம் இதுதான்:
நாகராஜ்: ஹலோ என்னமா என்ன பண்ணிட்டு இருக்க பொள்ளாச்சியிலிருந்து பேசுறேன் யாருன்னு தெரியுதா? பார் நாகராஜ்ன்னா எல்லாருக்கும் தெரியும். என் பேரை சொல்லிதான் உன்கிட்ட பேசணுமா? பொள்ளாச்சி சம்பத், கோகிலா பேரில் கொடுத்த கேஸை உடனே வாபஸ் வாங்கிட்டு, நீ எடுத்த வீடியோவை 'டெலிட்' பண்ணு. சும்மா வச்சுக்கிட்டு சீன்லாம் காட்டாத..
பெண்: நான் ஒன்னும் வீடியோ எடுக்கவில்லையே. கேஸ் வாபஸ் வாங்கவும் முடியாது.
நாகராஜ்: உன் புருஷன் எங்கே வந்தாலும் நான் தூக்குவேன். திருச்சி வந்தாலும் சரி, சென்னை வந்தாலும் சரி எங்கே வந்தாலுமே அவனை நான் தூக்குறேன் உங்கள் குடும்பத்தையும் தூக்குகிறேன். எங்கே போனாலும் என்னை ஒன்னும் செய்யாது. கேஸ் வாபஸ் வாங்கிட்டு ஓடிடு.. நான் ஏற்கனவே பல டென்ஷன்ல இருக்கேன் உனக்கு டைம் சரி இல்ல, நான் என்ன பண்ணுவேன் ஏது பண்ணுவேன் என்று எனக்கு தெரியாது.
பெண்: வாபஸ் வாங்க மாட்டோம், நீ என்ன செய்வே, அதையும் பாக்கலாம்.
இப்படி அந்த ஆடியோவில் பேசப்பட்டுள்ளது. இதேபோல 2 ஆடியோவும் வெளியாகி உள்ளதாம். ஆனால் அந்த ஆடியோவில் பேசியது தான் இல்லை என்று பார் நாகராஜ் சொல்லி உள்ளார். இது சம்பந்தமாக புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications