இலங்கை பொருளாதார நெருக்கடி.. தமிழர்கள் நலன் காக்கப்படும்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி
கோவை: உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் தமிழர் நலம் காக்கப்படும் என சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதியளித்துள்ளார்.
Recommended Video
கோவை சாய்பாபா காலனி அருகிலுள்ள கே.கே புதூரில் பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில், அதன் தலைவர் ஹாஜி முஹம்மது ரபீக் தலைமையில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் மஸ்தான் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், சலவை இயந்திரம், புடவை, உதவித்தொகை உள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இலங்கை அகதிகளுக்கு பாதுகாப்பு
விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், "இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த இலங்கையை சேர்ந்த 17 பேருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முடிவை பொறுத்து இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் நலன் குறித்து தமிழ்நாடு முடிவெடுக்கும்

எல்லாம் தமிழக அரசின் செலவு
ரஷ்யாவின் தாக்குதலின்போது உக்ரைனில் சிக்கித் தவித்த மாணவர்களை தமிழ்நாடு அழைத்து வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். அதன் அடிப்படையில் அவர்களை அழைத்து வருவதற்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்று மாணவர்கள் தமிழ்நாடு அழைத்து வரப்பட்டனர். இதன் மூலம் 1,980 தமிழக மாணவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் உக்ரைனிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மருத்துவப்படிப்பை தொடர நடவடிக்கை
ஒரு சில மாணவர்கள் தாங்களாகவே வந்தனர். சிலர் விருப்பத்தின்பேரில் அங்கேயே தங்கி விட்டனர். உக்ரைனில் இருந்து தமிழகத்துக்கு தப்பி வந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பை தொடர்ந்து மேற்கொள்ள மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருகிறது. உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் தமிழர் நலனை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

தமிழ்நாடு அரசே கூடுதல் நடவடிக்கை எடுத்தது
உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசை விட கூடுதல் கவனத்துடன் தமிழக அரசு செயல்பட்டது. அரசின் புறம்போக்கு நிலங்களில் தகுதி வாய்ந்த வீடில்லா ஏழைகளுக்கு வீடு தேவைப்பட்டால் வழங்க வேண்டும் முதலமைச்சர் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார். அந்த செயல்படுத்த திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள். இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் சமீரன்,மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications