கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உச்சக்கட்ட பதற்றம்.. ஒருவர் பலி, பலர் படுகாயம்! இலங்கையில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை நாட்டில் அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டம் அதிகரித்து வரும் நிலையில், திடீரென அது வன்முறையாக மாறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அண்டை நாடான இலங்கையில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு, அந்நாட்டு அரசு எடுத்த தவறான முடிவுகள் உள்ளிட்ட காரணங்களால் அரசியல் அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து.

கத்தரி வெயில் நெருங்குகிறது.. அனல், பசி மயக்கத்திற்கு 3 பேர் சுருண்டு பலி.. கிலியை தரும் கத்தரி வெயில் நெருங்குகிறது.. அனல், பசி மயக்கத்திற்கு 3 பேர் சுருண்டு பலி.. கிலியை தரும்

கடந்த சில மாதங்களாகவே இலங்கை நாட்டில் இந்தப் பிரச்சினை தொடர்ச்சியாக நிலவி வந்தது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்தில் உள்ளது.

இலங்கை

இலங்கை

அதேபோல மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் மின் பற்றாக்குறையும் உச்சத்தில் உள்ளது. இதனால் பல மணி நேரம் வரை கூட மின்வெட்டு ஏற்படுகிறது. இந்தச் சூழலில் நிலைமையை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நாடுகளிடம் உதவி கோரி வருகிறது. இந்தியா ஏற்கனவே 1 பில்லியன் டாலர் கடனுதவியை அறிவித்து இருந்தது. அதேபோல 40 ஆயிரம் டன் டீசலையும் இந்தியா வழங்கியது. இருப்பினும், இலங்கையில் இன்னும் கூட நிலைமை சீரடைவில்லை.

 மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

அந்நாட்டு அரசின் மீது கடும் கோபத்தில் உள்ள மக்கள் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகல் பார்க்காமல் அதிபர் மாளிகை முன்பும், முக்கிய சாலைகளிலும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு புறம் தொடர்ந்து மோசமடையும் பொருளாதாரம் மறுபுறம் ஓயாமல் நடைபெறும் மக்கள் போராட்டம் என்று ஒட்டுமொத்த இலங்கையிலும் குழப்பமான ஒரு சூழலை ஏற்படுத்தி உள்ளது.

 திடீர் வன்முறை

திடீர் வன்முறை

தலைநகர் கொழும்பில் இருந்து 95 கிமீ தொலைவில் உள்ள ரம்புக்கனாவில் நெடுஞ்சாலையை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடு ரோட்டில் டயர்களை எரித்து பொதுமக்கள் கொழும்பு செல்லும் சாலைகளை முடக்கினர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தவர்கள், போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

 துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

இதையடுத்து நிலைமை கையை மீறிச் செல்வதைத் தடுக்கு போலீசார் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்த ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இலங்கை நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடங்கிய பின்னர், பொதுமக்களில் ஒருவர் போலீசாரால் கொல்லப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 போராட்டம்

போராட்டம்

1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்னர், இதுவரை சந்தித்திராத அளவுக்கு மோசமான பொருளாதார சிக்கலை இலங்கை எதிர்கொண்டு வருகிறது. இதையடுத்து இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கோரி பல வாரங்களாகப் போராட்டங்கள் இலங்கை முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தீர்ந்து போனதால் பல பகுதிகள் அப்படியே ஒட்டுமொத்தமாக ஸ்தமித்துள்ளது. நிலைமையை மேம்படுத்த அந்நாட்டின் நிதியமைச்சர் உதவி கேட்க இப்போது அமெரிக்கா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Amid Lankan economic crisis, One killed as Police open fire on protest: (இலங்கையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு) For the first time since anti-government protests started in Sri lanka, one killed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X