Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொஞ்சம் கொஞ்சமா அந்த விஷயத்தையும் பேச வச்சிட்டீங்களே? - லீக்கான ஆசிரியர் -மாணவி வாட்ஸ்ஆப் சாட்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். . இதற்கிடையில், குற்றம்சாட்டப்படும் ஆசிரியர் மிதுன் மீது அதே பள்ளியில் படிக்கும் மாணவிகள் இன்னும் சிலர் புகார் எழுப்பி இருந்ததாக கூறப்படுகிறது.

கோவையை சேர்ந்த 17 வயது மாணவி, 11 ம் வகுப்பு வரை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.

ஆனால், அந்த ஸ்கூலில் தனக்கு படிக்க விருப்பமில்லை என்று சொன்னதால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் அம்மணியம்மாள் என்ற பள்ளிக்கு மாறினார். அந்த பள்ளியில் 12 ம் வகுப்பு சேர்ந்து படித்து வந்தார்.

தற்கொலை

தற்கொலை

இந்நிலையில் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார்.. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்ட மாணவி, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... வெளியே சென்றிருந்த பெற்றோர், வீட்டிற்கு திரும்பி வந்தபோது, கதவு உட்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது... நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

அப்போது, தங்கள் மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அலறினர்.. இது குறித்து உக்கடம் போலீசாருக்கு மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.. அந்த புகாரின் பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விரைந்து வந்து மாணவியின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மாணவிக்கு பாலியல் தொல்லை இருந்து வந்தது தெரியவந்தது. ஏற்கனவே படித்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

புகார் வேண்டாம்

புகார் வேண்டாம்

இதுகுறித்து வீட்டிலும் மாணவி சொல்லி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.. ஆனால், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என்பதால், அப்படியே மூடி மறைத்து விட்டதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல, பெற்றோரிடமும் இதை பற்றி வெளியே சொல்ல வேண்டாம் என்று அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர் கேட்டுக் கொண்டாராம். இதனிடையே ஆசிரியர் மிதுன் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததால், அந்த மாணவி பள்ளியை விட்டு வெளியேறி, அதே பகுதியில் உள்ள வேறு ஒரு அரசுப் பள்ளியில் சேர்ந்தார்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

இந்த நிலையில், பள்ளி மாணவி கடிதம் எழுதிவைத்து விட்டு, திடீரென தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பி வந்தாராம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்.. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒருநாள், மாணவியை ஸ்கூல் ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி, மேல் ஆடையை கழற்றி பாலியல் தொல்லையும் அளித்துள்ளதாகவும், இது குறித்தும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

உரிய விசாரணை

உரிய விசாரணை

இந்நிலையில், தற்கொலைக்கு முன்பு மாணவி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.. அதில் "யாரையும் சும்மா விடக்கூடாது.. ரீத்தா ஓட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார், யாரையும் விடக் கூடாது" என்று கைப்பட எழுதியுள்ளார்.. தங்கள் மகளுக்கு நேர்ந்த கொடுமை வேறு எந்த மாணவிக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று பெற்றோர்கள் கதறி அழுதனர். ஆறு மாதமாக இந்த டார்ச்சர் நடந்துள்ளதாக இப்போது தான் கூட படிக்கும் மாணவிகள் சொல்கிறார்கள். பஸ்ஸில் இடித்தால் பொறுத்து போகிறோம். இதை பெரிது படுத்த வேண்டாம் என்கிறார்கள் என்று மாணவியின் தாயார் கதறிஅழுதார்.

முற்றுகை போராட்டம்

முற்றுகை போராட்டம்

இதனிடையே இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டை வைக்கும் நிலையில் மாணவியின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு பள்ளியின் முன்புறம் அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் முற்றுகையில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக குறிப்பிட்ட ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

என்ன புகார்

என்ன புகார்

இதையடுத்து போலீஸார் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைந்திருக்கின்றனர். போலீஸார், மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையி கைது செய்துள்ளனர். இதற்கிடையில், குற்றம்சாட்டப்படும் ஆசிரியர் மிதுன் மீது அதே பள்ளியில் படிக்கும் மாணவிகள் இன்னும் சிலர் புகார் எழுப்பி இருந்ததாக கூறப்படுகிறது. மாணவிக்கு மிதுன் சக்கரவர்த்தி தொடர்ந்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி எழுதிய அந்த கடிதத்தையும், மாணவியின் செல்போனையும் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினார்கள். மாணவி யாரிடம் எல்லாம் பேசினார் என்று விசாரித்து வருகின்றனர். முக்கியமாக, மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும், ரித்துவின் தாத்தா, எலிசா சாருவின் அப்பா யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+